உங்கள் கருத்து

    அறிவுப்புகள்

     

    மீடியாக்கள்

    எத்தனை நீதிமன்றத் தடையுத்தரவுகள் வந்தாலும் எம்மை தடுக்க முடியாது,

    எத்தனை கெடுபிடிகள், எத்தனை நீதிமன்றத் தடையுத்தரவுகள் வந்தாலும் எமது இதயத்தால் அனுஸ்டிக்கும் அஞ்சலியை எதுவும் தடுக்க முடியாது

    என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ் தெரிவித்துள்ளார்.

    2021.09.15ம் – 2021.09.26ம் திகதி வரையான காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் முன்னாள் உறுப்பினர் திலீபனின் நினைவேந்தலை அனுஸ்டிப்பது தொடர்பில் வெல்லாவெளிப் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட அறிவித்தலுக்கமைவாக களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றத்தினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

    தமிழினத்திற்காக அகிம்சை வழியில் உண்ணாவிரதமிருந்து தன்னுயிரை நீத்த எங்கள் அண்ணன் தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவு தினத்தை இவ்வருடம் அனுஸ்டிப்பதற்கான ஏற்பாடுகள் எங்களிடம் இருக்கவில்லை.

    ஏனெனில் இந்த அரசாங்கத்தின் இத்தகு அடக்குமுறையான ஆட்சியில் எவ்வித நினைவேந்தல்களும் செய்ய முடியாது என்பது நாம் அறிந்த விடயமே.

    தமிழர்களின் விடயம் தொடர்பில் எவ்விழிகளில் அடக்கி ஒடுக்க முடியுமோ அத்தனை வழிகளையும் இந்த அரசாங்கம் கையாளுகின்றது.

    அதற்கு தற்போதைய கொரோனா நிலைமையும் கைகொடுக்கின்றது. கொரோனாவைக் காரணம் காட்டி தமிழர்களின் நிகழ்வுகளை மாத்திரம் அடக்க முயற்சிக்கின்றது.

    என்ன இருந்தாலும், எத்தனை கெடுபிடிகள் வந்தாலும், எத்தனை நீதமன்றத் தடையுத்தரவுகள் வந்தாலும் எமது இதயத்தால் அனுஸ்டிக்கும் அஞ்சலியை எதுவும் தடுக்க முடியாது.

    அவ்விழிமுறைகளையே தற்போதைய நிலையில் நாம் கையாள எண்ணியுள்ளோம்.

    தற்போதைய நிலையில் மக்களைத் திரட்டி அவர்களையும் கொவிட் அல்லலுக்குள் உட்படுத்தும் எண்ணமும் எமக்கில்லை.

    எம்மை நம்பும் எம் உறுப்பினர்களை அரசின் கொடூர பிடிக்குள் சிக்க வைக்கவும் நாம் தயாராக இல்லை. ஆனால், அனைத்திற்கும் காலமும், சர்வதேசமும் பதில் சொல்லும் என்று தெரிவித்தார். 



    105

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    நினைவஞ்சலி

    மேலும் →

    சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

     

    உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.