உங்கள் கருத்து

அறிவுப்புகள்

 

மீடியாக்கள்

< !-Currency Converter widget - HTML code - fx-rate.net -->< !-end of code-->

இந்தியாவில் அச்சுறுத்தலாக இருந்த இலங்கை தமிழ் தம்பதி சிக்கியது எப்படி? வெளியான உண்மைகள்!

கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக பாரிய திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இலங்கைத் தம்பதியினரை இந்திய பொலிஸார் கைது செய்துள்ளனர்.இவர்கள் இலங்கைக்கு தப்பிச்செல்ல தயாராக இருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

திருவரம்பூர் – துவாக்குடியை அடுத்து உள்ள வாழவந்தான் கோட்டையில் வசிக்கும் அகதிகள் முகாமில் வட்டி தொழில் செய்து வரும் இலங்கை அகதியான தேவகுமாரியிடம், 3 பேர் கத்தியை காட்டி 10 பவுன் நகைகளை மிரட்டி வாங்கி சென்றுள்ளனர்.

இதில் சந்தேகத்தின் பெயரில் அகதிகள் முகாமில் உள்ள சிவகுரு, விக்னேஷ் ஆகியோரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த சம்பவத்தின் பின் இவர்களின் நண்பனான நாமக்கல் அகதிகள் முகாமை சேர்ந்த ராஜா என்கிற “கெட்டியான் பாண்டி” அவனது மனைவியுடன் தலைமறைவாகி உள்ளார்.

இவர்கள் தலைமறைவாகி உள்ள விடயம் பொலிஸாருக்கு தெரியவந்த நிலையில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது, கடந்த 2 மாதங்களாக பூட்டிய வீடுகளில் நகைகளை திருடுவது அதிகரித்து வந்துள்ளது. இளம் வயது கணவன் மனைவியாக இரண்டு பேர் திருட்டு நடந்த இடங்களில் எல்லாம் வீடு வாடகைக்கு கேட்டு வந்திருப்பது தெரியவந்தது.

அப்படி வீடு வாடகைக்கு கேட்டு தெருக்களில் சுற்றும்போது பூட்டி இருக்கும் வீடுகளை நோட்டமிட்டு பட்டபகலில் அந்த வீடுகளில் தங்கள் கைவரிசைகளை காட்டியிருக்கிறார் என்பதை விசாரணையில் தெரிந்து கொண்டனர்.

இந்த நிலையில் இந்த தம்பதியினர் குறித்து அனைத்து பொலிஸ் நிலையத்திற்கும் தெரியப்படுத்தி வைத்திருந்த நிலையில், இவர்கள் இலங்கைக்கு தப்பி செல்வதற்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்த நிலையில் தனிப்படை பொலிஸாரால் என்.ஐ.டி அருகே செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

 

108..views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

 

உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.