உங்கள் கருத்து

அறிவுப்புகள்

 

மீடியாக்கள்

ஜ.நாவின் உத்தரவை மீறி அவுஸ்திரேலிய அரசால் நாடுகடத்தப்பட்ட ஈழத்தமிழன்!

அவுஸ்திரேலியாவில் அரசியல் தஞ்சம் கோரியிருந்த 30 வயதுடைய ஈழத் தமிழரான திலீபன் ஞானேஸ்வரன் என்ற இளம் தந்தையொருவர் இன்றைய (17.07.2018) தினம் அவுஸ்திரேலிய அரசால் சிறிலங்காவிற்கு நாடு கடத்தப்பட்டிருக்கின்றார்.

சிறிலங்காவிற்கு நாடுகடத்தப்பட்டால் திலீபன் கைதுசெய்யப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாகலாம் என்பதால் அவரது நாடு கடத்தலை உடனடியாக கைவிடுமாறு ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை அவுஸ்திரேலிய அரசிடம் கோரிக்கை விடுத்திருந்த நிலையிலேயே இந்த நாடு கடத்தல் இடம்பெற்றிருக்கின்றது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்ட பின்னர் சிறிலங்கா அரச படையினரால் கைதுசெய்யப்பட்டு சித்திரவதைகளுக்கு ஆளான நிலையில் நாட்டை விட்டு வெளியேறிய திலீபன் ஞானேஸ்வரன் 2012 ஆம் ஆண்டு யூன் மாதம் அவுஸ்திரேலியாவில் அரசியல் தஞ்சம் கோரியுள்ளார்.

இந்த நிலையில் 2016 ஆம் ஆண்டு அவர் திருமணம் செய்து தற்போது எட்டு மாதக் குழந்தையொன்றும் இருக்கும் நிலையில் அவுஸ்திரேலிய அரசு அவரை நேற்றிரவு திடீரென நாடு கடத்தியுள்ளது.

தான் நாடு கடத்தப்பட்டால் சிறிலங்கா படையினரால் கைதுசெய்யப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்படலாம் என்று கூறி தனது நாடு கடத்தலை நிறுத்துமாறு ஐக்கிய நாடுகள் சபை, அவுஸ்திரேலிய உயர் நீதிமன்றம் உட்பட அனைத்து இடங்களிலும் திலீபன் மேன்முறையீடு செய்திருந்தார்.

இந்த மேன்முறையீட்டிற்கமைய திலீபனின் நாடு கடத்தலை நிறுத்துமாறு அவுஸ்திரேலிய அரசிடம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைக் குழு கோரிக்கை விடுத்துள்ளது. எனினும் இந்த கோரிக்கையையும் பொருட்படுத்தாது அவுஸ்திரேலிய அரசு திலீபனை நாடு கடத்தியுள்ளதாக அவுஸ்திரேலிய தமிழ் ஏதிலிகள் கழகத்தின் ஊடகப் பேச்சாளர் அரன் மயில்வாகனம் ஐ.பி.சி க்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.

திலீபனின் மனைவிற்கு ஐந்துவருட வீசா அனுமதியை வழங்கிய நிலையிலேயே அவுஸ்திரேலிய அரசு தீலிபனை நாடு கடத்தியிருக்கின்றது. இதனால் திலீபனின் மனைவியும், அவர்களது நண்பர்களும் திலீபனின் நாடு கடத்தலுக்கு எதிராக போராட்டமொன்றையும் நடத்தினர்.

இதன்போது திலீபனின் மனைவி கண்ணீர் விட்டு கதறிய காட்சிகள் அனைவரையும் கலங்க வைத்திருந்தது.

அவுஸ்திரேலிய அரசின் இந்த நடவடிக்கை தமிழர்களுக்கு எதிராக அந்த அரசு கடைபிடித்துவரும் கடும்போக்குக் கொள்கையின் வெளிப்பாடே என்றும் அவுஸ்திரேலிய தமிழ் ஏதிலிகள் கழகத்தின் ஊடகப் பேச்சாளர் அரன் மயில்வாகனம் குற்றம்சாட்டுகின்றார்.

 

 

 

163..views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

Browse நினைவஞ்சலி

மேலும் →

சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

 

உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.