உங்கள் கருத்து

அறிவுப்புகள்

 

மீடியாக்கள்

< !-Currency Converter widget - HTML code - fx-rate.net -->< !-end of code-->

இளைஞர்களைக் கொன்றவர்களுக்கு தற்போதைய அரசாங்கத்தில் உயர் பதவி: மஹிந்த

இளைஞர்களைக் கொன்றவர்களுக்கு தற்போதைய அரசாங்கத்தில் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளதென எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பு தாமரைத் தடாக அரங்கில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மஹிந்த மேலும் கூறியுள்ளதாவது, “1989 ஆம் ஆண்டுகளில் எம்பிலிப்பிட்டியவிலிருந்து பட்டலந்தை வரை பல இடங்களில் சித்திரவதை முகாம் இருந்ததை கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்தக் கால கட்டத்தில்தான் மனித உரிமைகள் என்ற வார்த்தையை முதன் முதலில் அறிமுகம் செய்தோம்.

இளைஞர்கள் ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும் எமது காலத்தில் இளைஞர்கள் கொல்லப்பட்டமைக்கு நீதியை பெற்றுக்கொடுத்தோம்.

மேலும் யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வந்தமையே இளைஞர்களுக்கு வழங்கிய பாரிய சேவையாக நாம் கருதுகின்றோம்.

ஆனால் தற்போது இந்த அரசாங்கம் முன்னெடுக்கும் செயற்பாட்டினால் பாரிய பிரச்சினைக்கு முகம்கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் இளைஞர்களை தேடித் தேடி கொலை செய்தவர்களுக்கும் சித்திரவதை செய்தவர்களுக்கும் அன்று முறையான தண்டனை வழங்கியிருந்தால் இந்த அரசாங்கத்தைக் கொண்டு நடத்த தலைவரும் அமைச்சர்களும்  இருந்திருக்க மாட்டார்கள்.

அத்துடன் அன்று சித்திரவதைக்கு உள்ளானவர்களும் அதற்கு எதிராக குரல் கொடுத்தவர்களும் இன்று ஓரணியில் திரண்டுள்ளனர்.

மேலும் கடந்த காலங்களில் இளைஞர்களை மீட்ட நாம்  இன்று அவதிப்பட்டு வருகின்றோம்” என தெரிவித்துள்ளார்.

63..views

Leave a Reply

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

நினைவஞ்சலி

மேலும் →

சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

 

உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.