உங்கள் கருத்து

அறிவுப்புகள்

 

மீடியாக்கள்

< !-Currency Converter widget - HTML code - fx-rate.net -->< !-end of code-->

சம்பந்தருக்கு கிடைத்தது புதிய எலும்புத்துண்டுகள்?photo

இலங்கை அரசினை போர்க்குற்றங்களிலிருந்து காப்பாற்றி வருவதற்கு நன்றிக்கடனாக இரா.சம்பந்தனிற்கு கொழும்பு-07 அதிஉயர் பாதுகாப்பு வலையத்தில் உள்ள

பௌத்தாலோக மாவத்தையில் ஒன்றரை ஏக்கர் காணியுடன் ஆடம்பர வீடு ஒன்று வழங்கப்பட்டுள்ளது.அத்துடன் அதற்கான அதிகாரிகள் மற்றும் பூந்தோட்டங்களைப் பராமரித்தல், வீட்டை துப்பரவு செய்தல் ஆகியவற்றுக்கு தலா இரண்டு பணியாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நல்லிணக்கத்தை ஏற்படுத்த ஒத்துழைப்பதால் இலங்கை அரசாங்கத்தால் கௌரவமாக நடத்தப்பட வேண்டும் என இலங்கை அமைச்சரவையில் விசேட பிரேரணை ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. அதற்கு எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவும் இணக்கம் தெரிவித்துள்ளார். 13 ஆம் திகதி பெப்ரவரி மாதம் 2019 அன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் முன்னிலையில் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இலங்கைக் காணி மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சு சமர்ப்பித்த பிரேரணையே ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
எனினும் எதிர்கட்சி தலைவர் பதவி பறிக்கப்பட்ட விரக்தியிலுள்ள இரா.சம்பந்தனை திருப்திப்படுத்தவே இந்த சலுகையினை அரசு வழங்க முன்வந்துள்ளது.
இந்தப் பிரேரணையின் பிரகாரம் நல்லிணக்கம் என்ற பெயரில் வடக்கு-கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளில் இலங்கை அரசாங்கம், இலங்கைப் படைகளின் ஒத்துழைப்புடன் காணி அபகரிப்பு. புத்தர் சிலை வைத்தல் போன்ற இன ஒடுக்குமுறைகளில் ஈடுபட்டு வருகின்றது. இவ்வாறனதொரு நிலையில் நல்லிணக்கத்துக்காக சம்பந்தன் பாடுபடுகின்றார் என்ற அடிப்படையில், இலங்கை அரசாங்கம் சம்பந்தனுக்கு கௌரவம் வழங்கியுள்ளது.
சம்பந்தனுக்கு வழங்கப்படவுள்ள இந்த ஆட்பர வீடு, இலங்கைப் படையினரால் துப்பரவு செய்யப்பட்டு மீள வடிமைக்கப்பட்டுள்ளது.
பிரேரணை மூலமாக நிறைவேற்றப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்தின்படி சம்பந்தன் பயன்படுத்துவதற்கு இரண்டு அதிநவீன வாகனங்களும் வழங்கப்பட்டுள்ளன.
இந்த இரண்டு வாகனங்களும் சமபந்தனின் அரச மற்றும் தனிப்பட்ட தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படும்.
அத்துடன் குறித்த வீட்டுக்கான மின்சாரம். நீர்க்கட்டணங்கள் மற்றும் செலவுகள் அனைத்தும் இலங்கை அரசாங்கத்தால் பொறுப்பேற்கப்படும். குறிப்பாக காணி, மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சு சம்பந்தனின் வீட்டுச் செலவுகளுக்குரிய நிதியை பொறுப்பேற்கும்.
இவ்வாறு பல வசதிகளுடன் குறித்த வீட்டில் சம்பந்தன் தனது குடும்ப உறுப்பினர்களுடன் வாழ்வதற்குரிய அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.
கொழும்பு-07 அதிஉயர் பாதுகாப்பு வலையத்தில் உள்ள பௌத்தாலோக மாவத்தையில் சம்பந்தனுக்கு வழங்கப்பட்டுள்ள வீடு அமைந்துள்ள பகுதியில் இலங்கைப் படைகளின் மூத்த தளபதிகள், இலங்கைப் பொலிஸ் மா அதிபர், மற்றும் மூத்த அமைச்சர்கள். உயர் இராஜதந்திரிகள் ஆகியோரின் வீடுகள் அமைந்துள்ளன.
பம்பலப்பிட்டிச் சுற்று வட்டத்தோடு அமைந்துள்ள தும்முல்லச் சந்தியில், ஹவலொக் வீதியின் ஆரம்ப முனையில் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகம் அமைந்துள்ளது.
அங்கிருந்து பிற்பக்கமாக கொழும்பு பல்கலைக்கழக மைதானம் வரை செல்லும் பௌத்தாலோக மாவத்தை போர்க்காலத்தில் 20 ஆண்டுகளாக மூடப்பட்டு உயர் பாதுகாப்பு வலயமாகவும் அறிவிக்கப்பட்டிருந்தன.
பின்னர் 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மைத்திரி- ரணில் அரசாங்கம் பதவியேற்றதும் அந்த வீதி போக்குவரத்துக்காக மட்டுப்படுத்தப்பட்ட அளவில் திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
100..views

Leave a Reply

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

நினைவஞ்சலி

மேலும் →

சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

 

உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.