உங்கள் கருத்து

    அறிவுப்புகள்

     

    மீடியாக்கள்

    கொட்டித் தீர்க்கும் மழை – 2 ஆண்டுகளுக்குப் பின் நிரம்பும் இரணைமடுக் குளம்! புகைப்படங்கள்.

    இரண்டு வருடங்களுக்குப் பின் கிளிநொச்சி -இரணைமடு குளத்தில் நீர் அதன் முழுக்கொள்ளளவை அடைந்து வருகிறது என கிளிநொச்சி பிராந்திய பிரதி நீர்ப்பாசனத் திணைக்கள பணிப்பாளர் ந.சுதாகரன் தெரிவித்துள்ளார்.

    கடந்த 24 மணிநேரத்தில் பெய்த 150 மில்லி மீற்றர் மழை காரணமாக கிளிநொச்சியில் உள்ள குளங்களுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இரணைமடுகுளத்தின் நீரேந்து பகுதிகளில் அதிகளவு மழை காரணமாக இன்றுஇரணைமடுகுளத்தின் நீர் மட்டம் 26.5 அடியாக காணப்படுகிறது. மாங்குளம், கனகராயன்குளம், சேமமடுகுளம் போன்ற குளங்களின் நீர் மட்டம் அதிகரித்துள்ளது எனவே அக் குளங்கள் வான்பாய்கின்ற போதும் இரணைமடு குளத்துக்கான நீர் வரவு மேலும் அதிகரிக்கும்.

    ஆசிய அபிவிருத்தி வங்கியின் 2 ஆயிரம் மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் கடந்த இரண்டு அபிவிருத்திப் பணிகள் இடம்பெற்று வந்த நிலையிலும் பருவ மழை போதுமானதாக இல்லாததன் காரணமாக கடந்த வருடங்களில் நீர் மட்டம் அதன் கொள்ளளவை அடையவில்லை. 2016 ஆம் ஆண்டு நீர் மட்டம் 20 அடியாகவும், 2017 ஆம் 18 அடியாகவும் காணப்பட்டது.

    இரணைமடுகுளம் இதுவரை காலமும் 34 அடியாக காணப்பட்டது. தற்போது அபிவிருத்திக்கு பின் 36 அடியாக காணப்படுகிறது. இதுவரை காலமும் 1 இலட்சத்து 6 ஆயிரத்து 500 ஏக்கர் அடியாக காணப்பட்ட நீர் கொள்லளவு தற்போது ஒரு இலட்சத்து 19 ஆயிரத்து 500 ஏக்கர் அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இவ்வருடம் குளத்தின் நீர் மட்டம் 36 அடியாக உயரும் போது குளம் இந்த கொள்ளளவை அடையும்.

    அவ்வாறு 36 அடிக்கு நீர் வந்தால் இதுவரை காலமும் இரணைமடுகுளத்தின் கீழ் சராசரி 8 ஆயிரத்து 500 ஏக்கரில் மேற்கொள்ளப்பட்டு வந்த சிறுபோக நெற்செய்கை 12 ஆயிரத்து 500 ஏக்கராக அதிகரிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

    592

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    நினைவஞ்சலி

    மேலும் →

    சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

     

    உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.