உங்கள் கருத்து

அறிவுப்புகள்

 

மீடியாக்கள்

< !-Currency Converter widget - HTML code - fx-rate.net -->< !-end of code-->

ஸ்ரீலங்காவில் அடுத்துவரும் நான்கு மாதங்களில் நடக்கப்போவது என்ன?

எதிர்வரும் நான்கு மாதங்களில் ஸ்ரீலங்காவின் ஆட்சியைக் கைப்பற்றுவதாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச மீண்டும் சூளுரைத்துள்ளார்.

எந்தவொரு தேர்தல் வந்தாலும் அதில் வெற்றிபெறுவது உறுதியாகிவிட்டதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஏப்ரல் 21ஆம் திகதி ஸ்ரீலங்காவில் ஐ.எஸ் தீவிரவாதிகளினால் நடத்திய கொடூரத் தாக்குதல்களில் பலியானவர்களை நினைவுகூர்ந்து அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வொன்று கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவின் உள்ளக அரங்கில் நேற்றைய தினம் மாலை நடைபெற்றது.

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவின் தலைமையில் இடம்பெற்ற இந்த அஞ்சலி நிகழ்வில் திரளான மக்கள் இணைந்து, பலியானவர்களுக்காக மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலித்தனர்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச, உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்களின் எதிரொலியாக முஸ்லிம் கிராமங்களில் இடம்பெற்ற தாக்குதல்களை பௌத்த மக்களே செய்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் சித்தரிப்பதற்குப் பின்னால் மிகப்பெரிய சூழ்ச்சியொன்று இருப்பதாக குற்றஞ்சாட்டினார்.

நாங்கள்தான் குறுகிய காலத்தில் தீவிரவாதத்தை முடிவுறுத்தினோம். தற்போது மக்கள் கூட்டங்களுக்கு செல்வதில்லை, விகாரைகளுக்கு செல்வதில்லை. பௌத்த மக்கள் மற்றும் ஏனைய மக்களின் நிலை இதுவாகும். மறுபுறத்தில் ஒருசில முஸ்லிம் நபர்கள் செய்த செயற்பாட்டினால் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் சந்தேகக் கண்ணோட்டத்தோடு பார்க்கின்றனர். முஸ்லிம் தலைவர்கள், மதத் தலைவர்களுக்கு இந்த மனநிலையை மாற்றுவதற்கான மிகப்பெரிய கடமையுள்ளது. இனவாத, அடிப்படைவாத உறுப்பினர்களை உடனடியாக புனர்வாழ்வுக்கு உட்படுத்த வேண்டும். அவர்களினாலேயே இதனை செய்ய முடியும். அரசாங்கத்துக்கும் மிகப்பெரிய கடமையுள்ளது. அதனை அரசாங்கம் கைவிட்டுள்ளது.

10 வருடங்களாக சுதந்திரமாக வாழக்கிடைத்தது. விடுதலைப் புலிகளின் போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு 10 வருடங்களாகின்றன. 10 வருடப் பூர்த்திக்கு ஒருமாதத்துக்கு முன்னர் வெடிப்பு இடம்பெற்றது. குண்டுதாரிகளின் பெயர்கள், அடையாள அட்டை விபரம், விலாசம், தாக்குதல் நடத்தவுள்ள பகுதிகள் என்பனவற்றை ஏப்ரல் 04ஆம் திகதி அரசாங்கம் அறிந்துவைத்திருந்தது. 09ஆம் திகதியே பொலிஸார் அறிந்து கடிதங்கள் மூலம் அறிவிப்பு இடம்பெற்றது. தேவாலயங்கள், விகாரைகள், கோயில்களுக்கு தாக்குதல் நடத்தவிருப்பதாக தகவல் வெளியானதை முதலில் யாருக்கு சொல்ல வேண்டும்? யாருக்கும் அவர்கள் கூறவில்லை. நாட்டை நேசிக்கின்ற தலைவர் ஊடாகவே எதிர்காலத்தில் அடியெடுத்து வைக்க வேண்டும் என்கிற நம்பிக்கை உள்ளது. தலதா மாளிகை மீது மற்றும் ஏனைய விகாரைகள் மீது தாக்குதல்கள் இடம்பெற்றபோது பௌத்த மக்கள் குழப்பமடையவில்லை.

ஆனால் ஏப்ரல் தாக்குதலுக்குப் பின்னர் மினுவங்கொடை உள்ளிட்ட பல இடங்களில் தாக்குதல்கள் இடம்பெற்றன. வெளிநாட்டு ஊடகங்கள் சிங்கள பௌத்த மக்களே இதனை செய்வதாக கூறுகின்றன. சூழ்ச்சி எங்கே உள்ளது என்பதை மக்கள் அறிவார்கள். எனவே இன்னும் 4 மாதங்களில் இந்த அரசின் ஆயுட்காலம் முடிவடைந்துவிடும். எந்த தேர்தல் வந்தாலும் நாம் வெற்றிபெறுவது உறுதி. எமது ஆட்சியின்கீழ் மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என்றார்.

49..views

Leave a Reply

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

நினைவஞ்சலி

மேலும் →

சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

 

உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.