உங்கள் கருத்து

அறிவுப்புகள்

 

மீடியாக்கள்

கனடாவில் இரண்டுவாரங்களுக்கு முன்னரேயே தர்ஷிகாவை கொலைசெய்யப்போவதாக அச்சுறுத்திய முன்னாள் கணவன் :

கனடாவில் வேலைக்கு சென்றுவிட்டு திரும்பி வந்தநிலையில் பட்டப்பகலில் வீதியில் வைத்து வெட்டி படுகொலை செய்யப்பட்ட இலங்கை தமிழ் பெண்ணை கொலை செய்யவுள்ளதாக

அவரது முன்னாள் கணவன் முன்னரே அச்சுறுத்தல் விடுத்ததாக அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

பிரபல கனேடிய பத்திரிகை ஒன்று இந்த தகவலை தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

தர்ஷிகாவை கொலை செய்வதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னரேயே , அவரது முன்னாள் கணவன் சசிகரன், தர்ஷிகாவின் சகோதரனிடம் அவரை கொல்லப்போவதாக அச்சுறுத்தியுள்ளார்.

இந்த நிலையில் அவர் அச்சுறுத்தல் விடுத்து இரண்டு வாரங்கள் கழித்து அலுவலகம் சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்த தர்ஷிகா, பேருந்து நிலையத்திலிருந்து Meadowvale சாலையிலுள்ள தனது வீட்டை நோக்கி நடந்து கொண்டிருக்க, அவரை கொலை செய்வதற்காக வழியில் காத்திருந்துள்ளார் சசிகரன்.

பின்னர் தர்ஷிகாவை துரத்தி கத்தியால் வெட்டிய சசிகரன், அவரது தலை முதல் கால் வரை பல இடங்களில் மிருகத்தனமாக வெட்டியிருக்கிறார்.

தர்ஷிகா வெட்டப்பட்டு உயிரிழந்து தரையில் விழுந்து கிடந்த நிலையிலும் தொடர்ந்து அவர் ஆவேசமாக வெட்டியதாக அந்த கனேடிய பத்திரிகை தெரிவித்துள்ளது.

கொலை செய்துவிட்டு தப்பியோடிய சசிகரன், இரத்தம் தோய்ந்த உடையுடன் பொலிஸ் நிலையத்தில் சரணடையும்போதும் கடுமையான போதையிலிருந்ததாகவும், தன்னை கைது செய்ய முயன்ற பொலிசார் ஒருவரை குத்த முயன்றதாகவும் அந்த பத்திரிகை மேலும் தெரிவித்துள்ளது.

257..views

Leave a Reply

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

நினைவஞ்சலி

மேலும் →

சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

 

உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.