உங்கள் கருத்து

அறிவுப்புகள்

 

மீடியாக்கள்

< !-Currency Converter widget - HTML code - fx-rate.net -->< !-end of code-->

ஓடும் ரெயிலில் கழிவறை என நினைத்து வாசல் கதவை திறந்த பெண் கீழே விழுந்து படுகாயம்!

பெங்களூர் கண்டோன் மெண்ட் பகுதியை சேர்ந்தவர் நடராஜன். இவரது மனைவி உமாதேவி (வயது 50). சென்னை வந்த அவர் நேற்று இரவு மைசூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் புறப்பட்டு சென்றார். வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கண்ணடிகுப்பம் அருகே இரவு 12.30 மணிக்கு ரெயிலில் சென்று கொண்டிருந்தது. அப்போது அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த உமாதேவி கழிவறைக்கு செல்ல எழுந்தார். தூக்க கலக்கத்தில் இருந்த அவர் ரெயிலில் கழிவறைக்கு சென்றார். அப்போது கழிவறை கதவு என நினைத்து வாசல் கதவை திறந்துவிட்டார்.

இதில் கால் தடுமாறிய அவர் வாசலில் இருந்து தவறி கீழே விழுந்தார். முதுகு, கால்களில் படுகாயம் அடைந்த அவர் தண்டவாளத்தின் அருகில் எழுந்திருக்க முடியாமல் கிடந்தார். காப்பாற்றுமாறு கூச்சலிட்டு கொண்டே இருந்தார்.

இன்று காலை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் உமாதேவி படுகாயமடைந்து கிடப்பதை கண்டு திடுக்கிட்டனர். இதுபற்றி ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் 108 ஆம்புலன்சு மூலம் ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இதுபற்றி அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் ஆம்பூர் வந்தனர். உமாதேவியை வேலூர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

உமாதேவி அதிகம் நகை அணிந்திருந்தார். நள்ளிரவு 12.30 மணிமுதல் காலை வரை தண்டவாளத்தின் அருகில் கிடந்தாலும் அவரது நகை பத்திரமாக இருந்தன. காயமடைந்து மயங்கி கிடந்த பெண்ணை நகைகளுடன் பத்திரமாக மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்த பொதுமக்களுக்கு போலீசார் பாராட்டு தெரிவித்தனர்.

72..views

Leave a Reply

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

நினைவஞ்சலி

மேலும் →

சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

 

உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.