உங்கள் கருத்து

  அறிவுப்புகள்

   

  மீடியாக்கள்

  இலங்கைக்குள் நுளையும் சீன விஞ்ஞானிகள்,photos

  கொவிட்-19 தடுப்பு அங்கிகளுடன் நூற்றுக்கணக்கான பாதுகாப்பு படையினர் ஜூன் 2 ஆம் திகதி கொழும்பு கடற்கரை ஒன்றிலிருந்து

  சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் இரசாயனங்களையும் பிளாஸ்டிக்குகளையும் அப்புறப்படுத்துவதில் தீவிரமாக இயங்கிக்கொண்டிருந்தனர்.

  கடலுக்குள் சுமார் 9.5 கடல் மைல்களுக்கு அப்பால் வெளிநாட்டுக்கப்பலொன்றின் எரிந்துபோன பாகங்கள் மழைக்கால கடுங்காற்றுக்கு மத்தியில் மிதந்து அசைந்தாடிக்கொண்டிருந்ததை அவர்களால் காணக்கூடியதாக இருந்தது. மே 20 இரசாயனங்களை ஏற்றிக்கொண்டுவந்த எக்ஸ் பிரஸ் பேரள் என்ற கொள்கலன் கப்பல் கொழும்பு துறைமுகத்தில் வெடித்து தீப்பிடித்து எரிந்துகொண்டிருந்தது.

  கப்பலில் இருந்த கொள்கலன்களில் பலவும் ஏனைய மாசுபடுத்தும் பொருட்களும் கடலுக்குள் வீழ்ந்து கரையோரம் அடித்துவரப்பட்டு சுற்றுச்சூழலுக்கு பாரதூரமான அச்சுறுத்தலை தோற்றுவித்துக்கொண்டிருந்தன.

  எரிந்து கடலில் மூழ்கிய எக்ஸ் பிரெஸ் பேரள் கப்பலின் பாகங்களை கரையோரத்தில் இருந்து இலங்கை பாதுகாப்பு படையினர் அப்புறப்படுத்தும் காட்சி. இலங்கையில் நீர்வளங்கள் பேணிப்பாதுகாப்புக்கு பொறுப்பான பிரதான நிறுவனமான தேசிய தேசிய நீர்வளங்கள் ஆராய்ச்சி – அபிவிருத்தி நிறுவனத்திடமிருந்து ( நாரா) கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான சீன – இலங்கை கூட்டு நிலையத்தைச் சேர்ந்த சீன நிபுணர்களுக்கு கப்பல் வெடித்த இரண்டாம் நாள் வேண்டுகோள் கிடைக்கப்பெற்றது.

  சிதைந்த கப்பலின் பாகங்களினால் ஏற்படக்கூடிய மாசுபடுத்தலின் அளவையும் இரசாயனங்கள் பரவக்கூடிய பரப்பளவையும் ஒரு கருவியின் ஊடாக அறவிடுவதற்கு அந்த கூட்டு நிலையம் உதவியது. தென்மேற்கு பருவமழை இலங்கையில் மே மாதத்தில் அடிக்கடி பெய்கிறது.

  தென்னிலங்கையில் ருஹுணு பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்திருக்கும் கல்விக்கும் ஆராய்ச்சிக்குமான சீன – இலங்கை கூட்டு நிலையத்தின் ஒரு அவதான மையத்தில் தன்னியக்க பருவகால நிலையம் பருவகால மழையின் தாக்கங்களை எதிர்வு (ஏ.டபிள்யூ.எஸ்.) கூறுவதற்கான தகவல்களை தரும் பணியைச் செய்கிறது, எதிர்வுகூறும் கருவிகளின துல்லியத்தை ஏ.டபிள்யூ.எஸ்.மேம்படுத்தக்கூடியதாகும்.

  அத்துடன் எரிந்துபோன சரக்குக் கப்பலினால் விளைவிக்கப்படக்கூடிய கடல்சார் சூழல் அனர்த்தங்களையும் அது எதிர்வு கூறக்கூடியதாகும் என்று கூட்டு நிலையத்தின இணை பேராசிரியரான லுவோ யாவோ சின்ஹுவாவுக்கு கூறினார்.

  வளிமண்டல அழுத்தம், காற்றின் வேகம், திசை, சூரிய கதிரியக்கம் மற்றும் ஏனைய கடல்சார் வளிமண்டல அளவெல்லைகள் ஆகியவற்றை கண்காணிக்கக்கூடியது ஏ.டபள்யூ.எஸ்.நீண்டகால அவதானிப்புகளின் ஊடாக ஒன்றுதிரட்டப்பட்ட தரவுகளை இந்து சமுத்திரத்திலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் காலநிலை மாற்றம்,கடல்மட்ட அதிகரிப்பு மற்றும் ஏனைய பிரச்சினைகளின் தாக்கங்களை ஆராய பயன்படுத்தமுடியும் என்று லுவோ யாவோ கூறினார்.

  இந்து சமுத்திரத்துக்கும் பசுபிக் சமுத்திரத்துக்கும் இடையில் மிதவெப்பமான நீரோட்டங்களை கொண்ட ஒரு பகுதியில் இலங்கை அமைந்திருக்கிறது, பருவமழையின் பாதையில் அடிக்கடி கடல்சார் அனர்த்தங்கள் நிகழ்கின்ற மிகவும் சுறுசுறுப்பான பிராந்தியங்களில் ஒன்றாகவும் இலங்கை இருக்கிறது என்றும் அவர் கூறினார்.

  ” நான் சீனாவுக்குச் சென்றதறகு பிறகு தனது வகுப்புத்தோழர்களில் பலர் சீனா பக்கமே திரும்பியிருக்கிறார்கள் ” என்று மதுசகா கூறினார்.

  இலங்கையில் ஆழியியலிலுக்கும் கடல்சார் விஞ்ஞானத்திற்கும் மிகப்பெரிய பங்களிப்பை கூட்டு நிலையம் செய்திருக்கிறது என்று இலங்கையின் ஒரு சிரேஷ்ட ஆழியியல் ஆய்வாளரான நளின் விக்கிரமநாயக்க சின்ஹுவாவிடம் கூறினார்.

  Gallery
  Gallery
  Gallery

  226

  மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  நினைவஞ்சலி

  மேலும் →

  சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

   

  உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.