உங்கள் கருத்து

அறிவுப்புகள்

 

மீடியாக்கள்

நரகமாய் மாறிய இரவுகள்: ஒரு பெண்ணின் உண்மை சம்பவம்!

இந்த உலகில் பாலியல் தொழிலாளிகளாக இருக்கும் பெண்கள் எவரும், அந்த தொழிலை ஆசைப்பட்டு ஏற்றுக்கொள்ளவில்லை.

மாறாக, பல்வேறு சந்தர்ப்ப சூழ்நிலைகளின் காரணமாகவே இந்த நிலைக்கு ஆளாகின்றனர். அலங்காரம் செய்துகொண்டு தங்களை தேடி வரும் வாடிக்கையாளர்களை திருப்திபடுத்தும் அவர்களுக்கு பின்னால் சில அலங்கோலமான சம்பவங்களும் உள்ளன.

குடும்ப வறுமை, சமுதாயத்தில் அனுபவிக்கும் சித்ரவதைகள், சில பெண்கள் கடத்தப்பட்டும் இந்த பாலியல் தொழிலுக்கு தள்ளப்படுகின்றனர்.

குறிப்பாக, இந்தியா போன்ற நாடுகளில் பெண்கள் கடத்தப்பட்டு பாலியல் தொழிலுக்கு உட்படுத்தப்படுகின்றனர். அதன்பின்னர், அந்த தொழிலுக்கு தங்களை பழக்கப்படுத்திக்கொள்ளும் பெண்களின் மனம் பாலியல் தொழிலை விட்டு வெளியேற மறுக்கிறது. காரணம், நான் ஒரு பாலியல் தொழிலாளி என்று தெரிந்தால், இந்த சமூகம் நம்மை ஏற்றுக்கொள்ளுமா? என்ற கேள்வியே அவர்களின் மனதில் ஏற்படுகிறது.

இதில், விதிவிலக்காக சில பெண்களும் இருக்கத்தான் செய்கின்றன. அந்த தொழிலை விட்டு வெளியே வந்து, சமூகத்தில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிகொண்டு வெற்றிநடை போடும் பெண்கள் பலர்.

அப்படி, தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து ஒரு மங்கை எழுதிய மடல்தான் இது.

குவாரா என்பது என்னுடைய பெயர். பெற்றோர்களின் செல்லப்பிள்ளையாக வளர்ந்த நான் 12 வயதை பூர்த்தி செய்திருந்தேன்.

ஒரு நாள் எனது வீட்டிற்கு அருகில் நடந்துசென்றுகொண்டிருந்தபோது, 5 பேர் அடங்கிய கும்பலால் கடத்தப்பட்டேன். அதன்பின்னர் கண்விழித்து பார்த்தபோது, ஒரு பங்களாவில் இருந்தேன்.

கண்விழித்த என்னால், சற்றும் கூட அசையமுடியவில்லை, அந்த அளவுக்கு எனது உடல் பலவீனமாக இருந்தது. ஆனால் எனக்கு என்ன நடந்து என்பதை அப்போது உணரமுடியவில்லை.

நாலைந்து பெண்கள் ஒன்று சேர்ந்து எனது உடலை சுத்தப்படுத்தினர். நான் இருந்து ஒரு ஷேக் வீடு என்பது எனக்கு தெரியவந்தது. அவர் என்னை ஒரு வாரம் தனது வீட்டில் வைத்திருந்து, அவருக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் என்னை பலாத்காரம் செய்தார்.

இதில், எனது உடல் பலவீனமடைந்ததால் மருத்துவர் வரவழைக்கப்பட்டு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் பின்னர், ஒரு வாரம் கழித்து நான் வேறொரு நபரின் வீட்டில் இருந்தேன்.

அதுவும் ஒரு பெரிய பங்களாவாக இருந்தது. அந்நபரின் வீட்டில் சுமார் 1 மாதகாலம் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானேன். அங்கு என்னை விட வயதில் மூத்த பெண்களும் வந்து செல்வார்கள்.

ஆனால், நான் மட்டும்தான் அங்கு நிரந்தரமாக தங்கியிருந்தேன். நான் வயதில் சிறிய பெண் என்பதால் அங்கு வரும் வயதில் மூத்த பெண்கள் என்னை பார்த்து பரிதாபப்படுவார்கள்.

நான் அனுபவிக்கும் வேதனைகளை அவர்களால் உணரமுடிந்ததே தவிர, ஒன்றும் செய்ய இயலவில்லை. என்னுடைய ஒவ்வொரு இரவுகளும் நரகமாய் கழிந்தன.

இப்படி, பல்வேறு ஆண்களுக்கு பல இரவுகள் இரையாக்கப்பட்ட எனக்கு 17 வயதானது. சுமார் 5 வருடங்கள் பாலியல் தொழிலாளியாக பயன்படுத்தப்பட்ட நான், எங்கு இருக்கிறேன் என்பது தெரியவில்லை.

ஒருமுறை நான் இருந்த பகுதிக்கு பெண் பொலிஸ் ஒருவர் வந்து என்னை அடித்து உதைத்தார். அவர் எதற்காக என்னை அடிக்கிறார் என்பது தெரியாமல், சத்தம்போட்டு அழுதேன். அவர் என்னிடம் உனது பெயர் என்ன என்று கேட்டார்.

அதன் பின்னர், நீ இங்கிருந்து செல்ல விரும்புகிறாயா? என கேள்வி எழுப்பினார். அப்போது தான் நான், 12 வயதில் கடத்தப்பட்ட விவரத்தை அவரிடம் கூறினேன்.

அதன்பின்னர், எனது சொந்த ஊரான ஹைதராபாத்திற்கு என்னை அழைத்து சென்றனர். ஆனால் அங்குதான் எனக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது, நான் காணமால் போனதை தாங்கிகொள்ள முடியாத எனது தாய் முறையாக உணவு சாப்பிடாதா காரணத்தால் உடல் நலம் குன்றி இறந்துபோயுள்ளார். எனது தந்தையும் தற்கொலை செய்துகொண்டார் என்று தகவலை கேட்ட எனக்கு இந்த உலகில் நாம் இனி வாழ்ந்து என்ன பயன் என்று தோன்றியது.

அதன்பின்னர், தன்னார்வ தொண்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்ட எனக்கு அவர்கள், மனநல ஆலோசனை வழங்கினார்கள். கணனி மையம் ஒன்றில் கணனி பயின்ற நான் தற்போது அங்கு ஆசிரியையாக பணியாற்றுகிறேன்.

இந்த சந்தர்ப்பத்தில் தான் எனக்கு ராகுலின் அனுபவம் கிடைத்தது. என்னோடு நன்றாக பழகிய அவருக்கு என்னுடைய குணநலன்கள் பிடித்துவிட்டதால் என்னை திருமணம் செய்துகொள்ள ஆசைப்பட்டார்.

எனது பழைய வாழ்க்கைய பற்றி அறிந்திருந்தும், அதனை அவர் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இருப்பினும் திருமண உறவிற்கு என் மனம் இடம்கொடுக்க மறுக்கின்றது.

எனது பழைய வாழ்க்கையை மறந்து புதிய வாழ்க்கைக்குள் நான் அடியெடுத்து வைத்துவிட்டாலும், சில நேரங்களில் நான் ஒரு பங்களாவில் இருப்பது போன்று எனக்கு தோன்றி, பழைய வாழ்க்கையை எனக்கு ஞாபகப்படுத்துகிறது.

அதிலிருந்து, முற்றிலும் வெளிவரவேண்டும் என்பதே எனது விருப்பமாக உள்ளது. இதனால் ராகுலை திருமணம் செய்துகொள்ளவும் எனக்கு விருப்பமில்லை. என்னை சூழ்ந்துகொண்டிருக்கும் இருட்டிய எண்ணங்கள் என்னை விட்டு விலகும்வரை, விடியலை தேடி எனது வாழ்க்கை பயணித்துக்கொண்டிருக்கும்.

467..views

Leave a Reply

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

நினைவஞ்சலி

மேலும் →

சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

 

உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.