உங்கள் கருத்து

    அறிவுப்புகள்

     

    மீடியாக்கள்

    லண்டனில் பாரிய நிதி மோசடி -சிறையில் அடைக்கப்பட்டனர் இரண்டு இந்தியன் தமிழர்கள்,,photo

    லண்டனில் இருந்து கொண்டு சர்வதேசரீதியாக பாரிய நிதி மோசடியில் ஈடுபட்ட இரண்டு தமிர்கள் சிறையில் அடைக்கப்படட்டனர்.

    விஜயகுமார் கிருஷ்ணசாமி(வயது 32 )மற்றும் சந்திரசேகர் நல்லாயன் (வயது 44 ) ஆகிய இரண்டு இந்திய தமிழர்களே சிறையில் அடைக்கப்பட்டவர்களாவர்.

    குறித்த இருவரும் இணைந்து 2.4 மில்லியன் பவுண்டுகள் சட்டவிரோத பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டதோடு, £1.6 மில்லியன் பணமோசடியில் ஈடுபட முயன்றதும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

    அதன்படி கிருஷ்ணசாமிக்கு ஐந்து ஆண்டுகள், 9 மாதங்கள் சிறை தண்டனையும், நல்லாயனுக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

    பல வணிகக் கணக்குகளின் ஐபி முகவரிகள் பண மோசடிக்கு பயன்படுத்தப்பட்டதாக பார்க்லேஸ் வங்கியிடமிருந்து 2018 ஆம் ஆண்டில் பொலிசாருக்கு புகார் அறிக்கை வந்தது.

    இதையடுத்து சைபர் கிரைம் பொலிசார் நடத்திய தீவிர விசாரணையின் முடிவில் கிருஷ்ணசாமி இந்த குற்றத்தை செய்தார் என பொலிசார் கடந்த 2019 மே 2ஆம் திகதி அவரை கைது செய்தனர்.

    அவரின் செல்போன் எண்ணை வைத்து இன்னொரு குற்றவாளியான நல்லாயனும் பின்னர் கைது செய்யப்பட்டார்.

    மொத்தத்தில், இந்த பண மோசடியால் உலகம் முழுவதும் 24 நிறுவனங்கள் பாதிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

    அதாவது, தங்களது வாடிக்கையாளரிடமிருந்து வந்ததாகக் கூறி ஒரு மோசடி மின்னஞ்சலைப் நிறுவனத்தினர் பெறுவார்கள், பின்னர் அவர்களின் வங்கி கணக்கு விவரங்களை மாற்றுவது குறித்து அவர்களுக்குத் தெரிவிப்பார்கள்.

    இதையடுத்து குறிப்பிட்ட நிறுவனம் தங்கள் உண்மையான வாடிக்கையாளர்களுக்கு பணம் செலுத்துவதாக நம்பி, சந்தேகத்திற்கிடமான வங்கிக் கணக்கிற்கு பணத்தை மாற்றியுள்ளனர், அவர்களின் உண்மையான வாடிக்கையாளர்கள் கட்டணத்தைத் பெற தொடங்கும் வரை அவர்கள் மோசடி செய்யப்பட்டார்கள் என்பது அவர்களுக்கே தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது.

    336

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    நினைவஞ்சலி

    மேலும் →

    சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

     

    உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.