உங்கள் கருத்து

அறிவுப்புகள்

 

மீடியாக்கள்

< !-Currency Converter widget - HTML code - fx-rate.net -->< !-end of code-->

இலங்கையிலிருந்து பயங்கரவாதத்தை வேரறுக்க உதவத் தயார் – சீன ஜனாதிபதி தெரிவிப்பு.photos

இலங்கையிலிருந்து பயங்கரவாதத்தை முற்றாக வேரறுக்க அனைத்து உதவிகளையும் வழங்கத் தயாராக உள்ளதாக சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் தெரிவித்துள்ளார்.

சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் சீன ஜனாதிபதிக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று (செவ்வாய்க்கிழமை) சீன ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது. இதன்போது இலங்கையின் தற்போதைய நிலைமை உட்பட பல்வேறு விடயங்கள் பேசப்பட்டது.

அந்தவகையில், இலங்கையின் பாதுகாப்புத் துறை நடவடிக்கைகளுக்கு சீனாவிலிருந்து 260 கோடி ரூபாய் நன்கொடை, ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கமைய 150 கோடி ரூபாய் பெறுமதியான 100 ஜீப் வண்டிகள் உள்ளிட்ட வசதிகள், பயங்கரவாத மற்றும் இணையத்தள குற்றங்களை கட்டுப்படுத்துவதற்குத் தேவையான நவீன தொழிநுட்ப கருவிகளையும் அறிவையும் இலங்கைக்கு வழங்கல் உள்ளிட்ட விடயங்களில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

அத்துடன், இருநாட்டு பாதுகாப்பு பிரிவுகளின் ஒத்துழைப்புக்காக புதிய புரிந்துணர்வு ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டது.

இந்த சந்திப்பில் சீன ஜனாதிபதி தெரிவிக்கையில், உலகில் எந்த இடத்தில் கொடிய பயங்கரவாத சம்பவங்கள் தலைதூக்கினாலும் தான் அதனை வன்மையாக கண்டிப்பதாக குறிப்பிட்டார். அத்துடன், கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி இலங்கையில் இடம்பெற்ற கொடிய பயங்கரவாதத் தாக்குதல் குறித்து அதிருப்தி தெரிவித்த சீன ஜனாதிபதி, தாக்குதலினால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்தார்.

பயங்கரவாத சவாலை வெற்றிகொண்டு மீளெழும் இலங்கை மக்களுடன் சீன அரசு அனைத்து சந்தர்ப்பங்களிலும் கைகோர்த்து நிற்கும் என்று தெளிவுபடுத்திய சீன ஜனாதிபதி, அதற்காக அனைத்து சந்தர்ப்பத்திலும் தேவையான உதவிகளை வழங்குவதற்கு தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதன்போது, சீன கடன் உதவிகளினால் இலங்கையில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி செயற்திட்டங்களின் முன்னேற்றம் குறித்து இருநாட்டு தலைவர்களும் கலந்துரையாடியதுடன், அந்த அபிவிருத்தி வேலைத்திட்டங்களை விரைவில் நிறைவு செய்வது தனது நோக்கமாகும் என்று ஜனாதிபதி, சீன ஜனாதிபதியிடம் தெரிவித்தார்.

29..views

Leave a Reply

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

நினைவஞ்சலி

மேலும் →

சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

 

உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.