உங்கள் கருத்து

அறிவுப்புகள்

 

மீடியாக்கள்

< !-Currency Converter widget - HTML code - fx-rate.net -->< !-end of code-->

அரசியலுக்காக இறந்தவர்களிற்கு உயிர்கொடுக்க முயற்சி: முன்னாள் போராளிகள் காட்டம்..வீடியோ,,

நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள அசாதாரணசூழ்நிலையை பயன்படுத்தி இறந்தவர்களிற்கு உயிர்கொடுக்க பலர் முனைவதாக ஐனநாயக போராளிகள்கட்சியின் ஊடகபேச்சாளர் க.துளசி கடுமையாக சாடியுள்ளார்.

மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் உத்தியோகத்தர்கள்இருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் முன்னாள் போராளிகளுடன் முடிச்சுப் போட்டுள்ளகருணா என்ற மஹிந்த ராஜபக்சவின் மிக நெருங்கிய விசுவாசியான விநாயகமூர்த்திமுரளிதரன், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டுஅம்மானும் உயிருடன் இருப்பதாக தெரிவித்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றார்.

 

இந்த நிலையிலேயே இன்றைய தினம் வவுனியாவிலுள்ள வவுனியா ஊடகமையத்தில் இன்று மாலைஊடகசந்திப்பொன்றை அவசரமாக நடத்திய தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள்போராளிகளாக இருந்து சிறிலங்கா இராணுவத்தினரால் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்ட நிலையில் ஜனநாயக போராளிகள் கட்சி என்ற பெயரில் அரசியலில் ஈடுபட்டுள்ள முன்னாள் போராளியான துளசி, கருணாவின் தகவல்களை முற்றாக நிராகரித்த நிலையில் இந்தக் குற்றச்சாட்டையும் முன்வைத்திருக்கின்றார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் மேலும் கருத்துத்தெரிவித்த ஐனநாயகபோராளிகள் கட்சியின் ஊடகபேச்சாளர் க.துளசி….

தெற்கில்ஏற்பட்டுள்ள அரசியல் ஸ்திரத்தன்மைக்கு மத்தியில் தமிழர்பி ரதேசத்தில்ஏற்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கும் அசாதாரண நிலமைகள் தொடர்பாக எமது மக்களுக்கும், போராளிகளுக்கும் தெளிவூட்டல்களைமேற்கொள்ளவேண்டிய தேவை எமக்கு இருக்கிறது.

2009 இற்குபின்னர் விடுதலை புலிகளால் ஒரு சன்னம்கூட பாவிக்கபடாத நிலமையிலே தற்போதுநடைபெற்றுகொண்டிருக்கும் அசம்பாவிதங்களிற்கு விடுதலைப் புலிகளை சுட்டிகாட்டிகொண்டிருப்பதுவெறுமனே ஒரு கண்துடைப்பாகவே அமைந்துள்ளது.

வவுணதீவுசம்பவம் தொடர்பில் சரியான முறையிலே விசாரணைகள் நிறைவுபெறுவதற்கு முன்னர் குறித்த விடயத்தில்போராளிகளை தொடர்புபடுத்துவதை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். விசாரணைகள்முடிவடையும்வரை உங்களது அனுமானங்களை மிக கவனமாகவெளியிட வேண்டும் எனகேட்டுகொள்கிறோம்.

தற்போது நாட்டில்; ஏற்பட்டுள்ளஅசாதாரண சூழ்நிலையை பயன்படுத்தி இறந்தவர்களிற்கு உயிர்கொடுக்கபலர்முனைகின்றார்கள். இன்று பொட்டம்மானை கொண்டுவந்திருக்கிறார்கள் இனிவரும்காலங்களிலே தளபதிகளான பால்றாஜ், கிட்டு, செல்லகிளி போன்றவர்களையும் கொண்டுவரக்கூடியவாய்புகள் இருக்கிறது. எவளவு கடினமான சூழ்நிலையிலும் விடுதலைப் புலிகளின் தலைமையோ,தளபதிகளோ ஒருகாலமும் நாட்டைவிட்டு தப்பி ஓடுவதற்கு எத்தணிக்கவில்லை.அவர்கள் இறுதிவரை போராடி அந்த மண்ணிலேயே தங்களை அர்பணித்துகொண்டார்கள் என்பதுதான்நியம்.

போராளிகளானநாங்கள் அரசியல் கட்டமைப்பாக, ஐனநாயக முறையிலே இலங்கை தேர்தல் திணைக்களத்திலே பதிவுசெய்துவிட்டு எமதுஅரசியல் நடவடிக்கையை மேற்கொண்டுவருகின்றோம்.

தற்போதுபுலம்பெயர் தேசத்திலே இருக்ககூடிய காகிதபு லிகள் தலைமைசெயலகம், நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், என்ற பெயர்களில் இயங்கிவருகிறார்கள் தலைமைசெயலகம் என்பது விடுதலை புலிகளின்கட்டுப்பாட்டு பிரதேசமான கைவேலியில் மாத்திரமே இருந்தது. வெளிநாடுகளில் அதனை நிறுவசொல்லிஎமது தலைவர் ஒருபோதும் கூறவில்லை. நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தமது கட்டமைப்புகளைகலைத்துவிட்டு இங்கு வருகைதந்து மக்களிற்கு தேவையான விடயங்களை செய்யுமாறுகேட்டுகொள்கிறோம்” ஐனநாயக போராளிகள் கட்சியின் ஊடகபேச்சாளர் க.துளசி பகிரங்கவேண்டுகோள் விடுத்துள்ளார.்.

அதேவேளை தமிழர்களின் பேரம்பேசும் சக்தியாக திகழும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, நீண்டகாலமாக சிறையில்வாடும் அரசியல் கைதிகளின் விடயத்தில் எவ்வாறு செயற்படவேண்டும் என்ற திட்டங்களை தாம்வழங்கியிருப்பதாகவும் கூறிய துளசி, அவர்களின் விடுதலைதொடர்பாக ஓரிரு தினங்களில் கூடடமைப்பின் தலைவர் சம்பந்தன் முக்கியமான செய்தியைவெளியிடுவார் என்று தாங்கள் எதிர்பார்கிறோம்” என்றும் கூறியுள்ளார்.

53..views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

 

உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.