உங்கள் கருத்து

    அறிவுப்புகள்

     

    மீடியாக்கள்

    வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களுக்காக அரசாங்கம் எடுத்துள்ள விசேட நடவடிக்கை

    வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களை இலங்கைக்கு அழைத்துவருவதற்கு இரண்டு நடைமுறைகளை பின்பற்றப் போவதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

    அதே​வேளை தனிமைப்படுத்தலுக்கான ஹோட்டல்களில் உட்படுத்தப்படும் நபர்களிடமிருந்து அறவிடப்படும் கட்டணத்தை குறைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

    அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

    வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் இரண்டு முறைமையின் கீழ் நாட்டுக்கு அழைத்துவரப்படுவர்.

    அரசாங்கத்தின் தலையீட்டுடன் ஒரு நாளில் ஒரு விமானம் மூலம் இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்படும்.

    மற்றையது பல்வேறு நாடுகளிலுள்ள பல்வேறு விமான நிறுவனங்களுக்கு சொந்தமான விமானங்கள் இங்கு வரும்போது அந்த விமானங்களில் சுமார் 75 இலங்கையர்களை அழைத்து வருவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக 300 நபர்களை ஏற்றிச் செல்லக்கூடிய விமானங்களில் 50 அல்லது 75 பயணிகளை ஏற்றிவர தீர்மானிக்கப்பட்டிருந்தது.

    இதன் காரணமாகவே விமான டிக்கெட்டுகளின் கட்டணங்களை அதிகரித்து அறவிட வேண்டிய நிலை நேர்ந்தது.

    தற்போது அந்தக் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. அதே வேளை நான்கு , ஐந்து நட்சத்திர ஹோட்டல்களுக்கு முறையே 7,500 – 12,500 வரையான கட்டணம் அறவிடப்பட்டது. பின்னர் ஏனைய ஹோட்டல்களும் தனிமைப்படுத்தலுக்கு அனுமதிகோரிய போது பிரச்சினை உருவெடுத்தது.

    அதற்கிணங்க 3, 4,5 நடசத்திர ஹோட்டல்களில் நாளை முதல் கட்டணங்களைக் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

    அது தொடர்பாக சம்பந்தப்பட்ட ஹோட்டல் உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    107

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    நினைவஞ்சலி

    மேலும் →

    சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

     

    உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.