உங்கள் கருத்து

அறிவுப்புகள்

 

மீடியாக்கள்

< !-Currency Converter widget - HTML code - fx-rate.net -->< !-end of code-->

யுத்தத்தில் இரு கண்களையும் காலையும் இழந்து வாழ்வாதாரத்திற்காக ஏங்கி நிற்கும் முன்னாள் போராளி!

இலங்கையில், 2007 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது நேரடியாக பாதிக்கப்பட்டு இரண்டு கண்களையும் ஒரு காலையும் இழந்த நிலையில்

வெள்ளாங்குளம் கணேசபுரத்தை சேர்ந்த முன்னாள் போராளியான இராமையா புஷ்பரெட்ணம் வறுமையான நிலையில், செய்வதறியாது வாழ்ந்து வருகின்றார்.

இரண்டு பிள்ளைகளுடன் மனைவியின் துணையோடு வாழ்ந்து வரும் இராமையா புஷ்பரெட்ணம் யுத்தம் நடைபெற்ற போது இரு கண்கள் மற்றும் காலை இழந்தார். யுத்தம் நிறைவடந்த பின்னர் தற்போது கணேசபுரம் வெள்ளாங்குளம் பகுதியில் மீள் குடியேறி வசித்துவருகின்றார்.

மீள்குடியேறிய நிலையிலும் தொடர்சியாக பல்வேறுபட்ட சிரமங்கள் மற்றும் பொருளாதார கஸ்ரத்தின் மத்தியில் போரட்ட நினைவுகளை சுமந்தவாறு வாழ்கையை கொண்டு செல்கின்றார். இவர்கள் சில நேரங்களில் ஒரு வேளை உணவுடனே உறங்க போகும் நிலையும் உள்ளது.

இந்த நிலையில், இராமையா புஷ்பரெட்ணத்தின் வாழ்வாதரத்திற்கென பிரதேசசெயலகம் ஊடாக சில கோழி குஞ்சுகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனாலும் பார்வை உள்ளவர்களே ஒழுங்காக பராமரிக்க முடியாத கோழிக் குஞ்சுகளை பராமரித்து வாழ்வாதரத்தை கொண்டு செல்லலாம் என்று நம்பிய அவருக்கு, ஏமாற்றமே மிஞ்சியது. நோய் காரணமாகவும் கன மழை காரணமாகவும் அனைத்து கோழிக் குஞ்சுகளும் இறந்து விட்டன. தற்போது வெறும் கோழி கூட்டை மட்டுமே வைத்திருக்கின்றனர்.

அதேவேளை, மதிய உணவுக்காக திரிபோசாவுடன் வாசலின் நின்றவாறு வீதியைப் பார்த்துக் கொண்டு இருக்கும் முன்னாலள் போராளியின் மகன், குடும்ப வறுமை காரணமாக அம்மம்மா வீட்டில் தங்கியிருக்கும் மகள், அவருடைய மனைவி தன்னையும் கவனித்துக் கொண்டு 5 வயது மகனையும் கவனித்து பார்வையற்ற கணவனின் தேவைகளையும் பூர்த்தி செய்து கொண்டு காலத்தை கழிக்கின்றார்.

கொடுமையான வறுமை காரணமாக கண்கள் இல்லை கால் இல்லை என்றாலும், ஒருவேளை உணவுக்காக என்றாலும் உழைக்க வேண்டும் என தற்போது தோட்ட செய்கையில் ஈடுப்பட்டு வருகின்றார். அதுவும் மனைவியின் துணையின்றி முடியமல் போகின்றது.

தற்போது மருத்துவச் செலவும் அதிகரித்து வருவதால் என் செய்வது என்று அறியாமல் திண்டாடும் புஷ்பரெட்ணம் பார்வையற்றவர்கள் செய்யக் கூடிய ஏதவது தொழிவாய்ப்பை என்றாலும் செய்வதற்கான உதவியை கோரு நிற்கின்றார்.

23..views

Leave a Reply

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

நினைவஞ்சலி

மேலும் →

சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

 

உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.