உங்கள் கருத்து

    அறிவுப்புகள்

     

    மீடியாக்கள்

    கோத்தா சிந்தனை:வயலில் விவசாயிகள் கைது,

    இயக்கச்சிக் கோவில் வயல் பகுதியில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலரால் வழங்கப்பட்ட காணி உரித்து ஆவணங்களுடன் வயல் விதைப்பில் ஈடுபட்டிருந்த

    இயக்கச்சிப் பகுதியைச் சேர்ந்த 12 விவசாயிகளைச் சுண்டிக்குளம் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தமது எல்லைக்குட்பட்ட பகுதியில் அத்துமீறி வயல் விதைப்பில் ஈடுபட்டார்கள் என்று குற்றம் சுமத்தி  நேற்று கைதுசெய்துள்ளனர்.

    அத்துடன் அவர்கள் பயன்படுத்திய வாகனங்கள், அவர்கள் பாவித்த உபகரணங்கள், தொலைபேசிகளையும் பறிமுதல் செய்து அவர்களை அறிவியல் நகர்ப் பகுதியிலுள்ள அலுவலகத்துக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

    மாலை வரை அவர்கள் விடுதலை செய்யப்படவும் இல்லை. பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தப்படவும் இல்லை. இதனால் பதற்றமடைந்த அவர்களது உறவினர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனின் கவனத்துக்குக் கொண்டு சென்றனர்.

    இதையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர் ஜீவராஜா ஆகியோர் அறிவியல் நகர்ப் பகுதியில் அமைந்துள்ள வனஜீவராசிகள் திணைக்கள பிரதான அலுவலகத்துக்குச் சென்றபோது கைதுசெய்யப்பட்டவர்கள் அலுவலகத்தில் இருத்தி வைக்கப்பட்டிருந்தனர்.

    இவர்களின் கைது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளிடம் வினவியபோது அதற்குப் பதிலளிக்கக் கூடியவாறான பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் அலுவலகத்தில் இருக்கவில்லை.

    இந்தநிலையில் கைதானவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் அல்லது இவர்கள் பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தப்பட வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கேட்டுக் கொண்டபோதும் அவர்கள் எவ்வித உடன்பாட்டுக்கும் வரவில்லை.

    இதன்பின்னர், “அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் அல்லது பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தப்பட வேண்டும். இல்லையேல் இவ்விடத்தை விட்டுச் செல்ல முடியாது” என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அலுவலக வாயிலில் அமர்ந்ததன் பின்னர் கைதுசெய்யப்பட்ட 12 பேரையும், அவர்களது உடமைகளையும் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் மாலை 6 மணியளவில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் முற்படுத்தியிருந்தனர்.

    99

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    நினைவஞ்சலி

    மேலும் →

    சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

     

    உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.