உங்கள் கருத்து

    அறிவுப்புகள்

     

    மீடியாக்கள்

    நள்ளிரவில் இடம்பெற்ற பாரிய கொள்ளை! நீதவான் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை.

    அம்பாறை மாவட்டம் காரைதீவு பகுதியில் கடந்த 15.5.2020 அன்று நள்ளிரவு வீடு ஒன்றில் 11 இலட்சம் பெறுமதியான தங்கம் உள்ளிட்ட பொருட்கள் திருடர்களால் களவாடி செல்லப்பட்டிருந்தன.

    இவ்வாறு களவாடப்பட்டமை தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு அமைய சம்மாந்துறை பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டிருந்தனர்.

    குறித்த கொள்ளை இடம்பெற்ற வீட்டில் இருந்து சுமார் 500 மீற்றர் தொலைவில் மற்றுமொரு வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டிவி காணொளி பதிவுகளை விசாரணைக்காக தந்துதவுமாறு உரிமையாளரிடம் பொலிஸார் கேட்டிருந்தனர். அந்த வீட்டின் உரிமையாளர் பொலிஸரின் கடமைக்கு இடையூறு செய்யும் வகையில் நடந்து கொண்டதுடன் சி.சி.டிவி பதிவுகளை வழங்காது பொலிஸாருக்கு ஒத்துழைப்பு வழங்கவும் மறுத்துவிட்டார்.

    இவ்வாறு பொலிஸாரின் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க மறுத்தவருக்கு எதிராக சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றில் குறித்த வீட்டு உரிமையாரருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது.

    இதன் போது மன்றில் வழக்கிற்காக முன்னிலையான வீட்டு உரிமையாளரான பிரதிவாதியிடம் உடனடியாக சி.சி.டிவி அனைத்தையும் விசாரணைக்காக காண்பிக்கும் படியும் அதை காண்பிக்க தவறும் பட்சத்தில் வீட்டு உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கபடும் எனவும் பதில் நீதிமன்ற நீதிவான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இதனடிப்படையில் சம்மாந்துறை பொலிஸார் வீட்டில் உள்ள சி.சி.டிவி பதிவுகளை பரிசோதனைக்கு உட்படுத்த உள்ளனர். மேலும் மேற்கொள்ளப்பட்ட களவு தொடர்பில் சி.சி.டிவி பதிவுகளை பரிசோதனை செய்து அதன் அறிக்கையினை எதிர்வரும் மே 27 ஆம் திகதி மன்றிற்கு அறிக்கையிடுமாறு பதில் நீதிமன்ற நீதிவான் கட்டளையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

     

    46

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    நினைவஞ்சலி

    மேலும் →

    சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

     

    உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.