உங்கள் கருத்து

அறிவுப்புகள்

 

மீடியாக்கள்

ஹரிக்சனின் முதலாவது பிறந்தநாளில் அமைத்துக்கொடுக்கப்பட்ட வாழ்வாதார. படங்கள் வீடியோ

புங்குடுதீவை பிறப்பிடமாகவும், நோர்வேயை வசிப்பிடமாகவும் கொண்ட கோபி நர்மதா தம்பதிகளின் செல்வப்புதல்வன் ஹரிக்சன் அவர்களின் முதலாவது பிறந்தநாளை முன்னிட்டு,

மல்லாவி தென்னியன் குளம் பகுதியில் வாழ்ந்துவரும் முன்னாள் போராளி ஒருவருக்கான

எரிபொருள் வியாபார நிலையம் கடந்த 23.07.2018 அன்று திறந்து வைக்கப்பட்டு
கையளிக்கப்பட்டது. பல வருடங்களாக போராளியாக இருந்துவந்த விநாயகமூர்த்தி அவர்கள், போரிலே தனது காலை இழந்த ஒருவர் ,இவருக்கு நான்கு பிள்ளைகள். அன்றாட வாழ்வில் பல சிக்கல்களை எதிர்கொண்ட இவரை காலையடி நிர்வாகம் இனம்கண்டு, அவர் கேட்டுக்கொண்டதற்கமைய எரிபொருள் வியாபாரநிலையம் அமைத்து வழங்கியருக்கிறது.

அன்றாட வாழ்வில் பிள்ளைகளை படிப்பிப்பதற்க்கு பெரும் இடர்களை சந்தித்த இவருக்கு வியாபார நிலையம் ஒரு வரப்பிரசாதமாக அமைந்தள்ளது எனலாம். தற்சமயம் 400 ரூபாவிலிருந்து 600 ரூபா வரையான இலாபத்தை பெறக்கூடிய இந்த வர்த்தக நிலையத்தில் இன்னும் பொருட்களை முதலீடு செய்வதனூடே அதிகலாபத்தை சம்பாதிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது பெற்றோல், டீசல் மண்ணெண்ணை
மற்றும் ஓயில் என்பன மட்டுமே பெற்றுகொடுக்கப்பட்டுள்ளது.
இதற்கான செலவீனம்

கடைக்கான கட்டுமான நிதி 40000
எரிபொருள் 46280
பரல். 1250
ஒயில் 3050
பக்கற் ஓயில் 1000
பெயற்பலகை. 7000
ஏற்றுககூலி. 2500
பணமாக 5000
போக்குவரவு ஏனைய
செலவு 3500
புனல் மற்றும வயர் 600
மொத்த செலவீனம் 110,180

விநாயகமூர்த்தியின் வாழ்விலே ஒளியேற்றி
வைத்துள்ள மழலைச்செல்வம் ஹரீக்சன் நீங்கள் அப்பா அம்மாவின் ஆசியுடனும் ஆண்டவனின்
அருளாலும் வாழ்வில் எல்லா நலங்களும் பெற்று ,பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென காலையடி இணைய உதவும் கரங்களின் சார்பாக வாழ்த்துகிறோம்.

1,831..views

  • jegaatheeswaraan:

    இவர் எனக்கு தெரிந்த ஒருவர் இப்படி ஒரு உதவி தான் நாங்கள் ஒவ்வொரு வரும் செய்ய வேணும் இருந்தும் எங்களால் முடிய வில்லை இவர் செய்து இருக்கிறார் வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

Browse நினைவஞ்சலி

மேலும் →

சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

 

உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.