உங்கள் கருத்து

அறிவுப்புகள்

 

மீடியாக்கள்

< !-Currency Converter widget - HTML code - fx-rate.net -->< !-end of code-->

ரணில் அரசாங்கத்தை பாதுகாப்பதிலேயே கூட்டமைப்பு உறுதியாகவுள்ளது!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தைப் பாதுகாக்க வேண்டுமென்பதிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் உறுதியாக இருக்கின்றனர் என ஈபிஆர்எல்எப் அமைப்பின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் கூறியுள்ளார்.

ஆகையினால் இந்த அரசிற்கு தமிழ் மக்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான அழுத்தத்தைக் கூட கொடுப்பதற்கு அவர்கள் தயாரக இல்லை என்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அத்துடன் அபிவிருத்தி என்ற பெயரில் அரச தரப்பினர்கள் வடக்கிற்கு வருகின்ற போது அவர்களுக்கு பக்கத்தில் ஓடிச் சென்று முதற்கதிரையில் அமர்ந்து கொள்கிறார்களே தவிர அரசியல் ரீதியாக தமிழ் மக்களுக்கு எதனையும் செய்வதாக இல்லை என்றும் சாடியுள்ளார்.

இங்குள்ள நிலைமைகளை பார்த்தீர்களாக இருந்தால் அரசியல் கைதிகள், தொடர்பாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றது தான். ஆனால் அதில் பாராளுமன்றத்தில் இருக்கிறவர்கள் எவ்வளவு தூரம் கலந்து கொண்டார்கள் என்பது வேறு பிரச்சனை.

பொது அமைப்புக்கள் சிவில் அமைப்புக்கள் என்பன இணைந்து பல போராட்டங்கள் நடந்தன. இன்றைக்கும் மக்கள் முன்னின்று காணி விடுவிப்பிற்கும் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களும் போராடிக்கொண்டிருக்கின்றார். அதே போல் போராட்டங்கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. அதற்கு அரசியல்வாதிகளும் ஆதரவைத் தெரிவித்துக் கொண்டு தான் வருகின்றனர்.

ஆனால் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அந்தத் தலைமையின் மீது இருந்த நம்பிக்கை இப்பொழுது போயிருக்கின்றது என்பதைத்; தான் நாங்கள் குறிப்பிட முடியும்.; அரசியல் கைதிகள், காணாமலாக்கப்பட்டோர், காணிவிடுவிப்பு விவகாரம், பிரச்சனைகளுக்கு தீர்வைக் காண ஆக்கபுர்வமான நடவடிக்கைகள் எடுக்காத காரணத்தாலும் மக்கள் மத்தியில் அந்த நம்பிக்கை தடம் மாறிப் போன நிலைமைகள் இருக்கின்றன.

உதாரணமாக இப்போது இருக்கக் கூடிய இந்த அரசாங்கத்துடன் ஒரு இணக்கப்பாட்டுடன் செயற்படுவதாக அவர்களே கூறுகின்றார்கள். இந்த இணக்கப்பாட்டுடன் செயற்படுகின்ற போது பல பிரச்சனைகளை நாங்கள் தீர்த்திருக்க முடியும். காணிகளை முழுமையாக விடுவித்திருக்க முடியும். அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான பேச்சுவார்த்தைகளை நடாத்தி அவர்கள் அனைவரையும் விடுவித்திருக்க முடியும். இப்படி பல்வேறுபட்ட விசயங்களைச் செய்திருக்க முடியும்.

ஆனால் இவர்கள் ஏன் இதில் காத்திரமான முறையில் செய்யவில்லை. அவர்கள் அதனைச் செய்யாத பட்சத்தில் அரசாங்கத்திற்கு எதிராக பல்வேறு சந்தரப்பங்களைப் பயன்படுத்தியிருக்கலாம். இப்ப கூட வருகின்ற வரவு செலவுத் திட்டத்தில் கூட இதற்கான அழுத்தங்களைக் கொடுக்கலாம் அல்லது கொடுத்திருக்கலாம். ஆனால் எந்த அழுத்தங்களும் கொடுக்கப்படவில்லை.

மாறாக இந்த அரசாங்கத்தை கவிழ விடாமல் பாதுகாக்க வேண்டுமென்பதில் உறுதியாக இருந்தார்களே தவிர அவர்களுக்கு அழுதத்தத்தைக் கொடுத்து குறைந்தபட்சம் நாங்கள் இப்போது பேசுகின்ற காணிவிடுவிப்பு, அரசியல்கைதிகள் பிரச்சனை, காணாமல்போனோர் பிரச்சனை ஏனைய பல பிரச்சனைகள் தொடர்பாக பேசியிருந்தால் குறைந்தபட்சம் அரைவாசி பிரச்சனைகளையாவது தீர்த்திருக்க முடியும்.

ஆனால் இப்போது அவையும் இல்லாமல் எங்கே வந்த முடிந்திருக்கிறதென்று சொல்லிச் சொன்னால் அபிவிருத்தி கம்பரெலியா வேலைத்திட்டங்களில் தான். தமிழரசுக்கட்சியைச் சார்ந்தவர்கள் இப்போது யாழ்ப்பாணம் உட்பட வடக்கிற்கு வரக் கூடிய ஐனாதிபதி, பிரதமர், அமைச்சர்களோ எல்லோருடனும் ஓடிச் சென்று முன்கதிரையில் அமர்ந்து அபிவிருத்திக்கு தாங்களும் முன்நின்று தான் இந்த அபிவிருத்தி வருகிறதென காட்டுகிறார்களே தவிர அரசியல் ரீதியாக ஏதும் இல்லை.

ஆகவே அரசியல் ரீதியாக இந்த இணக்கப்பாட்டு அரசுடன் என்னத்தைச் சாதித்திருக்கிறார்கள் என்று அவர்களிடமே கேட்கலாம் என்றார்.

 

29..views

Leave a Reply

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

நினைவஞ்சலி

மேலும் →

சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

 

உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.