உங்கள் கருத்து

அறிவுப்புகள்

 

மீடியாக்கள்

< !-Currency Converter widget - HTML code - fx-rate.net -->< !-end of code-->

கனடா அரசுக்கு முன்னாள் போராளிகள் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை!

புதுக்குடியிருப்பு கைவேலியில் அமைந்துள்ள ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைமைச்செயலகத்தில் இன்றைய (04) தினம் கனடா உயர் ஸ்தானிகர் டேவிட் மெகினனுக்கும் முன்னாள் போராளிகளுக்கும் இடையேயான விஷேட சந்திப்பொன்று நடைபெற்றது.ஐப்பசி 26-க்கு பின்னர் நாட்டில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் அசாதாரண நிலையில் போராளிகளது தற்போதைய பாதுகாப்பு மற்றும் இயல்பு நிலை தொடர்பில் கரிசனையுடன் உயர் ஸ்தானிகரால் கேட்டறியப்பட்டது.

தமிழர்களது பொருளாதார மேம்பாடு கனேடிய தமிழர்களது தாயகமக்கள் நலச்செயற்பாடுகள் தொடர்பிலும் ஆராயப்பட்டது. தாயகத்தில் உள்ள 89000 பெண்களை தலைமையாக கொண்ட குடும்பங்களுக்கு கனடா அரசு விசேட நலன்சார் வேலைத்திட்டம் ஒன்றினை ஆரம்பிக்குமாறு எம்மால் கோரப்பட்டது.

அரசியல் கைதிகளின் விடுதலை காணாமல் ஆக்கப்பட்டோருக்கான காத்திரமான பொறுப்புக்கூறல் தமிழர்களது கௌரவமான தீர்வு முயற்சிகளில் கனடா அரசு இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமெனவும் போராளிகள் சார்பில் கோரப்பட்டது.

தமிழர்கள் அல்லலுற்று ஆக்கிரமிப்புக்களை தாண்டி புலம்பெயர்ந்து கனடாவில் தஞ்சமடைந்தபோது எமது மக்களை அரவணைத்து அவர்களது மொழி கலாச்சார வாழ்வியலில் பூரண சுதந்திரத்துடன் வாழவைத்தமைக்கு எமது தாயக மக்களின் சார்பில் கனடா அரசுக்கு போராளிகளால் நன்றி தெரிவிக்கப்பட்டது.

இலங்கையில் இனநல்லினக்கமும் சகவாழ்வும் ஏற்படுத்தப்படும் வரை புலம்பெயர்ந்தோர் திருப்பி அனுப்பப்படுவது தவிர்க்கப்பட வேண்டுமெனவும் எம்மால் வலியுறுத்தப்பட்டது.

க.துளசி,

ஊடகப்பிரிவு,

ஜனநாயகபோராளிகள்கட்சி.

75..views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

 

உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.