உங்கள் கருத்து

    அறிவுப்புகள்

     

    மீடியாக்கள்

    கனடாவில் படகு விபத்து! வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவர் பலி! மேலும் 6 பேர் காயம்! photos

    கனடா டொரொன்டோவில் அமைந்துள்ள வூட்பைன் கடற்கரையில் ஏற்பட்ட படகு விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

    வியாழக்கிழமை மதியம் 12.30 மணியளவில் வூட்பைன் கடற்கரையில் படகு ஒன்றில் 6 பயணிகளுடன் இருந்த படகு கட்டுப்பாட்டை இழந்தால் கரையிலிருந்து 90 மீற்றர் தூரத்தில் இருந்த பாறையுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது. இதில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.

    பயணிகளில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது அங்கு கிசிற்சைகள் பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் வல்வெட்டித்துறை தீருவிலையைச் சேர்ந்த 46 வயதான இலங்கைகோண் பல்லவநம்பி என்று தெரிய வந்துள்ளது.

    படகோட்டி உட்பட ஆறு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த மூவர் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர். மற்றைய மூன்று பேருக்கும் சம்பவ இடத்தில் சிகிற்சை பெற்றிருந்தனர்.

    கடற்கறையில் கடமையாற்றும் உயிர்காக்கும் காப்பாளர்கள் விரைவாகச் செயற்பட்டு காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டனர். காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்திருந்தனர்.

    படகு வேகமாகச் சென்று பறையில் மோதியுள்ளதை சிபி 24 ஊடகத்தால் வெளியிடப்பட்ட காணொளி காட்டுகின்றது.

    பயணிகள் ஏன் உயிரிகாக்கும் அங்கிகளை அணிந்தார்களா என்பது புலனாகவில்லை. படகு பறையுடன் மோதியதில் பயணிகள் தூக்கி எறியப்பட்டிருக்கிலாம் என நம்பப்படுகின்றது.

    கடற்கரையில் இருந்தவர்களையும், சம்பவத்தைப் பார்த்தவர்களையும் அல்லது விபத்து நடந்த வீடியோ காட்சிகளைக் கொண்டிருக்கக்கூடியவர்களையும் புலனாய்வாளர்களைத் தொடர்பு கொள்ளுமாறு பொலிசார் வலியுறுத்துகின்றனர்.

    இறுதியாகக் கிடைக்கப்பெற்ற தகவலின்படி படகில் பயணித்தவர்கள் அனைவரும் தமிழர்கள் எனத் தெரியவந்துள்ளது.

     

     

     

    256

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    நினைவஞ்சலி

    மேலும் →

    சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

     

    உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.