உங்கள் கருத்து

அறிவுப்புகள்

 

மீடியாக்கள்

புலம்பெயர் உறவுகளே இவர் யார் என்று தெரிகிறதா ? கண்கலங்க வைத்த துயர் உங்கள் பார்வைக்கு ,,வீடியோ, புகைப்படங்கள் இணைப்பு

புலம்பெயர் உறவுகளே இவர் யார் என்று தெரிகிறதா ??

 சாள்ஸ் அன்ரனி படை அணியில் பல களமாடி சாதித்தவன் . அன்று இவன் நமக்கு ஹீரோவாய் தெரிந்தான் .

இன்றோ நயினாதீவில் தெருவோட்டோடு பிச்சை எடுத்துக்கொண்டு நிற்கின்றான். இதை பார்த்ததும் என் நெஞ்சே வெடித்தது போல் இருந்தது .வரி உடுப்போடு ஏறெடுத்துப் பார்த்த உன்னை , பிச்சைக்காரன் கோலத்தில் பார்த்ததும் என் கண்கள் கலங்கிப் போயின .இந்த கொடுமையை நான் யாருடன் சொல்லி அழ!!

உறவுகளே!

திருவோடு கொடுத்த கொடுமை … முன்னாள் போராளிகள் பார்ப்பாரற்று நாதியற்றுத் திரிகிறார்கள்.

அவர்களுக்கு தோள் கொடுக்க யாருமற்ற நிலையில், அண்மையில் காலையடி இணைய உதவும் கரங்களின் நிர்வாகிகளில் ஒருவர் இவரின் இந்நிலை கண்டு இவருக்கு உதவ முன்வந்துள்ளார் . இவரால் எந்த தொழிலும் செய்ய முடியாத நிலைமையில் உள்ளார் , நான் நேரடியாக சந்தித்து உரையாடி நிலைமையை அறிந்தேன்,,

அவரிடம் கேட்டேன்; ஏன் உங்களுக்கு இந்த நிலைமை என்று ?அதற்கு ஒரு அசட்டுச்சிரிப்பு சிரித்தபடி அவர் சொன்ன பதில் இதுதான் , என் தேசத்தை ஈழத்தை விட இது ஒன்றும் பெரிய இழப்பாய் எனக்குத் தெரியவில்லை என்பது தான்.

நாங்கள் நின்மதியாக உறங்கவேணும் என்பதற்காக ,கண் விழித்து தேசத்தை காத்த இவருக்கு இன்று நாங்கள் கொடுத்த பரிசு வெறும் திருவோடு மட்டுமே , அன்புறவுகளே!!இவருக்கு உணவுக்கு நாளுக்கு 500 ரூபாய் வீதம் மாதந்தம்15000 ரூபாய் வழங்கி வரலாம்.

இவர் வாழ்நாள் வரை இதற்கு புலம்பெயர் உறவுகளும் சேர்ந்து கரம் கொடுத்தால் , இவருக்கு நிதி வழங்கும் போது சரியான ஆதாரங்களுடன் காலையடி இணையத்தில் வெளியிடப்படும் , உறவுடனும் உரிமையுடன் கேட்டுக்கொள்கின்றேன்,

நம்பிக்கை இருந்ததால் கரம் கொடுங்கள் இவருக்கு தோள் கொடுப்போம் ,,,,

தொடர்புகளுக்கு ,004797946854
viber 004797946854
messenger – pulaththil thamban

நம்பிக்கை இருந்ததால் கரம் கொடுங்கள் இவருக்கு தோள் கொடுப்போம் ,,,,

தொடர்புகளுக்கு ,004797946854
viber 004797946854
messenger – pulaththil thamban

 

3,580..views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

Browse நினைவஞ்சலி

மேலும் →

சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

 

உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.