உங்கள் கருத்து

    அறிவுப்புகள்

     

    மீடியாக்கள்

    கிளிநொச்சியில் சீனர்கள் மாயம்.போனில் தேடுகிறார் ,,

    கிளிநொச்சி பூநகரியில் அமைந்துள்ள சீன நிறுவனத்தின் கடலட்டை வளர்ப்பு இடம்பெறும் பகுதியை நேற்று  நாடாளுமன்ற

    உறுப்பினர் எஸ் கஜேந்திரன் உள்ளிட்ட குழுவினர் நேரில் பார்வையிட்டனர்.

    நேற்றைய தினம் குறித்த கடலட்டை பண்ணையில் சீனர்கள் எவரும் இருந்திருக்கவில்லை.

    ஆனாலும் அங்கு அவர்கள் தங்கியிருந்தமைக்கான அடையாளங்கள் தொடர்ந்தும் காணப்படுவதுடன், குறித்த நிறுவனத்தில் பணி புரியும் தமிழ் பேசும் நபர்கள் அங்கு தங்கி இருந்தமையை அவதானிக்க முடிந்தது. நேற்று அல்லது நேற்று முன்தினம் வரை சீனர் அங்கு தங்கியிருந்ததாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

    அங்கு சீன மொழியில் எழுதப்பட்டிருந்த உணவு பொதிகளையும் அவதானிக்க முடிந்ததுடன், மின்சார கட்டமைப்பு உள்ளிடட சகல வசதிகளுடன் அமைக்கப்பட்ட தங்குமிடத்தினையும் காண முடிந்தது.

    குறித்த பகுதியானது ஆரம்பத்தில் பூவரசன் தீவு என ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்த புாதிலும் அப்பகுதி கல்முனை என அழைக்கப்படும் பிரதேசத்தின் கடல் எல்லையில் காணப்படுவதாக மீனவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

    அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கடல் பண்ணையானது அமைந்துள்ள இடம் கடா பிடாரி அம்மன் கோவிலுக்கு செல்லும் பாதை எனவும், குறித்த கோவிலுக்கு சென்று வர முடியாத நிலை காணப்படுவதாகவும் மீனவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

    இவ்வாறான நிலையில் குறித்த பகுதி கால காலமாக தாம் பயன்படுத்தி வந்த போக்குவரத்துக்குரிய பகுதி எனவு்ம, அப்பகுதியிலேயே அவர்கள் இவ்வாறு கடலட்டை பண்ணையை அமைத்துள்ளதாகவும் மீனவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

    இதேவேளை, சீன நிறுவனத்தின் ஊழியர்களிடம் குறித்த பண்ணை அமைந்துள்ள விதம் தொடர்பில் ஊடகவியலாளர்களும், வருகை தந்திருந்தவர்களும் வினவினர்,

    குறித்த பகுதியில் கடலட்டை அமைப்பதற்கு அப்பகுதி மீனவ சங்கமே அனுமதி அளித்ததாகவும், மாதாந்தம் 1 லட்சம் ரூபா வருமானம் குறித்த சங்கத்திற்கு வழங்க பேச்சுக்கள் இடம்பெற்றிருந்ததாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

    இதுவரை குறித்த கடலட்டை பண்ணை பதிவு செய்யப்படவில்லை எனவும், கடல் தொழில் சங்கத்தின் அனுமதியுடனேயே இங்கு பண்ணை அமைக்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

    கடந்த 4ம் மாதமளவில் குறித்த பண்ணையை அமைத்ததாகவும் அவர் குறிப்பிடடிருந்தார். தாம் சீன நிறுவனத்தில் பணி புரிவதாகவும், சீனர்கள் தற்போது இங்கு இல்லை எனவும் குறிப்பி்ட்டுள்ள அவர் தாம் தற்போது பண்ணையில் கடமையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

    ஆனாலும் இதுவரை பண்ணையை அகற்றுவதற்கான அறிவுறுத்தல்கள் எதுவும் தமக்கு கிடைக்கவில்லை எனவும் அவர்களால் சுட்டிக்காட்டப்பட்டது. இதேவேளை குறித்த சீன நிறுவனத்தின் கடலட்டை வளர்ப்பு இடம்பெறும் பகுதியை இன்று நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் கஜேந்திரன் உள்ளிட்ட குழுவினர் நேரில் பார்வையிட்டனர்.

    குறித்த பகுதியில் சீன நாட்டவர்கள் தங்கி நின்று கடலட்டை வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றமை தொடர்பில் செய்திகள் வெளியாகியுள்ள நிலையில். மக்கள் பிரதிநிதிகள் கள விஜயம் மேற்கொண்டு வருகின்றனர்.

    223

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    நினைவஞ்சலி

    மேலும் →

    சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

     

    உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.