உங்கள் கருத்து

    அறிவுப்புகள்

     

    மீடியாக்கள்

    கோட்டாபய ஆட்சிபீடம் ஏறினால் தமிழ் மக்களுக்கு எதிரான இனவன்முறைகள் தலைவிரித்தாடும்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

    ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச வெற்றிபெற்று ஆட்சிபீடம் ஏறினால் சிறுபான்மையின சமூகங்களான தமிழ் –

    முஸ்லீம் மக்களுக்கு எதிரான இனவன்முறைகள் தலைவிரித்தாடும் என்று நவ சம சமாஜக் கட்சியின் தலைவர் எச்சரித்திருக்கின்றார்.

    இதனால் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிறேமதாசவை வெற்றிபெறச் செய்வதற்கு ஜனநாயகத்தை மதிக்கும் அனைத்துத் தரப்பினரும் முன்வர வேண்டும் என்றும் நவ சம சமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன அழைப்பு விடுத்துள்ளார்.

    கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இந்தக் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

    மேலும் “கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சி உருவாகுமானால் இந்த நாட்டில் அழிவு உருவாகும் என்பதை உலகின் எல்லா பகுதிகளிலும் கேட்கக்கூடிதாக இருக்கின்றது. ஆகவே அந்த அனர்த்தத்திற்குள் இந்த நாடு விழுவதற்கு இடமளிக்க வேண்டாமென நாம் அனைத்து ஜனநாயகவாதிகளுக்கும் அழைப்பு விடுக்கின்றோம். எமது வெற்றி அருகில் இருக்கின்றது என்பதை அறியக்கூடியதாக இருக்கின்றது.

     

     

    சஜித் பிரேமதாசவின் கூட்டங்களுக்கு வரும் கூட்டத்தை வைத்து இதனை அறிந்துகொள்ளமுடியும். கடந்த காலங்களில் நாம் அழிவுகளை சந்தித்தோம். பள்ளிவாசல்களை தாக்கினார்கள். இதற்கு வழி வகுத்தது யார்? மேலே இருந்து குழு ஒன்று அவர்களை வழி நடத்தியது. இன்று அதனை தெரிந்துகொள்ள முடிந்துள்ளது. புலானாய்வுப் பிரிவு தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் இவ்வாறான ஒரு சோகம் இடம்பெறப் போவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் அதனை கருத்திற்கொள்ளாது, அதனை எமது பிரதமருக்கும், பாதுகாப்புத் தரப்பிற்கும் அறியத்தராது தடுத்தது யார் என்பதை ஆராய வேண்டும்”.

     

    இனவாதத்தையும், மதவாதத்தையும் தூண்டி வன்முறைகளை கட்விழ்த்துவிட துடிக்கும் தரப்பினரே நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பில் பேசிவருவதாகவும் குற்றம்சாட்டிய கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன, சிங்களவர்கள் என்றும் பௌத்தர்கள் என்றும் தம்மை அடையாளப்படுத்திக்கொண்டு குழப்பம் விளைவிப்பவர்கள் தோற்டிக்கப்பட வேண்டும் என்றால் சஜித் பிறேமதாச வெற்றிபெற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

    “இனவாதிகளும், மதவாதிகளும்தான் நாட்டின் பாதுகாப்புத்

    தொடர்பில் இன்று கத்துகின்றனர். நாட்டின் பாதுகாப்பு எங்கு உறுதிப்படுத்த வேண்டும். எமது அண்டைய நாடுகள் மூலமாகவே எமது நாட்டிற்கு பாதுகாப்பு கிடைக்கின்றது. எனினும் அவர்களுடனும் இன்று குரோதத்தை ஏற்படுத்தும் வகையில் இவர்கள் செயற்படுகின்றனர். அந்த நாடுகளில் தமிழர்கள், முஸ்லிம்கள் வாழ்கின்றார்கள். எமது நாட்டிலும் அவர்கள் சிறுபான்மையினராக அவர்கள் வாழ்கின்றார்கள். அவர்கள் தொடர்பில் தவறான கருத்துக்களை வெளியிட்டு சிங்களவர்கள் என்ற பெயரில் முன்னிற்கின்றார்கள். சிங்களவர்களா இவர்கள்?. சிங்கள பௌத்தர்களின் வரலாறு இதுவா? எனக் கேட்கத் தோன்றுகின்றது. சிங்கள பௌத்தர்களின் வரலாறு கொலை செய்வதா? இதுவே எமது பிரச்சினை? இந்த இனவாத, மதவாத அமைப்புகளே இன்று முன்னிலையாகியுள்ளன. அதனை தோற்கடித்து சஜித் பிரேமதாசவை வெற்றிபெறச் செய்ய வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.

     

    202

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    நினைவஞ்சலி

    மேலும் →

    சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

     

    உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.