உங்கள் கருத்து

    அறிவுப்புகள்

     

    மீடியாக்கள்

    சித்தங்கேணியில் இடம் பெற்ற கொடூரம்! தந்தை அடித்துக் கொலை; மகள் ஆபத்தான நிலையில்.photo

    யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சித்தங்கேணி கலைவாணி வீதி பகுதியில் காணி தகராறை தொடர்ந்து,

    ஒருவர் உயிரிழந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    அத்துடன்  அவரது மகள் தலையில் பலத்த காயத்துடன் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    சம்பவம் தொடர்பில்  தொடர்பில் மேலும் தெரியவருகையில்,  

    உயிரிழந்த  நபருக்கும் அவரது அயல் வீட்டுக்காரருக்கும் கடந்த மூன்று மாதங்களாக காணிப் பிரச்சினை இருந்துள்ளது,  இந்நிலையில்  வெளிநாட்டிலுள்ள ஒருவரின் காணியை பராமரிக்கும் சகோதரர்களே தாக்குதல் நடத்தியுள்ளனர்.

    இன்று அந்தக் காணியில் மற்றொருவர் உள்ளதாக அறிந்த சகோதரர்கள் இருவரும் அங்கு சென்று அவருடன் முரண்பட்டதுடன் கம்பியால் தாக்கியதில்  தாக்குதலுக்குள்ளான இராசநாயகம் ரெஜியானந்தன் (வயது 49) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

     காணிப் பிரச்சினை தொடர்பில்  உயிரிழந்தவருக்கும் அயல் வீட்டுக்காரர்களுக்கும் இடையில் தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

    இந்த வாய்த்தர்க்கம் பின்னர் கைகலப்பாக மாறியதில் குறித்த நபரும் அவரது மகளும் காயமடைந்த நிலையில், சங்கானை பிரதேச வைத்தியசாலைக்கு அயல் வீட்டில் உள்ளவர்களின் முச்சக்கர வண்டி மூலம் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

    எனினும் வைத்தியசாலைக்கு செல்லும் வழியில் குடும்பஸ்தர் மரணமடைந்துள்ளார். இதனையடுத்து, தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் மகள் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    மேலும் இந்த  சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

    Gallery
    625

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    நினைவஞ்சலி

    மேலும் →

    சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

     

    உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.