உங்கள் கருத்து

    அறிவுப்புகள்

     

    மீடியாக்கள்

    கொரோனா வைரஸினால் பலியான இளைஞன்! முதலாவது குறைந்த வயது மரணம் பதிவானது,,

    கொரோனா வைரஸ் தாக்கத்தினால் 18 வயது இளைஞன் பலியாகியிருப்பதனையடைந்து, பிரித்தானியாவில் முதல் குறைந்த வயது மரணம் பதிவாகியுள்ளது.

    சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகில் 186 நாடுகளுக்குப் பரவியிருக்கிறது. சீனாவை விடவும் இத்தாலியில் அதிகளவான மரணங்கள் பதிவாகியிருக்கின்றன.

    இந்நிலையில் பிரித்தானியாவில், கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு தற்போது வரை 281 பேர் உயிரிழந்துள்ளனர் என அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

    இதற்கிடையில், 18 வயது இளைஞன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ள நிலையில் இந்த கொடிய வைரஸால் நாட்டில் உயிரிழந்த இளம் வயது நபர் இவர் தான் என அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

    பிரித்தானியாவின் கொவன்றி நகரை சேர்ந்த இளைஞனே இவ்வாறு கொரோனாவிற்கு பலியாகியிருக்கிறான். கொரோனாவால் இதுவரை பிரித்தானியாவில் 5,683 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    இதேவேளை, கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பிரித்தானியாவில் உயிரிழந்தவர்களில் 18 வயது நபர் மிக இளையவர் எனவும், 102 வயது நபர் மிக வயதானவர் எனவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    முன்னதாக மூன்று வயதிற்கு குறைவானவர்களுக்கும், அதிக வயதுள்ளவர்களுக்குமே கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது, 18 வயது இளைஞன் பலியாகியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

     

    199

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    நினைவஞ்சலி

    மேலும் →

    சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

     

    உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.