உங்கள் கருத்து

அறிவுப்புகள்

 

மீடியாக்கள்

மகிந்தவை பிரதமராக அங்கீகரிக்க முடியாது! – சபாநாயகர் திடீர் அறிவிப்பு

புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை அவருக்கு பிரதமர் ஆசனம் வழங்கப்படாது என்றும், புதிய அரசாங்க உறுப்பினர்கள் தொடர்ந்தும் எதிர்கட்சியிலேயே அமர வேண்டும் என்றும், சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

கடுந்தொனியிலான அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள சபாநாயகர் கரு ஜயசூரிய, பாராளுமன்றத்தில் மஹிந்த தரப்பினர் பெரும்பான்மையை நிரூபிக்கும் வரையில் மஹிந்த தலைமையிலான அரசாங்கத்தை அங்கீகரிக்கப் போவதில்லை என அறிவித்துள்ளார்.

ஒக்டோபர் – 26ல் பாராளுமன்றத்தில் கட்சிகள் இருந்த நிலையையே ஏற்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய கூறியிருப்பதானது ரணில் விக்கிரமசிங்கவையே இன்னமும் நாட்டின் சட்டபூர்வ பிரதமராகவும் அவரது அமைச்சரவையையே சட்டபூர்வமானதெனதும் ஏற்றுக்கொண்டுள்ளதை உறுதிசெய்கின்றது.

அத்துடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனக்கு வழங்கிய வாக்குறுதிக்கு விரோதமாக செயற்பட்டுள்ளதாகவும் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தை எதிர்வரும் 5 ஆம் திகதி அல்லது 7 ஆம் திகதிக்கு கூட்டுவதாக தனக்கு வாக்குறுதி வழங்கியிருந்த போதும் அவர் அதனை மீறியுள்ளதாக கரு ஜயசூரிய குற்றம் சாட்டியுள்ளார்.

ஜனாதிபதியின் இவ்வாறான செயற்பாடு அரசியலமைப்பிற்கு முரணானதும், ஜனநாயகத்திற்கு எதிரானதும் என அவர் கூறியுள்ளார்.

மேலும் ஐக்கிய தேசியக்கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, மக்கள் விடுதலை உட்பட முஸ்லீம் கட்சி உறுப்பினர்கள் 116 பேர் மீண்டும் நாடாளுமன்றத்தை கூட்டுமாறு கையொப்பமிட்டு தன்னிடம் வழங்கியுள்ளனர்.இதன் படியே ஜனாதிபதியுடனான கலந்துரையாடல் இடம்பெற்றது என்றும், ஆனால் வாக்குறுதியை வழங்கிவிட்டு அதனை மீறி ஜனாதிபதி செயற்படுவது ஜனநாயகத்திற்கு முரணானது என்றும் தெரிவித்துள்ளார்.

135..views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

Browse நினைவஞ்சலி

மேலும் →

சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

 

உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.