உங்கள் கருத்து

அறிவுப்புகள்

 

மீடியாக்கள்

< !-Currency Converter widget - HTML code - fx-rate.net -->< !-end of code-->

அமெரிக்க கனவு சிதைந்து கரையொதுங்கிய தந்தை, மகளின் சடலம்! – உருக்கமான பதிவு. படங்கள்,,

மெக்சிக்கோவில் இருந்து அமெரிக்காவிற்கு எல்லையோர ஆற்றைக் கடந்து செல்லும் முயற்சியில், 25 வயது இளைஞரும், அவரது 2 வயது நிரம்பாத மகளும் உயிரிழந்தனர். தந்தையின் சட்டைக்குள் உடல்புதைத்து, அவரது கழுத்தைப் பற்றியபடி குழந்தையும் சடலமாகக் கரை ஒதுங்கிக் கிடக்கும் புகைப்படம் பார்ப்போர் இதயங்களை உலுக்கும் வகையில் அமைந்துள்ளது. எல்சால்வடார் நாட்டைச் சேர்ந்த 25 வயது இளைஞரான மார்ட்டினஸ் (Martinez) மனைவி தனியா வனேசா அவலோஸ் (Tania Vanessa Avalos) 2 வயது நிரம்பாத அவரது மகள் வலேரியா (Valeria) ஆகிய மூவரும் கடந்த வார இறுதியில், அமெரிக்க எல்லையை ஒட்டி அமைந்துள்ள, மெக்சிக்கோவின் மட்டமோரோஸ் நகருக்கு வந்துள்ளனர்.

பிழைப்புக்கு வழிதேடி அமெரிக்காவில் தஞ்சமடைய வந்த அவர்களுக்கு, சர்வதேச எல்லையில் இருந்த பாலம் திங்கட்கிழமை வரை மூடப்பட்டிருக்கும் என்ற செய்தி மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. ரியோ கிராண்டே (Rio grande) ஆற்றின் கரை வழியே சென்ற அவர்கள், இக்கரையில் நீரின் ஓட்டம் அமைதியாக இருப்பதால் கடந்து சென்று அமெரிக்காவில் கரையேறிவிடலாம் எனக் கருதி இறங்கியுள்ளனர்.

மகளை முதுகில் சட்டைக்குள் வைத்துக் கொண்டு நீச்சலடித்து சென்றுள்ளார் மார்ட்டினஸ். ஆனால் அக்கரையை நெருங்க நெருங்க சுழலோட்டத்துடன் சீற்றமாகக் காணப்பட்ட நீரில் தாக்குப் பிடிக்க முடியாமல் மார்ட்டினஸ் திணறியுள்ளார். பின்னால் நீந்தியபடி சென்ற மனைவி இதை தூரத்தில் இருந்து பார்த்துவிட்டு மெக்சிக்கோ கரைக்கே திரும்பி விட்டார்.

ஆனால், கணவர் மார்ட்டினசும், அவரது சட்டைக்குள் உடல் புதைத்தபடி மகள் வலேரியாவும் உயிரிழந்து சடலமாகத்தான் கரையொதுங்கியுள்ளனர். Julia Le Duc என்ற பத்திரிக்கையாளர் இதை படம் எடுத்து வெளியிட்டுள்ளார். வளமான நாடுகளுக்கு புலம்பெயர்ந்து சென்று பிழைக்க வழிதேடும் ஏழைகளின் துயரத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாகவும் இந்த புகைப்படம் அமைந்துள்ளது.

போர், புலம்பெயர்வு, பஞ்சம் போன்றவற்றால் பாதிக்கப்படும் மக்களின் வேதனைகளை, அதன் துயரம் மாறாமல் உலக்கு எடுத்துச் சொன்ன பல புகைப்படங்கள் உள்ளன. சூடானில் பசியால் வாடி குற்றுயிரும் குலையுயிருமாக கிடக்கும் குழந்தையின் அருகே உண்ணக் காத்திருக்கும் கழுகு, சிரியாவில் விமான தாக்குதலில் தரைமட்டமாக்கப்பட்ட சிதை கூளங்களில் இருந்து ரத்தம் சொட்ட சொட்ட மீட்கப்பட்ட குழந்தை போன்ற புகைப்படங்களில் வரிசையில் தற்போது இந்த படமும் சேர்ந்துள்ளது.

இதனிடையே, அமெரிக்காவுக்கு புலம்பெயரும் முயற்சியில் தந்தையும், குழந்தையும் உயிரிழந்து கிடக்கும் புகைப்படத்தை பார்ப்பதை தான் வெறுப்பதாக அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். குழந்தையோடு உயிரிழந்து கிடக்கும் அந்த தந்தை மிகச்சிறந்த இளைஞராக இருந்திருக்கலாம் எனவும் அவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

அதேசமயம், அமெரிக்காவுக்குள் ஊடுருவ முயற்சி செய்பவர்களை தடுக்க, மெக்சிக்கோ எல்லையில் பாதுகாப்பு சுவர் எழுப்பும் திட்டத்திற்கு ஆதரவு தர மறுக்கும் ஜனநாயகக் கட்சியினரை டிரம்ப் விமர்சித்துள்ளார். இதுவே, சட்டவிரோதமாக புலம்பெயர்பவர்களின் மரணத்திற்கு காரணம் என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

129..views

Leave a Reply

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

நினைவஞ்சலி

மேலும் →

சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

 

உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.