உங்கள் கருத்து

அறிவுப்புகள்

 

மீடியாக்கள்

கருத்துக் களம் -30

கருத்துக் களம் -30

1625594_700975879973517_6521768967245377002_n

29,983..views

  • வசந்த்:

    என்னும் மேல மேல வளச்சி அடைந்து கொண்டுதான் போகும் என்பது என்னுடைய கருத்து ,புலம்பெயர் நாடுகளில் வாழும் நம் ஊர் மக்கள் நிதி உதவி என்று கேட்டு வரும் எல்லோருக்கும் அல்லிகொடுக்கிற மனம் படைத்தவர்கள் நம் ஊர் மக்கள் ,நாம் இருக்கும் வரைக்கும் நம் ஊரில் வளச்சியே தவிர ,வீழ்ச்சி ,என்ற சொல்லுக்கு இடம்மே இல்லை

  • அற்புதன்:

    இதுவொரு அருமையான தலைப்பு.. என்னைபொறுத்த வரையில் எங்கள் ஊர் மேலும்மேமும் வளச்சி அடைந்து கொண்டுதான் போகும் ஆனால் எங்கள் ஊரை இழந்து விடுவோம்!இழக்க கூடிய சாத்தியக் கூறுகள் உள்ளதாகவும் இருக்கின்றன எனவே என் மனதில் தோன்றியதை கூறுவதற்கு திரும்பவும் வருவேன்

  • கஜேந்திரன்:

    இந்த புலம்பெர் நாடுகளில்லை வாழுகிற நம்ம ஊர்கரங்கள் தான் ஒன்றாய் இருந்த ஊரை பிரிச்சு வைத்து இருக்கிறாங்கள் எல்லாம் காசு செய்கிற வேலை
    கஜேந்திரன்

  • Nishanth Frensh:

    எனது கருத்து என்னவென்றால் வளர்ச்சிதான்….
    ஏன் என்றல் எம் பன்னூர் புலம் பெயர்த்த சமுகம்..

  • nakkeeran:

    எல்லோரும் தாக்கம் என்பதைப் பொருளாதாரரீதியிலேயே பார்க்கிறீர்கள் .சனத்தொகை ரீதியில் ஒருவரும் பார்க்கிரீர்களில்லையே .சனத்தொகை மிக வீழ்ச்சியே .இப்படியே போனால் 10வருடத்தில் எண்கள் ஊரில் எண்கள் சமூகம் இல்லாதே போய்விடும் .இந்த ஆபத்தை நீங்கள் யாருமே உணரவில்லையா ?வளர்ச்சி என்பது தனியாகப் பொருளாதாரத்தில் மட்டுமல்ல .

  • அற்புதன்:

    பொதுவாக தமது பிள்ளைகளின் எதிர்காலம் கருதி பெற்றோர்கள் சிந்திப்பது போல். புலம்பெயர் தேசங்களில் இருந்து சிந்திப்பதும் நாங்கள் தான். ஊருக்குள் பிளவை ஏற்படுத்துவது நாங்கள் தான்.இருபக்கங்களில் உள்ள நியாயங்களையும் கண்டறியாமல் ஊருக்குள் பிளவை உண்டாக்கவென்றே சிலர். எனவே எங்கள் ஊரை இழந்து விடுவோம் என்ற சாத்தியக் கூறுகள் இருக்கிறதா என்று பார்த்தோமானால் நிட்சயமாக இவ்வான சாத்தியக் கூறுகள் இருக்கின்றனவை என்றுதான் சொல்வேன்!உதாரணம் எங்கள் ஊரிலுள்ள மிகப்பெரிய வெற்றி! வேற்ரிமடம் அந்த வளாகத்தில் விளையாடி பலனன அனுபவிப்பவர்கள் பாக்கியம் பெற்றவர்கள் இன்று அதை அயலவர்கள் அனுபவிக்கிறார்கள் .சிலவேளைகளில் பல காலங்கள் கழித்து இவ்வளாகத்தின் சாவி கோர்வைகள் குஞ்சன் கலட்டியாரிடம் போக சாத்தியக் கூறுகள் இருக்கின்றன இவர்களை நான் தாழ்த்தி பார்க்கவில்லை எங்கள் உழைப்பு எங்கள் பிள்ளைகள் அனுபவித்தால் நன்று.ஏற்க்கனவே சாந்தையில் உள்ள எம்மவர் வசம்மிருந்த பாடசாலை ஒன்று கைவிட்டு கேட்பாரற்று போயுள்ளது

    • kundan:

      குலத்தைக் கெடுக்கும் கோடரிக் காம்புகள் இருக்கும்வரை எம்மூருக்கு அழிவுதான்

      • nagulan kalaiyuran:

        முதலில் குண்டன் இவ் கருத்து களத்தை விளங்கி கொண்டுடுதான் சரியான பதிலாஎழுதிநிற???

        • kundan:

          அண்ணா நகுலரே ,நான் கருத்துக் களத்தின் தலைப்புக் கேர்ப்பவே கருத்தெழுதி உள்ளேன் .ஆனால்…..” எங்கள் ஊரிலுள்ள மிகப்பெரிய வெற்றி! வேற்ரிமடம் அந்த வளாகத்தில் விளையாடி பலனன அனுபவிப்பவர்கள் பாக்கியம் பெற்றவர்கள் இன்று அதை அயலவர்கள் அனுபவிக்கிறார்கள் .சிலவேளைகளில் பல காலங்கள் கழித்து இவ்வளாகத்தின் சாவி கோர்வைகள் குஞ்சன் கலட்டியாரிடம் போக சாத்தியக் கூறுகள் இருக்கின்றன”
          இந்த வாக்கியத்தை உறுதிப் படுத்தவே இக்கருத்தை எழுதினேன் .
          இந்த வாக்கியம் நூற்றுக்கு நூறு உண்மையையே கூறுகிறதுசுயலாபம் தேடும் ஒருசிலரால் எமது கிராமம் எமது சமூக பாரம்பரியங்களை இழக்கிறது .ஆனால் அவர்களோ அப்பாவிகளை வைத்து தங்கள் காரியங்களைச் சாதிப்பதுடன் தங்கள் தனிப்பட்ட குடும்ப நலன்களில் எ “1”ஐயே நாடுகின்றனர் .இதையே குறிப்பிட்டேன் .ஆனால் இது சாதிவெறியல்லஎம்சமூகப் பற்று . .

          • nagulan kalaiyuran:

            குண்ட நீ முதலில் உண் உடம்பில் கொழுப்பு என்னநண்டு குடினது என்று சற்று சிந்தி ??? பிறகு நீ உன்சமுகம் பற்றி சிந்தி … நீ எல்லாம் எம் மறுமலர்ச்சி மரத்தை பற்றி விமர்ச்சிக்க வந்து விட்டாய்???

  • sivanantham:

    இங்கு முன்வைக்கப்பட்டுள்ள தலைப்பானது குறுகிய கால எல்லையை(10 வருடங்கள்) முன் நிறுத்தி கேட்கப்பட்டிருக்கிறது. எனவே இக் குறுகிய காலப்பகுதியையும், புலம்பெயர் உறவுகளின் நிலைகளையும் வைத்துப் பார்க்கும்போது பொருளாதார ரீதியிலான வளர்ச்சியையே எதிர்பார்க்கலாம்.எனினும் தற்போது அபிவிருத்தி என்ற பெயரில் நாட்டில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் பசுமை அழிப்புகளும், கட்டிடப் பெருக்கங்களும், வாகனப் பாவனைப் பெருக்கத்தினால் சூழல் மாசுபடுதலும், இயற்கையின் சீற்றங்களை அதிகரிக்கச் செய்யப் போவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுவதனையும், தற்கால அரசியல் சூழல், அழிந்துகொண்டிருக்கும்
    பண்பாட்டு கலாச்சாரப் பழக்க வழக்கங்கள், போதைப்பொருள் பாவனை அதிகரிப்பு எமதூர் மக்களையும் விட்டு வைக்கவில்லையென அறிய முடிவதனால் அடுத்த ஒரு தசாப்த காலப் பகுதிக்குள் எமதூர் வளர்ச்சி பெறும் என்பது எதிர்வு கூற முடியாததொன்றாகவேயுள்ளது.

    இன்றைய இளைஞர்களே நாளைய ஊரின் தூண்கள். எனவே இவர்கள் சிந்தித்து செயற்படுவார்களாயின் நமதூர் நல்வளர்ச்சி காணும் என்பதில் ஐயமில்லை.

    அடுத்து.காலங்காலமாக எமதூரையும், மக்களையும் பாதுகாத்து வரும் அருள்மிகு அம்பாளின் ஆலயத்தில் 1976ம் ஆண்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையால் மக்களிடையே ஏற்பட்ட இருவேறு பிரிவுகள் இன்று வரை மறக்கப்பட முடியாதிருப்பதுவும் இதனால் மக்களிடையே காணப்படும் கசப்புணர்கள் வளர்ச்சியடைந்து வருவதும், எமதூர் வளர்ச்சியைப் பாதிக்க கூடிய சாத்தியக் கூறுகளே அதிகமாகவுள்ளது என்பது,சில நாட்களுக்கு முன்பு ஆலய விடயம் சம்பந்தமாக ஊரவர் இணையமொன்றில் வெளியான செய்தி நிரூபித்து நிற்பதாகவே எண்ணத்தோன்றுகிறது. இதற்கான காரணம், யாதெனில், கட்டிடங்களின் வளர்ச்சியே ஊரை வளர்க்குமென்றும், அதிக பணச் செலவில் அழகுமிகு ஆலயங்களை அமைப்பதால் ஆண்டவன் அருள் அதிகம் கிடைக்குமென்றும் மக்கள் மத்தியிலுள்ள தவறான எண்ணமாகும்.ஆனால் ஏழை, எளிய மக்களுக்கு, மாற்றுத் திறனாளிகளுக்கு, ஏழ்மையில் வாடும் குழந்தைகள், மாணவர்களுக்கு உதவுகின்ற மனப்பான்மை இல்லாமை எமதூர் மக்கள் பலரிடமும் அன்று தொட்டு இன்று வரை காணப்படும் ஒரு குறைபாடாகும். இந்த நிலையும் ஊர் வளர்ச்சியைப் பாதிப்படையவே செய்யும்.

    எனவே, எமதூர் மக்கள் அனைவரும் ஆலய திருப்பணிகளில் மட்டும் கவனம் செலுத்தாது ~ ஆலய திருப்பணி சபைகளை ~ உருவாக்காது, * பணிப்புலம் அம்பாள் அறக்கட்டளை* என்ற அமைப்பை உருவாக்கி இதன் மூலம் புலம்பெயர் உறவுகளின் உதவிகளைப் பெற்று, ஊரிலும், வெளியூர்களிலும் வாழ்கின்ற ஏழை, எளிய மக்களுக்கான உதவிகளை செய்வதுடன், ஆலயத் திருப்பணிகளையும் தேவைக்கேற்ப செய்யுமிடத்து எமதூரும் வளர்ச்சிபெறுவதுடன், அம்பாளின் அருட்சக்தியை உலகமும் அறிந்துகொள்ளும்.உதாரணமாக, தெல்லிப்பளை துர்க்கை அம்பாள் ஆலயத்தையும், அதை உருவாக்கிய அன்னை தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களையும் நினைவுகூர்ந்து அவர்தம் வழி நடப்போமாயின் எமதூர் என்றென்றும் வளரச்சி பெறும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.இதற்கான ஒரு செய்தியை ஊர் மக்கள் முன் வைக்க விரும்புகிறேன். அதாவது, எமதூர் புலம்பெயர் உறவுகள் சிலர் துர்க்கை அம்பாள் ஆலயம், மற்றும் பல சமூக சேவை தர்ம ஸ் தாபனங்களுக்கு கோடிக்கணக்கான நிதியை வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். எம்தாயின் பெயரில் செய்யுமிடத்து அனைத்து மக்களும் முன்வந்து வழங்குவார்கள். இதற்கு முதற்தேவை எமதூர் மக்கள் ஒற்றுமையும், சேவை மனப்பாங்குமேயாகும்.
    சிந்தித்து செயற்படுவோம்! அம்பாளின் அருட்சக்தியை அகிலம் அறியச் செய்வோம்!

    நன்றி!

    சிவாநந்தம்

    • nakkeeran:

      அருமையான விளக்கம் .இது போன்ற கருத்துக்களே வரவேற்கத் தக்கன .எம்மவர்க்குப் புரியுமா ?

    • அற்புதன்:

      இந்தத்தலைப்புக்கு தீர்க்கமான தெளிவான விளக்கம் .அளிக்கப்பட்டுள்ளன. அத்தோடு சிவானந்தம் அண்ணர்.என்பவர் எமதூரின் எதிர்காலத்தை பற்றியும் எளிதாக அனைவரும் புரிந்து கொள்ள முடியும் வகையில் விளக்கி இருக்கின்றார்! இவ்வாறான கருத்துகளில் திறமை வாய்ந்தவர்கள் தொடர்ந்து எழுத வேண்டும்! எமக்குள் இருக்கும் சில குழப்பங்களுக்கு தெளிவான.விளக்கங்கள் தருவீர்கள் என்று நம்பிக்கை கொள்கின்றேன் எனவே ஏழ்மையில் வாடும் குழந்தைகள் மாணவர்களுக்கு உதவுகின்ற மனப்பான்மை இல்லாமை எமதூர் மக்கள் பலரிடமும் அன்று தொட்டு இன்று வரை காணப்படும் ஒரு குறைபாடாகும்.இவை நூற்றுக்கு நூறு வீதம் .உண்மை

    • nakkeeran:

      ,சில நாட்களுக்கு முன்பு ஆலய விடயம் சம்பந்தமாக ஊரவர் இணையமொன்றில் வெளியான செய்தி நிரூபித்து நிற்பதாகவே எண்ணத்தோன்றுகிறது.

      இது தனிப்பட்ட ஒருவரின் சுயநல நோக்கமே .இன்று அவரது நோக்கம் நிறைவேரியதாகக் கூறப்படுகிறது .இனிமேல் பிரச்சனைகள் ஏற்ப்படாது .

      பிரச்சனைகள் எழுவது சுய நலத்தாலேயே.

  • kunaththilakam:

    ஒரு தகவல் -சாந்தை என்ற சிறு கிராமத்தை எடுத்துக் கொள்வோம் .பிள்ளையார் கோயிலடியை மையமாகக் கொண்டு எமினம் இங்கு 66வீடுகல் உள்ளன .இவற்றில் ;
    இன்று 23வீட்டில் ஆளில்லை .இவர்கள் அனைவரும் குடும்பத்துடன் வெளிநாடு .மீதி வீடுகளில் இருப்பவரும் வாழ்க்கையை முடித்தவர்கள் .இவற்றில் பாடசாலை செல்லும் மாணவர்கள் ஆக 8பெர் .
    13 வீட்டில் விண்ணுலக விண்ணப்பம் கொடுத்தவர்கள் .
    ஆளில்லாது அழிந்துபோய் உள்ள வீடுகள் 9.
    இங்குள்ள தோட்ட வயல்கள் வநாந்தரமாகிவிட்டன .
    விநாயகர் ஆலையம் மட்டும் வெளிநாட்டவர்களால் மிக வளர்ச்சி கண்டுள்ளது .அர்ப்புதன் கருத்து பொருத்தமானதே .
    அண்மையில் கும்பாபிசேகம் நடந்து 45 நாள் அன்னதானம் நடைபெற்றபோதுகூட அங்கு செல்வாக்கு செலுத்தியது வடக்குச் சாந்திதான் .எங்கள் ஆட்கள் மிகக் குறைவே .இன்னும் 10 வருடத்தில் எங்கள் நிலை ?????

    (இது ஊரில் உள்ளபடியால் என் மனக் குமறலைக் கூறியுள்ளேன் .பிழை இருந்தால் மன்னிக்கவும் .)

  • kundan:

    குணம் வாத்தியாரின் கருத்து சாந்தை ஊரவர்களின் கண்ணில் படவில்லையா ?ஏன் மௌவ்னம் சாதிக்கிரியல் ?

    • nagulan kalaiyuran:

      வணக்கம் குண்ட குணம் வாத்தி சொன்னதில் நீர் என்ன தவறு கண்டுகொண்டிர் …

  • vinothiny pathmanathan:

    சிவானந்தம் அண்ணர் அவர்கள் மிக சிறந்த கருத்துக்களை முன் வைத்துள்ளார் .அவற்றை செயற்படுத்த சமூக நலன்விரும்பிகள் முன்வர வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.அடுத்த தசாப்தத்தில் நம் ஊர் வளர்ச்சி அடைய வேண்டுமானால் , இந்த கணம் முதலே, எங்கள் ஊருக்குள் ஒற்றுமை என்ற விடயத்தை தான் முதலிலே நாம் நடைமுறைப்படுத்த வேண்டும். அந்த ஒரு விடயமே நம் ஊர் மேம்பட வழிவகுக்கும்.அந்த ஒரு விடயம் மட்டும் சாத்தியப்படுமானால் அடுத்த தசாப்தத்தில் நம் ஊரின் வளர்ச்சி என்பது நிச்சயம் .
    ஒவ்வொரு ஆண்டும் ஊருக்கு சென்று வரும்போதும் ஊருக்குள் ஒற்றுமையின்மை அதிகரித்து செல்வதையே
    காணக்கூடியதாக உள்ளது. ஒற்றுமையே பலம் என்பதை உணர்ந்து செயற்படுவோமானால் நம் வளர்ச்சி சிகரத்தைத் தொடும் என்பதுவே உண்மை.

    • kundan:

      “சுவர் இருந்தாலே சித்திரம் வரையலாம் “

    • பாஸ்கரன்:

      சரியாக சொல்லி இருக்கிறியள் வினோ அக்கா , ஆனால் இது எந்த காலத்திலும் சத்தியம் ஆகாது,நம்ம ஊரில் இருக்கிற ஊர் பெரிய மனிசர்கள் என்ற போர்வையில் இருப்பவர்கள் ,நீ பெரிதா இல்லை நான் பெரிதா எ ன்று சண்டை பிடித்துகொண்டு இருக்கிறாங்கள் , இதில்லை இவங்களை எப்படி ஒற்றுமையை இருப்பங்கள் ,சரி அப்படி அவங்கள் ஒற்றுமையாக இருக்க முயச்சி செய்தாலும் புலம்பெர் நாடுகளில் இருக்கிற நாங்கள் விடமாட்டோமே குழப்புறதுக்கு என்றே நாங்கள் இருக்குறோம் ,உங்களுடைய பகல் கனவு பலிக்காது !!!!

    • nagulan kalaiyuran:

      சிறுமி வினோ இதுவரைக்கும் நான் அற்புதன்,பாஸ்கரன் கருத்துகளுக்கு நிற மறு கருத்து எழுதுவது இல்லை ???
      .

  • Vinothiny pathmanathan:

    பாஸ்கரன் நான் கண்ட பகல் கனவுகள் சிலது பலித்திருக்குது.எனவே நம்பிக்கையுடன் (யாரையும் குழப்பாமல் )காத்திருப்போம் .

    • பாஸ்கரன்:

      உங்களுடைய பகல் கனவு பலித்தால் நல்ல விடையம்தான் வினோ அக்கா !!!! எங்கட நாட்டு பிரச்சனை தீர்ந்தாலும் தீருமேஒழிய நம்ம ஊர் ஒற்றுமையாக செயல்பர்றது என்பது கடினமான விடையம், அவர்களை கேடுத்துவைத்து இருக்கிறது புலத்தில் வாழுகிற நாங்கள்தான் இது எல்லாரும் அறிந்த விடையம், பனிப்புலம் என்று இருந்த ஊரை, இப்போ நாளை பிரிந்து போய்க்கிடக்கு இது எப்படி நடந்து இருக்கும் என்று சற்று சிந்தித்து பாருங்கள் உங்களுக்கே புரியும் ,,,

      • nagulan kalaiyuran:

        தம்பி பாஸ்கரன் ணீர் என்ன்ன வேன் ஆடை போர்க்க பக்கிரிற??அல்லது ???

  • அற்புதன்:

    பொதுவாக இந்தக் கருத்து கணிப்பில் வளர்ச்சியடைந்து வரும் எங்களூரை பற்றி எல்லோரும் ஏதோ ஒரு நல்லநல்ல .விஷயங்களை சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.இருப்பிலும் எங்களூரை சேந்தவர்கள் புலம்பெயர் தேசத்தில் பெரும்பாலனவர்கள் வாழ்கிறார்கள்.எங்களூரின் பல தேவைகள் புலம் பெயர்ந்த உறவுகளால் செய்யப்பட்டு வருகிறது மிகவும் பாராட்டத்தக்க விடயம்.இதனால் எங்களூரின் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் வேகமாக குறைந்து வாழ்கின்றார்கள் என்று எண்ணிவிடாதீர்கள் இன்று கூட.எங்கள் ஊரில் ஒரு பக்கம் ஆடம்பரமும், மற்றொரு பக்கம் வறுமையும் நிறைந்துள்ளது.சில குடும்பங்கள் போதிய அடிப்படை வசதிகள் இன்றி பல்வேறு துன்ப துயரத்துடன் வாழ்ந்துவருகின்றனர் கணவனை இழந்த பெண்கள், பிஞ்சு வயதிலேயே தகப்பனை இழந்த பிள்ளைகள், தவறான வழிகளை கையாளும் தாய்மார்கள் பெற்றோர் இல்லாத பிள்ளைகள்.போதைக்கு அடிமையாகும் அவலக் காட்சிகள் புத்தகங்களை சுமக்க வேண்டிய வயதில், போதைக்கு அடிமையாகும் மாணவர்கள் அதில் சில மாணவர்கள் கல்வி கற்பதற்கு வசதிகள் இன்றி அவதிப்பட்டு வருகின்றனர் எனவே எங்களூருக்குள் இப்படி ஒரு தாழ்வு நிகழ்வு எதனால் ஏற்பட்டது என்பதை நிதானித்தால் எங்களுக்குள் ஒற்றுமை உணர்வு குறைவு என்பதைவிட ஊரை பற்றிய உணர்வு அதிகம் இல்லை என்றே அர்த்தமாகிறது. எனவே எங்களூருக்குள் இருக்கும் இப்படிப்பட்ட குறைப்பாட்டை நிவர்த்தி செய்யவும் இந்த அவலத்தை சமன் செய்யவும் ஒரே வழி. இவ்வான பிள்ளைகளுக்கு கல்வியை எத்தி வைப்பது தான்.சரியான தீர்வு என நான் நினைக்கின்றேன் எனவே இவ்விடத்தில் இவ்வான கருத்தை நானேன் எழுதுகின்றேன் என்றால் இந்த இணையத்தில் கருத்து எழுதுபவர்கள் பலரும் நியாயம் உள்ளவர்களாக இருந்தால்! நியாயமான விஷயங்களை எழுதவேண்டிய சூழ்நிலை!இருப்பிலும் என்கருத்தை வைத்து பன்ன மூலையை பற்றி தான் நான் எழுதுகின்றேன் என்று தவறாக எண்ணவேண்டாம்! எங்களூருக்குள் இப்படியான கிராமமொன்று உருவாகின்றது இது எல்லோரும் அறிந்தது எனவே இப்படியானவர்களுக்கு . உருப்படியான விடயங்களைச் செய்யலாம் என்பது என்கருத்து!!!.

  • arun saanthai north:

    கலையடி இணையம் என்பது ஒரு ஊடக தளத்தில் இருந்து விலகுகிறது இது சாதி வெறி பிடித்த கருத்துக்களை அள்ளி வீசுபவர்களுக்கு தமது வெறியை தீர்பதற்கு கருத்துக்கு அனுமதித்து உள்ளது எமது சாந்தை மக்களை புண்படுத்த வேண்டாம் என தாழ்மையுடன் கேட்கிறேன் உதவும் கரங்கள் மூலம் எவ்வளவோ செய்யும் நீங்கள் எமது மக்களை பிரித்து தாழ்த்தும் கருத்துக்களை அனுமதிப்பது கண்டிக்கத்தக்கது வியப்பாக உள்ளது

    • கஜேந்திரன்:

      தம்பி அருணுக்கு நான் நினைக்கிறேன் மாலை கண் போல இதில்லை யாரும் சாதிகளை பற்றி எழுதவே இல்லை ,அவருக்கு மட்டும் ஏன் இப்படி தெரியுது ,நான் நினைக்கிறேன் இந்த இணையதளத்தில் கருத்து எழுத வரும் நபர்களை தடுப்பதுக்க அருண் ஒரு முயச்சி எடுத்து இருக்கிறார் என்பது அவரின் இரண்டு கருத்துக்களில் நன்றாக புரிகிறது ,அருணின் கருத்துக்களை காலையடிஇணையம் வெளிஜிட்டது நல்லது ஒரு விஷயம் இவரின் உள்நோக்கம் புரிந்து இருப்பிர்கள் ,,

  • arun saanthai north:

    எமது மக்களை பாதிக்கும் கருத்துகளை இணையத்தில் அனுமதிப்பதை நாம் கண்டிக்கிறோம் .சாதி வெறி பிடித்த ஊரில் மதிக்கப்படாத நபர்கள் சாதி ரீதியாக கருத்துக்களை வெளியிடும்போது நீங்கள் கண்ணை மூடிக்கொண்டு களம் கொடுப்பது வருந்த்ததக்கது .உதவும் கரங்கள் மூலம் உலகரியப்பட்ட நீங்கள் இந்த ஊதாரி கருத்துக்களை அனுமதுக்க வேண்டாம் என தயவுடன் கேட்கிறேன்

    • kumanan:

      இங்கு யாரும் இனவெறியைத் தூண்டி எழுதவில்லை .பார்ப்பவர்கள் அதே பார்வையில் பார்த்தல் அப்படித் தெரியும் .உள்ளதை உள்ளபடி கூறுவது தவறல்லவே .

  • sivanantham:

    தம்பி அருண் அவர்களே!
    இந்த இணையமோ அல்லது இங்கு கொடுக்கப்பட்ட தலைப்போ ,தலைப்பிற்காக கருத்து வழங்கியிருப்பவர்கள் யாருமே சாதிகள் பற்றியோ, சாதிவெறி பற்றியோ எழுதவில்லையே! எதற்காகத் தாங்கள் இப்படியான கருத்துக்களை எழுதியிருக்கிறீர்கள்? இணையத்தினர் ,சாதிவெறிக்கு
    முக்கியத்துவம் கொடுப்பவர்களாக இருந்தால் தங்கள் கருத்துக்களுக்குஅநுமதி அளித்திருக்கமாட்டார்கள்.
    எனவே, இவ்வாறான கருத்துக்களை எழுதுவதைத் தவிர்த்து நாமெல்லாம் தமிழ்மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட ஓரின ஓரூர் மக்கள் என எண்ணப் பழகிக்கொள்ளுங்கள். இணையங்களில் கொடுக்கப்பட்ட தலைப்புகளுக்கு ஏற்றாற்போல் தங்கள் கருத்துக்களை எழுதுங்கள்.
    எனது கருத்தில் தவறேதுமிருப்பின் தயைகூர்ந்து மன்னித்தருளவதுடன், தவறினைச் சுட்டிக்காட்டவும்.

    நன்றி!

  • kumanan:

    சாதி வெறி பிடித்த ஊரில் மதிக்கப்படாத நபர்கள் சாதி ரீதியாக கருத்துக்களை வெளியிடும்போது நீங்கள் கண்ணை மூடிக்கொண்டு களம் கொடுப்பது ….
    அண்ணா அருண் அவர்களே நீங்கள் யார் என்பதும் தெரியும் .உங்கள் நோக்கமும் தெரியும் .உங்களைப் பற்றிய எல்லவிடையமும் தெரியும் .ஊரில் உங்களுக்கு உரிய மதிப்பும் தெரியும் .கண்ணாடி வீட்டில் இருந்து கல் எரியாது கொஞ்சம் கவனமாக எழுதுவது ஆரோக்கியமாக இருக்கும் .இனைய வளர்ச்சியைப் பொறுக்கமுடியாத உங்கள் ஆதங்கமே இக்கருத்து .உங்கள் தனிப்பட்ட குரோதத்தை இணையத்தில் காட்டுவது அழகல்ல .அதைத் தனிப்படத் தீர்த்துக் கொள்ளுங்கள் .

  • kunaththilakam sillaalai:

    தம்பி ,அருண் நான் சாந்தை மண்ணில் பிறந்து சாந்தையிலேயே 65ஆண்டுகளாக வாழ்கிறேன் .எனவே சந்தையில் உள்ள அனைவரையும் அறிவேன் .உங்களையும் தெரியும் உங்கள் அப்பரையும் தெரியும் .நான் டென்மார்க்கில் இருந்தோ நோர்வேயில் இருந்தோ கருத்து எழுதவில்லை .எனது சொந்த மண்ணில் இருந்தே எழுதுகிறேன் .எனது மண் பாசத்தின் நிமித்தம் எனது ஆதங்கத்தையே எழுதினேன் .அது உங்கள் கண்ணுக்கு பிழையாகத் தெரிந்திருக்கிறது .நீங்கள் தான் உங்கள் கருத்தின் முகவரியில் சாந்தை நோர்த் என்று குறிப்பிட்டு இருப்பது உங்களுக்குத் தெரியவில்லையா ?நான் இங்கு சாதி பற்றி எதுவும் குறிப்பிடவில்லை .ஆனால் நாம் சாந்தை பள்ளிக்கூடத்துக்கு வடக்கே சாந்தை வடக்கு என்றே வழமையில் உபயோகிப்பது வழக்கம் .ராஜேந்திரம் ரதீஸ் என ஒரு விலாசத்தை போஸ்ட்மன் வந்து விசாரிக்கும் பொது அது எங்கள் பகுதியில் இல்லாது போனால் நாங்கள் அவரிடம் சொல்வது இவர் இஞ்சைஇல்லை வடக்கை கேட்டுப் பாருங்கோ என்றுதான் .நீங்கள் சொல்வதுபோல் சாதியைச் சொல்வதில் லை .சாதியின் பெயரால் லாபம் தேடுபவன் நானல்ல .சாதி வெறியரை எதிர்ப்பவன் என்னும் போர்வையைப் போர்த்து மக்களை ஏமாற்றுபவன் நானில்லை .ஊரில் மதிக்கப் படாத நபர் என்று குறிப்பிட்டு இருந்தீர் .நீர் இங்கு வந்து ஒரு மூன்று மாதங்கள் இருந்து பாரும் .யாரை மதிக்கிறார்கள் என்று தெரியும் .நான் யாரையும் எமாற்றுபவனுமில்லை .யார் சொத்துக்கு ஆசைபடுபவனுமில்லை .இதற்குமேல் நான் விளக்கம் தருவதானால் இன்னும் பல அம்பலத்துக்கு வரும் .எனவே அடக்கி வாசிப்பது நல்லது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

 

உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.