உங்கள் கருத்து

    அறிவுப்புகள்

     

    மீடியாக்கள்

    வவுனியாவில் மருமகனின் கத்திக்குத்துக்கு மாமி மற்றும் மைத்துனன் படுகாயம் .

    வவுனியாவில் மருமகனின் கத்திக்குத்துக்கு இலக்கான மாமியார் மற்றும் மைத்துனர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    வவுனியா கண்டி வீதி , வலயக்கல்வி அலுவலகத்திற்கு முன்பாக இன்று பிற்பகல் 3.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

    இன்று (16) பிற்பகல் வவுனியா வலயக்கல்வி அலுவலகத்திற்கு முன்பாக உள்ள மரத்தின் பின்னால் மறைந்திருந்து மனைவியின் சகோதரனான மைத்துனனுடன் குறித்த நபர் தர்க்கத்தில் முரண்பட்டுள்ளார் . இந்நிலையில் தன்வசம் மறைத்து வைத்திருந்த கத்தி ஒன்றினால் மைத்துனனின் இடுப்பு பகுதியில் குத்தியுள்ளார் . இதனை அவதானித்த மாமியார் ஓடிச் சென்று தடுக்க முற்பட்டபோது அவருக்கும் கையில் குத்து விழுந்துள்ளது.

    இச்சம்பவத்தில் காயமடைந்த இருவரும் அருகிலிருந்தவர்களின் உதவியுடன் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் .

    கிளிநொச்சி திருநகர் பகுதியைச் சேர்ந்த கத்திக்குத்து மேற்கொண்டநபரை அப்பகுதியிலிருந்தவர்கள் தடுத்து வைத்திருந்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். காயமடைந்த இருவரும் தேக்கவத்தை பகுதியை சேர்ந்த அரியதாஸ் திரேஸ் (வயது – 35) , அசோகன் வசந்தி (வயது – 52) எனவும் இவ்வாறு இவர்களுக்கிடையே குடும்ப முரண்பாடுகள் நீண்டநாட்களாக இடம்பெற்று வந்துள்ளதாகவும் இதன் வெளிப்பாடே இன்றைய கத்திக்குத்துச் சம்பவம் என்று ஆரம்பக்கட்ட விசாரணைகளின்போது பொலிசாருக்குத் தெரியவந்துள்ளது .

    176

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    நினைவஞ்சலி

    மேலும் →

    சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

     

    உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.