உங்கள் கருத்து

    அறிவுப்புகள்

     

    மீடியாக்கள்

    தேசியத் தலைவர் பிரபாகரன் பயோபிக் எடுக்க நான் ரெடி’ – இயக்குநர் அமீர் அறிவிப்பு!

    “தேசியத் தலைவர் பிரபாகரன் மீது எனக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது. எனவே, அவரது வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக எடுக்க ஆர்வமாக இருக்கிறேன்” என்று சொல்கிறார் இயக்குநர் அமீர்.

    திரைத்துறையில் பயணித்துவந்தாலும், அரசியல் குறித்த தனது நிலைப்பாட்டில் எந்தவித ஒளிவுமறைவுமின்றி வெளிப்படையாகக் கருத்து தெரிவிப்பவர் இயக்குநர் அமீர். தமிழ்த் தேசிய அரசியலுக்கு ஆதரவு, மதவாத சக்திகளுக்கு எதிர்ப்பு… எனத் தன் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்துவரும் அமீரை நேரில் சந்தித்து சில கேள்விகளை முன்வைத்தேன்.

    “ `தமிழக அரசியலில், ஈழ விவகாரத்தை தி.மு.க-வுக்கு எதிராக தமிழ்த் தேசியவாதிகள் திசை திருப்புகிறார்கள்’ என்ற குற்றச்சாட்டை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

    அமீர்

    அமீர்

    “வரும் 2021 தேர்தலில், வெற்றி பெற வேண்டும் என்ற லட்சியமும் ஆர்வமும் எல்லோருக்குமே இருக்கிறது. அதற்காக, சமூக வலைதளங்கள் வழியே அவரவர் சின்னச் சின்ன வேலைகளையும் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், அதை இவர்கள்தான் செய்கிறார்கள் என்று யாரையும் ஆதாரபூர்வமாக என்னால் சொல்ல முடியாது.

    `வரும் சட்டமன்றத் தேர்தலில் யார் ஜெயிப்பார்கள்?’ என்று சின்னக் குழந்தையிடம் கேட்டால்கூட, `தி.மு.க-தான்’ என்று சொல்லிவிடும் சூழல் இருக்கிறது. இந்தப் பரவலான பேச்சை வீழ்த்துகிற வேலைகளைத்தான் எதிர்க்கட்சிகள் செய்துவருகின்றன. அந்தவகையில், கடந்த 10 ஆண்டுக்காலமாக தி.மு.க-வுக்கு எதிர்நிலையில் இருக்கக்கூடியவர்கள் ஈழ விவகாரத்தைப் பயன்படுத்திக்கொள்வார்களா என்று கேட்டால், நிச்சயம் பயன்படுத்திக்கொள்வார்கள்தான்.”

    “800 திரைப்பட சர்ச்சையின்போது, விஜய் சேதுபதிக்கு எதிராக வெளிப்பட்ட நாகரிகமற்ற விமர்சனங்களை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

    “விஜய் சேதுபதி எடுத்த நிலைப்பாடு தவறு என்றால், அதைச் சுட்டிக்காட்டலாம், எதிர்ப்பைத் தெரிவிக்கலாம். அதைவிடுத்து, அவரை சர்வதேசத் தீவிரவாதியாகச் சித்திரிப்பதும், மிக மோசமாக விமர்சிப்பதும் கையாலாகாத்தனம். நானும் கண்டித்து அறிக்கை கொடுத்திருக்கிறேன்.”

    விஜய் சேதுபதி

    விஜய் சேதுபதி

    ”ஈழத் தமிழர்கள் குறித்து அக்கறை காட்டுகிற அமீர், அங்கிருக்கக்கூடிய மலையகத் தமிழர்களின் பிரச்னைகள் குறித்தும் பேச வேண்டும் அல்லவா?”

    “உலகமெங்கும் தமிழர்கள் இருக்கிறார்கள் என்பதற்காக அவர்களுக்கான பிரச்னையும் ஒன்றாகவே இருக்கிறது என்று சொல்ல மாட்டேன். இலங்கையிலேயேகூட மலையகத் தமிழர்கள் – ஈழத் தமிழர்கள் இடையே மிகப்பெரிய வேறுபாடுகள் இருக்கின்றன. மலையகத் தமிழராகத் தனது குடும்பம் இன்னல்களை அனுபவித்ததாகச் சொல்கிறார் முத்தையா முரளிதரன். ஒரு மனிதன் கீழ்நிலையிலிருந்து மேல்நிலைக்கு வந்துவிட்டான் என்பதாலேயே அந்த மனிதனின் வாழ்க்கை அறம் சார்ந்த வாழ்க்கையாக இருக்கும் என்று சொல்லிவிட முடியாது.

    இலங்கையில், இன்னும்கூட மலையகத் தமிழர்கள் தகரக் கொட்டகைகளில்தான் வாழ்ந்துவருகிறார்கள். இலங்கையில், மலையகத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி, அங்கேயிருக்கக்கூடிய ஈழத் தமிழர்களின் காதுகளுக்கே இன்னும் சென்றடையவில்லை. ஆக, அப்படிப்பட்ட அடித்தட்டு நிலையிலிருந்து முன்னேறிவந்த முத்தையா, தனது சாதனையை விளக்கும் படத்தில், தான் அனுபவித்த கஷ்டங்களைப் பற்றியும் சொல்ல வேண்டும் அல்லவா…

    இலங்கையில் நிலவும் அரசியல் சூழலால் பாதிக்கப்பட்ட அவரே சொல்லாவிட்டால், வேறு யார்தான் சொல்ல முடியும்?

    ஆனால், சிங்களப் பேரினவாத அரசுக்கு ஆதரவாக அவர் எடுத்த நிலைப்பாட்டை நியாயப்படுத்தும்விதமாக, அவர் உருவாக்கவிருந்த திரைப்படத்தின் பின்னணியிலுள்ள நுண் அரசியலைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம்.”

    முத்தையா முரளிதரன்

    முத்தையா முரளிதரன்

    “1982-ல் தமிழ்நாட்டில் பிரபாகரன் கைதானபோது அவரை ஜாமீனில் மீட்டெடுத்த தகவல் மற்றும் பிரபாகரனின் குரல் குறித்த உங்களது விமர்சனம் சமூக வலைதளத்தில் சர்ச்சையானதே..?”

    “தி.மு.க எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் மறைவையொட்டி அவரது நினைவாக நான் பேசிய பேச்சு அது. அதைப் பார்த்தவர்கள், கேட்டவர்கள் எப்படிப் புரிந்துகொண்டார்கள் என்று தெரியவில்லை. அமீரை எந்த அரசியலுக்குள் அமிழ்த்தி வைக்க வேண்டும் என்று நினைத்தார்கள் என்பதையெல்லாம் சம்பந்தப்பட்டவர்களைத்தான் கேட்க வேண்டும்.

    `800' சர்ச்சை : முத்தையா முரளிதரன்மீது ஈழ ஆதரவாளர்களுக்கு அப்படியென்ன கோபம்?

    `800′ சர்ச்சை : முத்தையா முரளிதரன்மீது ஈழ ஆதரவாளர்களுக்கு அப்படியென்ன கோபம்?

    மறைந்த ஜெ.அன்பழகன், என்னிடம் 10 வருடங்களுக்கு முன்பு சொன்னதைத்தான் நான் அன்றைக்குப் பேசியிருந்தேன். அதில் ஏதேனும் தவறு இருக்குமானால், ஒருவேளை அன்றைக்கு அவர் சொல்லியிருந்ததை நான் சரியாக உள்வாங்கவில்லை என்று வேண்டுமானால் எடுத்துக்கொள்ளலாம்.

    அடுத்து, ஓர் இயக்குநராக நான் பயோபிக் எடுக்க விரும்பினால், தேசியத் தலைவர் பிரபாகரனின் வரலாற்றைத்தான் படமாக எடுப்பேன். அந்த அளவுக்கு அவர்மீது எனக்கு மரியாதை இருக்கிறது.”

    பிரபாகரன்

    பிரபாகரன்
    179

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    நினைவஞ்சலி

    மேலும் →

    சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

     

    உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.