உங்கள் கருத்து

    அறிவுப்புகள்

     

    மீடியாக்கள்

    இறுதியில் பிரபாகரனுக்கு ஏற்பட்ட நிலைமை தொடர்பில் கவலையடைந்தேன் – பிள்ளையான்

    தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு யுத்தத்தின் இறுதியில் நடந்தது தொடர்பான செய்தியைக் கேட்ட பின்னர் மிகவும் வேதனையாக இருந்தது

    என நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசத்துரை சந்திரகாந்தன்(பிள்ளையான்) தெரிவித்துள்ளார்.

    ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

    தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,

    தலைவர் மறைந்த செய்தியை கேட்டதும் மிகவும் கஷ்டமாக உணர்ந்தேன், மதியம் மற்றும் இரவில் உணவருந்த கூட முடியாமல் மிகவும் கவலையாக இருந்தது. இது ஒரு இயல்பான விடயம். என்னதான் எதிரியாக இருந்தாலும் அவர்களது இறப்பில் கவலைகொள்வது சாதாரணமான விடயம். அது இயல்பு.

    விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து கருணா விலகுவதாக அறிவிப்பதற்கு சில தினங்களுக்கு முன்னர் என்னை அழைத்துப் பேசியிருந்தார். பிள்ளையான் இப்படி ஒரு முடிவு எடுக்க வேண்டி வரும் போல இருக்கு, நாங்கள் தனியாக இயங்குவது பற்றி யோசிக்கலாம் என தெரிவித்தார்.

    அதற்கு நான், நீங்கள் முடிவு எடுத்தால் அதற்கு நான் உடன்படுகின்றேன். ஆனால் அந்த முடிவு ஊடகங்களில் பெரிதாக்கப்பட்டு, நிரந்தரமாக பிரிய வேண்டிய சூழல் ஏற்பட்டால் எல்லாமே முடிந்து போய்விடும். எனவே கவனமாக முடிவெடுங்கள் என நான் தெரிவித்தேன்.

    அதன் பின்னர் சில தினங்களில் இயக்கத்தில் இருந்து கருணா பிரிந்து விட்டதாக ஊடகங்களில் பார்த்தவுடன் மிகவும் வேதனையடைந்தேன் என குறிப்பிட்டுள்ளார்.

    இதேவேளை, இந்தமுறை நடந்த தேர்தல் மிகவும் முக்கியமான தேர்தல். கடந்த காலங்களில் எனது செயற்பாட்டை மக்கள் நம்பியிருக்கின்றார்கள் என்பதன் வெளிப்பாடே இந்த முறை எனக்கான வெற்றி.

    கடந்த காலங்களில் நல்லாட்சி அரசாங்கத்தினால் நான் பழிவாங்கப்பட்டேன். இதனை உறுதியாக கூற முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

    85

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    நினைவஞ்சலி

    மேலும் →

    சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

     

    உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.