உங்கள் கருத்து

அறிவுப்புகள்

 

மீடியாக்கள்

ஈழத்து தமிழர் எஸ்.ஆர்.குணா அவர்களது “வாண்டு” திரைப்படம் ரொறோண்டோவில் நவம்பர் 9ம் திகதி திரையேறுகிறது! phothos

ஈழத்து தமிழர் எஸ் ஆர் குணா அவர்கள் தமிழகம் சென்று பலதரப்பட்ட போராட்டங்களை கடந்து தன்னை ஒரு சிறந்த நடிகனாகவும் நாயகனாகவும் உருவாகியுள்ளார் அவரது முதல் திரைப்படம் “கயிறு”

14 சர்வதேச விருதினை பெற்றதோடு அமெரிக்கா, மெக்ஸிகோ மற்றும் கல்கத்தாவில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருதினை பெற்றார், அவரின் இரண்டாவது படமான “வாண்டு” பற்றிய கதைச்சுருக்கம். வீராவுக்கு, தன் தந்தை ராஜாவைப் போலவே தானும் ஒரு தெருச் சண்டியனாக (Kick Boxing) வேண்டுமென்ற ஆசை.

ராஜாவோ, குணாவுடனான சண்டையில் காயமடைந்து படுக்கையில் கிடப்பவர். இதனால் வீராவும் தந்தையைப் போல் ஒரு தெருச் சண்டியனாக வருவதை அவனது தாயார் கடுமையாக எதிர்த்தார். அப்படியிருந்தும் வீரா ஒருவாறு சண்டைப் பயிற்சிகளை மேற்கொண்டு தெருச் சண்டியனாகிறார். அதே வேளை குணாவின் மகனான லோகுவும் தெருச் சண்டைகளில் ஈடுபடுபவர். இருவருக்கும் போட்டியும் கசப்பும் துளிர்விடுகிறது. வீராவுக்கும் லோகுவுக்குமிடையிலான பிரச்சினையில் எழுந்ததே ‘வாண்டு’ திரைப்படம்.

தெருக்களிலும், பாடசாலை விளையாட்டுத் திடல்களிலும் தமது வீரத்தைக் காட்டுவது என்பது உலகம் பூராவும் இளைய சமுதாயத்திடம் காணப்படுமொன்று. பல நூறு, ஆயிரம் வருடங்களாக வெவ்வேறு வடிவங்களில் இது வெளிப்பட்டுக்கொண்டே இருக்கிறது. புலம் பெயர்ந்த நாடுகளில் இது பல்வேறு குற்றச் செயல்களிலும் முடிந்திருக்கிறது. இளையவர்கள் தமது வீராப்பைக் காட்டுவது கவர்ச்சியான (cool) செயலாக நினைப்பதனால் ஏற்படும் விபரீதங்களை முன்னிலைப்படுத்தி ‘சண்டை பிடிப்பது அழகல்ல, சண்டைப் பயிற்சியைத் தற்பாதுகாப்புக்காக மட்டுமே பாவிக்க வேண்டும்’ என்ற நற்போதனையைச் சமூகத்திற்கு வழங்கும் நோக்கத்தோடு ‘வாண்டு‘ தயாரிக்கப்பட்டிருக்கலாம்.

இந்த பிரதான கதையோட்டத்தை விடவும் மேலும் பல உப கதைகள் / சம்பவங்கள் / பாத்திரங்கள் சமூக விழிப்புணர்வுக்காகச் சேர்க்கப்பட்டுள்ளது. வாஷன் ஷாஜி இயக்கத்தில் எஸ் ஆர். குணா கதாநாயகனாகவும் இதர முக்கிய பாத்திரங்களில் ரமா சாய் டீனா, சினு, ஷிகா, ஆல்வின் ஆகியோர் நடிக்கிறார்கள். எஸ்.ஆர்.குணா, ஒரு சண்டைப் பயிற்சி ஆசிரியர், லோகுவுக்கும் வீராவுக்கும் சண்டை கற்பிக்கிறார் (ஒரு வகையான உதை / குத்து). அபர்ணாவை (சிகா) ஆதித்யா காதலிக்கிறார். முதலாவது காட்சியில் அபர்ணா தனது தோழிகளிடம் மன்னிப்புக் கேட்கிறார் ஆனாலும் அவர்கள் அபர்ணாவை உதாசீனம் செய்துவிடுகின்றனர். ஏன் என்பதற்கான விடை தெரிய வேண்டுமானால் படம் முழுவதும் பார்த்தேயாக வேண்டும்.

வீராவுக்கு குமார் ஒரு சகோதரர். ஆணா அல்லது பெண்ணா என்பதற்குள் திண்டாடும் ஒரு பிறவி. கிடைக்கும் சந்தர்ப்பங்களில் தன்னைப் பெண்ணாக அலங்கரித்துக் கொண்டு ‘குமாரி’ என்ற பெயருடன் வலம் வருவதில் திருப்தியடைபவர். அவருடைய ‘போராட்டம்’ பிரதான கதையில் முக்கியத்துவம் பெறவில்லையாயினும் ஒரு வகையில் தொடுக்கப்பட்டிருக்கிறது. மோஹன் ராஜா பாட்டெழுத ஏ.ஆர். நேசன் இசையமைத்திருக்கிறார். ஒளிப்பதிவை ரமேஷும் வி.மஹேந்திரனும் கையாண்டிருக்கிறார்கள். கனடாவில், ரொறோண்டோவில் (1530 Albion Rd. Etobicoke, ON M9V 1B4) அல்பியன் சினிமாவில் நவம்பர் 9ம் திகதி பி.ப. 12:30 க்கு ‘வாண்டு’ திரையேறுகிறது. பார்த்துவிட்டுக் கருத்துக்களைப் பதியுங்கள்.

102..views

Leave a Reply

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

நினைவஞ்சலி

மேலும் →

சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

 

உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.