உங்கள் கருத்து

அறிவுப்புகள்

 

மீடியாக்கள்

< !-Currency Converter widget - HTML code - fx-rate.net -->< !-end of code-->

பொள்ளாச்சி துஸ்பிரயோகச் சம்பவம்: தமிழகம் முழுவதும் போராட்டங்கள் தொடர்கின்றன.

பொள்ளாச்சி பாலியல் துஸ்பிரயோகச் சம்பவத்தை கண்டித்து தமிழம் முழுவதும் போராட்டங்கள் இன்றும் (சனிக்கிழமை) தொடர்கின்றன.

தமிழகம் உட்பட இந்தியாவையே பேரதிர்ச்சிக்கு உட்படுத்தியுள்ள பொள்ளாச்சி பாலியல்  துஷ்பிரயோக சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கக்கோரி, தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டிலுள்ள கே.எஸ்.ஆர் கல்லூரி மாணவர்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கக்கோரி மனித சங்கிலிப் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் பெருமளவிலான மாணவர்கள் பங்கேற்றனர்.

இதேபோல் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பழனி ஆண்டவர் தொழிநுட்பக்கல்லூரி மாணவர்கள் வகுப்புக்களைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் சேலம் மாவட்டம் ஓமலூரில், ஜனநாயக மாதர் சங்கத்தினரும் இந்த சம்பவத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். இதன்போது, பொது இடங்களில் பெண்கள் மீது, நடத்தப்படும் வன்முறைகள் குறித்து கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

அதேபோன்று, மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு எதிரில், ஆதித் தமிழர் மகளீர் பேரவைச் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. அவர்கள் வாயில் கறுப்புப்பட்டி அணிந்து போராட்டம் நடத்தினர்.

இதேவேளை புதுக்கோட்டையில் மன்னர் கல்லூரி மாணவர்கள், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கோரி இரண்டாம் நாளாகவும் போராட்டம் நடத்தியுள்ளனர்.

இந்த போராட்டத்தில் ஈடுபட்ட அரவிந்தசாமி என்கின்ற மாணவனை, பொலிஸ் அதிகாரியொருவர் கன்னத்தில் அறைந்ததை அடுத்து அங்கு பதற்றமும் ஏற்பட்டது.

மேலும் ஆர்ப்பாட்டம் செய்த போராட்டக்காரர்களை பொலிஸார் ஒடுக்குவதாக மாணவர்கள் குற்றம் சுமத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

101..views

Leave a Reply

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

நினைவஞ்சலி

மேலும் →

சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

 

உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.