உங்கள் கருத்து

    அறிவுப்புகள்

     

    மீடியாக்கள்

    முத்தையா முரளிதரன் பட விவகாரத்தால் தமிழக மீனவர்களை மிரட்டிய சிறீலங்கா கடற்படை!!

    கச்சத்தீவு அருகே இந்திய எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஷ்வர மீனவர்களை சிறீலங்கா இராணுவம் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி திருப்பி அனுப்பியதால், அங்கு பதற்றம் நிலவியது.

    தமிழகத்தில் வானிலை எச்சரிக்கை மற்றும் வேலை நிறுத்தங்களால் ராமேஷ்வரம் மீனவர்கள் 15 நாட்களாக மீன்பிடிக்க செல்லாமல் இருந்தனர்.

    இந்நிலையில், நேற்று 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3,000-க்கும் அதிகமான மீனவர்கள் கடலுக்கு நேற்று மீன்பிடிக்க சென்றனர்.

    அதன் படி, கச்சத்தீவு அருகே பாரம்பரிய மீன்பிடி பகுதியில் ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு வந்த சிறீலங்கா கடற்படை ராமேஸ்வரம் மீனவர்களை துப்பாக்கி முனையில் அச்சுறுத்தியது. மேலும் வானை நோக்கி இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுகிறது.

    இதனால் மீன்பிடிக்காமல் உயிர் தப்பினால் போதும் என மீனவர்கள் கரைக்குத் திரும்பியுள்ளனர்.

    இதனால் பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

    சிறீலங்கா கடற்படை இத்தகைய அத்துமீறல்களை அண்மைக்காலமாக நிறுத்தி இருந்தது. இப்போது திடீரென மீண்டும் அட்டூழியத்தில் இலங்கை கடற்படை இறங்கியுள்ளது.

    சிறீலங்கா கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க கூடாது என தமிழகத்தில் கடும் எதிர்ப்பு நிலவுகிறது. இதனால்தான் சிறீலங்காராணுவம் மீண்டும் அத்துமீறலை காட்டத் தொடங்கியிருக்கிறதா? என்ற கேள்வி எழும்பியுள்ளது.

    ஏனெனில் சிறீலங்காவுக்கு எதிராக தமிழகத்தில் போராட்டங்கள் நடந்தால் இதேபோல் சிறீலங்கா கடற்படை தமிழக மீனவர்களை குறிவைப்பதை வழக்கமாக வைத்திருக்கிறது.

    கிரிக்கெட் போட்டிகளில் சிறீலங்கா அணி தோற்றால் கூட தமிழக மீனவர்களை தாக்கி ஆத்திரத்தை காட்டுவதும் இலங்கை கடற்படையின் வாடிக்கை. இதனால்தான் முத்தையா முரளிதரன் பட விவகாரத்தால் தமிழக மீனவர்களை சிறீலங்கா கடற்படை மிரட்டியிருக்கலாம் என்று மீனவர்கள் கூறுகின்றனர்.

    167

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    நினைவஞ்சலி

    மேலும் →

    சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

     

    உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.