உங்கள் கருத்து

அறிவுப்புகள்

 

மீடியாக்கள்

சுதந்திரபுரத்தில் பெருமளவு ஆயுதங்கள் மீட்பு photo

முல்லைத்தீவு சுதந்திரபுர பகுதியில் இன்றுடன் அகழ்வு பணி நிறைவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதோடு, அபாயகரமான வெடிபொருட்கள் பல இன்றும் (20) மீட்க்கப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.தனியார் ஒருவர் தனது காணிக்குள் இருந்த கிணறு ஒன்று சீரற்று இருந்ததால் அவற்றை அகழ்ந்து சீராக்க முயற்சித்துள்ளார். இதன்போது கிணற்றுக்குள் அபாயகரமான வெடிபொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

இதனை தொடர்ந்து சுதந்திரபுரம் மத்தி பகுதியில் நிலை கொண்டிருந்த கடற்படையினரிடம் தகவல் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வடக்கு கடற்படை உயர் அதிகாரி விக்ரம்சிங்க தலைமையில், நேற்று முன்தினம் (18) அந்த பகுதிக்கு சென்ற பொலிஸாரும் கடற்படையின் விசேட இராணுவ அணியினரும் அகழ்வு பணியில் ஈடுபட்டனர்.

இதன்போது விடுதலைப் புலிகளின் தயாரிப்பில் உருவாகிய பசீலன் 2000 ஆட்லறி செல் இரண்டு உள்ளிட்ட வெடிபொருட்கள் சில மீட்கப்பட்டுள்ளன.

மேலும், இந்த அகழ்வு பணி, நேற்று முன்தினம் பிற்பகல் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதுடன் நேற்றும் (19) தொடர்ந்து இடம்பெற்றது என புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போதும் வெடிபொருட்கள் மீட்கப்பட்டன. இதனை தொடர்ந்து இன்றும் (20) இடம்பெற்ற அகழ்வு பணியில் கிணறு முழுமையாக சுத்தப்படுத்தப்பட்டு ஆயுதங்கள் பல மீட்கப்படுள்ளன.

குறித்த அகழ்வுப் பணி நீதிமன்றத்தின் அனுமதியுடன் நீதிமன்ற பதிவாளர் உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

146..views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

Browse நினைவஞ்சலி

மேலும் →

சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

 

உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.