உங்கள் கருத்து

அறிவுப்புகள்

 

மீடியாக்கள்

< !-Currency Converter widget - HTML code - fx-rate.net -->< !-end of code-->

மைத்திரியுடன் புத்தரும் முல்லை வந்தார்?

மைத்திரியின் வருகையினையடுத்து முல்லைத்தீவு பழைய செம்மலை விநாயகர் ஆலயத்துள் அமைக்கப்பட்ட சர்ச்சைக்குரிய புத்தர் சிலை அவசரமாக அவசரமாக திறந்துவைக்கப்பட்டுள்ளது.முல்லைத்தீவு செம்மலையில் நீதிமன்ற உத்தரவை மீறி சைவ ஆலயம் அமைந்துள்ள இடத்தில் பாரிய புத்தர் சிலை நிறுவப்பட்டுவருகின்றமை தொடர்பில் தமிழ் மக்கள் கடும் எதிர்ப்பு வெளியிட்டு வந்திருந்தனர்.

செம்மலை – நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்திலேயே பௌத்த பிக்கு ஒருவரால் இந்த சட்டவிரோத செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளமை, தமிழர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

முல்லைத்தீவு – செம்மலை பகுதியில் தொல்பொருள் திணைக்களத்தின் கீழுள்ள நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் 2009-ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் இராணுவத்தினர் முகாம் ஒன்றை நிறுவியுள்ளனர்.

இந்த நிலையில் 2015 ஆம் ஆண்டில் இருந்து இராணுவத்தின் பாதுகாப்பில் ஆலயத்திற்கு அருகில் வசித்துவரும் கொலம்ப மேதாலங்க தேரர் என்ற பௌத்த பிக்கு, ஆலய வளாகத்தில் விகாரையொன்றை நிறுவும் முயற்சியை முன்னெடுத்திருந்தார்.

இராணுவத்தின் உதவியுடன் கொலம்ப மேதாலங்க தேரர் தலைமையில் இந்த பௌத்த விகாரையை நிறுவும் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

எனினும் விகாரை அமைக்கும் நடவடிக்கைகளுக்கு பிரதேச சபை, மக்கள் பிரதிநிதிகள் மற்றும் ஆலய நிர்வாகம் ஆகியன ஏற்கனவே தமது எதிர்ப்பினை வெளியிட்டிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து இடைநிறுத்தப்பட்டிருந்த விகாரையின் கட்டுமாணப் பணிகள் தற்போது துரித கதியில் முன்னெடுக்கப்பட்டு இறுதிக் கட்டத்தை எட்டியிருந்தது.

131..views

Leave a Reply

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

நினைவஞ்சலி

மேலும் →

சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

 

உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.