உங்கள் கருத்து

அறிவுப்புகள்

 

மீடியாக்கள்

இலங்கையில் இதுவரை 5 பேர் பலி! தொடரும் ஆபத்து! அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை

சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை ஐவர் உயிரிழந்ததுடன் 10 பேர் காயமடைந்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

பதுளை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.இதே வேளை 5660 குடும்பங்கள் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டுள்ளதோடு சுமார் 700 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது.

அத்துடன் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். மேல், மற்றும் தென் மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் கரையோரப் பகுதிகளில் காலை வேளையிலும் மழை பெய்யக் கூடும.மேல், மத்திய, சப்ரகமுவ, வடமேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களில்; 75 தொடக்கம் 100 மில்லி மீற்றர் அளவான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மின்னல் தாக்கங்களினாலும் பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும். மன்னாரிலிருந்து புத்தளம், கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக மட்டக்களப்பு வரையான கடற்பரப்புகளில்; பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இரத்தினபுரி மாவட்டத்தின் பலாங்கொடை, இம்புல்பே மற்றும் ஓப்பநாயக்க பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளுக்கும், பதுளை மாவட்டத்தின் ஹல்துமுல்ல பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளுக்கும் கோகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட மற்றும் யட்டியாந்தோட்டை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் இருக்குமென தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் கூறியுள்ளது..

மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள் பகுதிகளில் வாழும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் சுட்டிக்காட்டியுள்ளது.

117..views

Leave a Reply

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

நினைவஞ்சலி

மேலும் →

சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

 

உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.