உங்கள் கருத்து

    அறிவுப்புகள்

     

    மீடியாக்கள்

    சனிப்பெயர்ச்சி: தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு இடம் பெயர்ந்தார் சனிபகவான்

    புதுவை மாநிலம் காரைக்கால் அருகே திருநள்ளாறில் உலக பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு சனி பகவான் தனி சன்னதி கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

    இந்த கோவிலில் 2½ ஆண்டுகளுக்கு ஒருமுறை சனிப்பெயர்ச்சி விழா வெகு விமரிசையாக நடந்து வருகிறது.

    கடந்த 2017-ம் ஆண்டு சனிப்பெயர்ச்சி விழா நடந்தது. இந்த ஆண்டுக்கான சனிப்பெயர்ச்சி விழா கொரோனா தொற்று காரணமாக ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டுமே தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்படும் என்று மாவட்ட, கோவில் நிர்வாகம் அறிவித்து இருந்தது.

    அதன்படி கடந்த 19-ந்தேதி முன்பதிவு தொடங்கியது. கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்கள் தங்களது வீடுகளில் இருந்தே முன்பதிவு செய்தனர்.

    சனிப்பெயர்ச்சிவிழாவை காண்பதற்கு சுமார் 18 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே முன்பதிவு செய்திருந்தனர். வழக்கமாக திருநள்ளாறு சனிப்பெயர்ச்சியின் போது சுமார் 3 லட்சம் முதல் 5 லட்சம் பக்தர்கள் வரை வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.

    கோவிலுக்கு வரும் பக்தர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் கோவிலுக்கு வரவேண்டாம். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். நளன் குளத்தில் புனித நீராட அனுமதி கிடையாது என்று கோவில் நிர்வாகம் அறிவித்ததால் குறைந்தளவு பக்தர்களே முன்பதிவு செய்திருந்தனர்.

    இதனிடையே கோவிலுக்கு வரும் பக்தர்கள் கொரோனா சான்று வைத்திருக்க வேண்டும் என்று புதுவை கவர்னர் கிரண்பேடி உத்தரவிட்டார்.

    ஆனால், பக்தர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் செய்தததால் இந்த உத்தரவு வாபஸ் பெறபட்டது.

    இன்று அதிகாலை 5.22 மணிக்கு சனிபகவான் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு பெயர்ச்சியானார். சனிப்பெயர்ச்சியையொட்டி சனிபகவான் தங்க காகம் வாகனத்தில் பிரகாரம் வலம் வந்து வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார். அதனை தொடர்ந்து சனிபகவானுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    அப்போது ஏராளமான பக்தர்கள் பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு வெப்பமானி மூலம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

    முன்பதிவு அனுமதி அட்டை வைத்திருந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

    விழாவில் 27-வது குருமகா தேசிக சன்னிதானம் மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த சுவாமிகள், புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி, சபாநாயகர் சிவகொழுந்து, அமைச்சர்கள் கமலக்கண்ணன், கந்தசாமி, சென்னை ஐகோர்ட்டு நீதிபதி வேல்முருகன், புதுவை மாவட்ட கலெக்டர் அர்ஜூன் சர்மா, கோவில் நிர்வாக அதிகாரி ஆதர்ஷ் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    நளன் குளத்தில் நீராட அனுமதி இல்லாததால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். ஆன்லைன் முன்பதிவு செய்ய கோவில் நிர்வாகம் சிறப்பு மையங்கள் ஏற்பாடு செய்திருந்தது. அந்த மையத்தில் முன்பதிவு செய்வதற்காக ஏராளமான பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர்.

    175

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    நினைவஞ்சலி

    மேலும் →

    சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

     

    உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.