உங்கள் கருத்து

அறிவுப்புகள்

 

மீடியாக்கள்

< !-Currency Converter widget - HTML code - fx-rate.net -->< !-end of code-->

வட்டுக்கோட்டை ஆலயமொன்றில் திடீரென நிகழ்ந்தது அமானுஷ்யமா? பதறியடித்த குழந்தைகளும் பெரியவர்களும்!படங்கள். வீடியோ

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை தெற்குப் பகுதியில் அமைந்துள்ள முதலியார் ஆலயத்தில் நேற்றைய தினம் திடீரென்று தோன்றிய சுழற்காற்றினால் சற்று நேரம் பதற்றம் நிலவியதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.கடந்த சனிக்கிழமை சங்காபிஷேகம் மற்றும் திருவூஞ்சல் அலங்காரப் பூசையுடன் நிறைவுபெற்ற குறித்த ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தின் தொடர்ச்சியாக நேற்றைய தினம் இரவு வயிரவர் மடை இடம்பெறவிருந்த நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றதாக கூறப்பட்டுள்ளது.

வயல் சார்ந்த சூழலில் அமைந்துள்ள முதலியார் ஆலயத்தில் அம்பாள் முன்பள்ளி சிறுவர்களுக்கான அறநெறிப் போதனை இடம்பெற்றுக்கொண்டிருந்தபோது இந்த திடீர் அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

இதனை நேரில் கண்டவர்களின் கருத்துப்படி,

வயல் நடுவே திடீரென பாரிய சுழற்காற்று தோன்றி நிலத்தில் இருந்த சிறிய சருகுகள் உள்ளிட்ட பொருட்களை உயரம்வரை கொண்டுசென்றதுடன் ஆலயத்தை நோக்கி நகர்ந்துள்ளது. இதன்போது அல்லோலகல்லோலப்பட்ட சிறுவர்கள் மற்றும் ஆலயத்தில் நின்ற பெரியவர்கள் அங்கிருந்த தூண்களைப் பற்றியவாறு நின்றுள்ளனர்.

நகர்ந்துவந்த சுழற்காற்று ஆலயத்தில் போடப்பட்டிருந்த தகரப் பந்தலைப் பிடுங்கி எறிந்துள்ளதுடன் மடைப்பள்ளி நோக்கி நகர்ந்து அதன் கூரைத் தகடுகளை குறுக்குச் சட்டங்களுடன் சேர்த்து பிடுங்கியெறிந்துள்ளது. அதனைத் தொடர்ந்து அந்த சுழல்காற்று அணைந்துவிட்டது.

இதனால் ஆலயத்தில் பலத்த சேதம் ஏற்பட்டதுடன் பந்தலில் இருந்த தகரங்கள் உயரத்தில் தூக்கி வீசப்பட்டதனால் ஏற்படவிருந்த அனர்த்தத்திலிருந்து அங்கிருந்தோர் அருந்தப்பு தப்பியதாக கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த சுழல் காற்று உருவாக்கத்தின்போது நேரில் கண்டவர்கள் அது ஒரு அமானுசமாக இருக்கலாம் எனவும் தெய்வக்குற்றமாக இருக்கலாம் எனவும் அஞ்சுகின்றனர். ஏனெனில் அந்தச் சந்தர்ப்பத்தின்போது ஆலயத்திற்கு அருகாமையில் இருந்த வீடுகளில் காற்று வீசியதற்கான எவ்வித அறிகுறியும் தென்படவில்லை. அத்துடன் வேறெங்குமில்லாது கோவிலில் மட்டும் பலத்த சுழல்காற்று எவ்வாறு தோன்றியது எனவும் சந்தேகிக்கின்றனர்.

பலவித அற்புதங்கள் நிறைந்ததாக கிராம மக்களால் நம்பப்படும் முதலியார் ஆலயத்தின் மூலமூர்த்தியான முருகன், குற்றம்குறைகளைப் பொறுக்கமாட்டார் என்ற ஐதீகம் மக்களிடத்தில் உள்ளது. இதுகுறித்து ஆலயத்தின் திருவூஞ்சல் பிரபந்தத்திலும் குறிப்புக்கள் உள்ளன.

எவ்வாறாயினும் முன்னெப்போதுமில்லாத அளவிற்கு இம்முறை ஆலயத்தின் வருடாந்த உற்சவம் மிகவும் சிறப்பாக இடம்பெற்றுள்ளதுடன் ஆலயத்தின் சுவாமி எழுந்தருளும் வெளிவீதி முதன்முறையாக அகலிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

84..views

Leave a Reply

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

நினைவஞ்சலி

மேலும் →

சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

 

உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.