உங்கள் கருத்து

அறிவுப்புகள்

 

மீடியாக்கள்

< !-Currency Converter widget - HTML code - fx-rate.net -->< !-end of code-->

கருத்துக்களம் -37

10726748_726516210752817_904082479_n

 

873..views

 • kunaththilakam saanthai:

  இது ஒரு தெருக்குறள்……..
  “அடுப்படி நெருப்பு சிறப்புடன் எரியின்
  குழப்படி குடும்பத்தில் தடைப்படும் .”

  மனைவி சீராக இருப்பின் குடும்பம் சீராக ஓடும் என்பது என்கருத்து .

 • ruban:

  என்னுடைய கருத்து இரண்டு பேரின் கையில் தான் உள்ளது

 • sivanantham:

  ஒரு குடும்பம் சீராக ஓடுவதற்கு கணவனும், மனைவியும் ஒருவருக்கொருவர் தமக்கிடையே நல்ல புரிந்துணர்வுடனும், விட்டுக்கொடுக்கும் மனப்பாங்குடனும், நாமிருவரும் உடலால் வேறுபட்டாலும், உள்ளத்தால் ஒன்றுபட்டவர்கள் என்ற உணர்வுடன், வாழ் நாள் முழுவதும் சிறந்த காதலர்களாக வாழ்வதனாலேயே எத்தகைய சூழ்நிலைகளிலும் குடும்பம்பத்தைச் சீராக இயக்க முடியும்.
  பிள்ளைகளின் குடும்பங்களில் ஏற்படும் தகராறுகளுக்கு அவர்தம் பெற்றாரின் தலையீடு எவ்விதத்திலும் அக்குடும்பம் சீராக இயங்கத் துணைபுரியாது. என்பதே எனது கருத்தாகும்.
  *கணவன் மனைவியிலும் உயர்ந்தவனல்ல, மனைவியோ கணவனிலும் தாழ்ந்தவளல்ல*
  நாமிருவரும் சரிநிகர் சமமானவர்களே*
  என்ற கொள்கையை வளர்க்குமிடத்து எந்தக் குடும்பமும் நல்ல குடும்பமே!

  நன்றி!

 • nakkeeran:

  இது கணவன் மனைவி இருவரிலுமே தங்கி உள்ளது .சரியான கணவன் சரியான பெண்ணைத் தெரிவுசெய்தால் எல்லாம் சுகமே .வீட்டுக்கு வருபவளில்தான் எல்லாம் தங்கி உள்ளது .அதற்காக கணவன் எப்படியும் இருக்கலாம் என்பதல்ல .கணவனின் திறமைதான் மனைவி தெரிவு .

  ஒரு வீட்டுக்கு எப்படியான வளை (வளை )வைக்க வேண்டும் எப்படியானவளை வைக்கக் கூடாது என்பதைச் சிறிது பாருங்கள் .

  இதையே ‘”கலியாணம் கட்டிப்பார் தனிக்குடி அமைத்துப் பார் “என்பார்கள் .எனவே வீட்டுக்கு அடக்கமானவளை வை .
  ” ” ஆதாரமானவளை வை .
  ” இறுக்கமானாவளை வை .
  ””’ ”இசைவானவளை வை
  ;; ”இணையாதவளைவையாதே
  ‘ ‘” இணக்கமானவளை வை
  ‘” ” ஈயாத வளை வை
  ” ‘ உறுதியானவளை வை
  ” ‘” உக்கியவளை வையாதே .
  ” ” ஊசலாடுவளை வையாதே
  ” ” எளிமையானவளை வை .
  ” “ஏமாற்றுவளை வையாதே .
  ” ” ஒப்புரவான வளை வை .
  ” “ஓரம் போனவளை வையாதே .
  ” ” கண்டவளை வையாதே .
  ” ” கணிசமானவளை வை .
  ” ” கொளுத்த வளை வை .
  ” ” கொடிய வளை வையாதே .
  ” : கட்டான வளை வை .
  ” ” பகட்டான வளை வை .
  ” ” மூத்தவளை வை .
  ” “நொந்தவளை வையாதே .
  ” “நோகாதவளை வை .
  ” “பொருத்தமானவளை வை .
  ” “பொருந்தாதவளை வையாதே .

  இதற்காக நல்லவளை வைப்பதற்கு
  இருந்தவளை அழிக்காதே!
  தேவையானால் ஒதுக்கிவிடு .

 • Gopal:

  வண்டி ஓட சக்கரங்கள் இரண்டு மட்டும் வேண்டும்
  இரண்டில் ஒன்று பெரியது என்றால் எந்த வண்டி ஓடும்
  இதை நான் சொல்லவில்லை, கவிஞர் கண்ணதாசன்
  கூறியுள்ளார்.இதே போல் குடும்பம் என்னும் வண்டியிலும்
  கணவன் மனைவி இருவருமே இரு சக்கரங்கள் போன்றவர்கள்.
  இதில் கணவன் உயர்ந்தவரா? மனைவிஉயர்ந்தவளா? என்று
  பார்த்தால் எந்த குடும்ப வண்டியும் சீராக ஓடாது .கணவன் ,மனைவி
  இருவரும் இணைந்த கரங்களின் வண்டியே சீராக ஓடும் .

 • குடும்ப மகிழ்ச்சி என்பது கணவன் மனைவி என்ற பந்தத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ்வதே. அன்பு காட்டும் விதம் மற்றவரை காட்டிலும் பன்மடங்கு மனைவியிடம் அதிகம் வேண்டும். அப்படி வாழ்ந்தால் நாங்கள் சொர்க்கம் செல்ல வேண்டியதில்லை சொர்க்கம் எங்கள் வீட்டில் வாழும். விட்டுகொடுப்பவன் கெட்டுப்போவதில்லை. வாழ்கையில் கணவன் மனைவி உறவு என்பது மிகவும் உன்னதமானது. வாழ்க்கை பாதையை சீரமைக்கும் ஒரு கருவி தான் அன்பு. வாழ்வை அர்த்தமுள்ளதாக மாற்றும் வல்லமை அன்பிடம் மட்டுமே உள்ளது. இந்த உன்னதமான உணர்வுகள் தான் எங்கள் வாழ்வையே அர்த்தமுள்ளதாக மாற்றக்கூடியவை.

 • vinothiny pathmanathan:

  கணவன் மனைவி இருவருக்குமிடையிலான விட்டுக்கொடுப்பும் ,புரிந்துணர்வும், ஒருவர் ஒருவர் மேல் செலுத்தும் அன்பும், நம்பிக்கையுமே ஒரு குடும்பம் சீராக ஓடுவதற்கு முக்கியம் என்பதுவே என் கருத்து.

 • Vamanan:

  இவ் இணையம் இம் முறை கொண்டு வந்த கருத்து களம் எம் வாழ்க்கையில் முக்கியமான அம்சம் ஒன்று
  ஒரு குடும்ப வாழ்க்கை சந்தோசமாகவும்,சீராகவும் அமைய அக் குடும்பத்தில் இருக்கும் அங்கத்தவர்களின் கையில் அமைத்து உள்ளது .
  அதில் முதன்மை பாத்திரம் ஏற்பவர்கள் அக் குடும்பத்தில் இருக்கும் தலைவன்,தலைவி அதாவது குடும்பத்தின் பெற்றோர் அல்லது கணவன் மனைவி .(ஒரு குடும்பம் என்றால் பெற்றோரும் ,பிள்ளைகள்லும் அடக்கம் )
  முதலில் கணவன் மனைவிக்குள் புரிந்துணர்வு ,விட்டுகொடுப்பு தன்மை இருந்தால் கும்பத்தில் வரும் பல பிரச்சனைகளை தவித்துகொள்ளலாம் .
  அடுத்து பிள்ளைகள் வளர்ப்பிற்கு முக்கியத்துவம் குடுக்கவேண்டும் ,அவர்களுக்கு என்று நேரத்தை செலவிட வேண்டும் ,அவதானமாக வளர்த்தாள் குடும்பத்தில் பிள்ளைகளால் வரும் பிரச்சனைகளை தவித்துகொள்ளலாம்.
  இவ் இரண்டிலும் நிதானம் மாக இருந்தால் குடுப்பதில் வரும் சிறு சிறு பிரச்சனைகளை தவிர்த்து குடும்பத்தில் சந்தோஷமான வாழ்வைஅனுபோவிக்கலம்.
  ஆனால் குடும்ப வாழ்வு சீராக அமைவதற்கு கணவனை விட ஒரு படி உயர்த்தத் நிக்கிறாள் மனைவி !!!
  இது அடியேனின் தாழ்மையான கருத்து.

 • nakkeeran:

  இதைத்தான் அண்ணா ,நான் சொன்னேன் வீட்டுக்கு நல்லவளை நல்ல வளை வை என்று .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

 

உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.