உங்கள் கருத்து

அறிவுப்புகள்

 

மீடியாக்கள்

< !-Currency Converter widget - HTML code - fx-rate.net -->< !-end of code-->

நெதர்லாந் வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள். .புகை படங்கள் (வீடியோ இணைப்பு)

நெதர்லாந் வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்.
வாழ வழியற்ற ஒரு குடும்பத்தை வாழவைக்க வாழ்வாதாரம் வழங்கிய நெதர்லாந்து வாழ் எம் ஊரவர்கள் !

கரவெட்டி கிழக்கு யாக்கரையைச் சேர்ந்த தர்மராசா குடும்பம் வாழ வழியின்றி வறுமைக் கோட்டின்கீழ் மிகவும் கஷ்டப் பட்டுக் கொண்டிருந்தது .குடும்பத் தலைவன் மனநிலை பாதிக்கப் பட்ட ஒருகாலை இழந்த ஒருவர் .இரண்டு பிள்ளைகள் .இதை இனம்கண்ட எமது உதவும் கரங்கள் இவர்களுக்கு ஒரு கோழிப்பண்ணை அமைத்து கை தூக்கி விட ஆவன செய்தது .அதன் பிரகாரம் ஒரு கோழிக்கூடு அமைத்து 50முட்டை இடும் கோழிகளும் 85 குஞ்சுகளும் தீன் பாத்திரங்கள் மற்றும் தீன்களும் கொடுத்துதவினர்.இதற்க்கான முழுச் செலவையும் ஏற்ற நெதர் லாந்தில் வாழும் எம் ஊரவர்க்கு எமது மனமார்ந்த நன்றிகள் .மொத்தச் செலவு 90024,00ரூபாவாகும் .

மேற்கூறிய உதவியை 13.10.2014 அன்று வடமாகாணசபை உறுப்பினர் திருமதி ஆனந்தி சசிதரன் அவர்கள் சம்பிரதாய பூர்வமாக கையளித்து காலையடி உதவும் கரங்களின் சேவையைப் பாராட்டினார் .
வரவு
நெதர்லாந்து வாழ் மன்னூர் மக்களால் வழங்க பட்ட பணம் 120.206 ரூபாய்

செலவு விபரம்
———————
கோளிக்கூடமைப்புச் செலவு ————–41754.00
உணவுப் பாத்திரவகை ————————-2570.00
50 முட்டையிடும் கோழி ———————30000.00
85 குஞ்சுகள் ——————————————6800.00
உணவு மருந்துவகை —————————-5400.00
ஏனையசெலவுகள் ——————————-3500.00
மொத்தம் ——————————————-90024.00
இவர்கள் வழியில் ஏனைய உறவுகளின் கரங்களையும் எதிர் பார்க்கின்றோம் .

நன்றி

காலையடி இணையம்
உதவும் கரங்கள் .

DSC08260 [Max Width 640 Max Height 480] DSC08261 [Max Width 640 Max Height 480] DSC08262 [Max Width 640 Max Height 480] DSC08263 [Max Width 640 Max Height 480] DSC08264 [Max Width 640 Max Height 480] DSC08265 [Max Width 640 Max Height 480] DSC08266 [Max Width 640 Max Height 480] DSC08267 [Max Width 640 Max Height 480] DSC08268 [Max Width 640 Max Height 480] DSC08269 [Max Width 640 Max Height 480] DSC08270 [Max Width 640 Max Height 480] DSC08271 [Max Width 640 Max Height 480] DSC08272 [Max Width 640 Max Height 480] DSC08273 [Max Width 640 Max Height 480] DSC08274 [Max Width 640 Max Height 480] DSC08275 [Max Width 640 Max Height 480] DSC08283 [Max Width 640 Max Height 480] DSC08284 [Max Width 640 Max Height 480] DSC08285 [Max Width 640 Max Height 480] DSC08286 [Max Width 640 Max Height 480] DSC08287 [Max Width 640 Max Height 480] DSC08288 [Max Width 640 Max Height 480] DSC08289 [Max Width 640 Max Height 480] DSC08290 [Max Width 640 Max Height 480] DSC08291 [Max Width 640 Max Height 480] DSC08292 [Max Width 640 Max Height 480] DSC08293 [Max Width 640 Max Height 480] DSC08294 [Max Width 640 Max Height 480] DSC08295 [Max Width 640 Max Height 480] DSC08296 [Max Width 640 Max Height 480] DSC08297 [Max Width 640 Max Height 480] DSC08298 [Max Width 640 Max Height 480] DSC08299 [Max Width 640 Max Height 480] DSC08300 [Max Width 640 Max Height 480] DSC08301 [Max Width 640 Max Height 480] DSC08302 [Max Width 640 Max Height 480] DSC08303 [Max Width 640 Max Height 480] DSC08304 [Max Width 640 Max Height 480] DSC08305 [Max Width 640 Max Height 480] DSC08306 [Max Width 640 Max Height 480] DSC08307 [Max Width 640 Max Height 480] DSC08308 [Max Width 640 Max Height 480] DSC08309 [Max Width 640 Max Height 480] DSC08310 [Max Width 640 Max Height 480] DSC08311 [Max Width 640 Max Height 480] DSC08312 [Max Width 640 Max Height 480] DSC08313 [Max Width 640 Max Height 480] DSC08314 [Max Width 640 Max Height 480] DSC08315 [Max Width 640 Max Height 480] DSC08316 [Max Width 640 Max Height 480] DSC08317 [Max Width 640 Max Height 480] DSC08318 [Max Width 640 Max Height 480] DSC08319 [Max Width 640 Max Height 480] DSC08320 [Max Width 640 Max Height 480] DSC08321 [Max Width 640 Max Height 480] DSC08322 [Max Width 640 Max Height 480] DSC08323 [Max Width 640 Max Height 480] DSC08324 [Max Width 640 Max Height 480] DSC08325 [Max Width 640 Max Height 480] DSC08326 [Max Width 640 Max Height 480] DSC08327 [Max Width 640 Max Height 480] DSC08328 [Max Width 640 Max Height 480] DSC08329 [Max Width 640 Max Height 480] DSC08330 [Max Width 640 Max Height 480]

4,925..views

 • அகிலன்:

  நெதர்லாந்த் வாழ் l பன்னூர் மக்களுக்கு வாழ்த்துக்கள்

 • தேசத்தில் இருந்து சக்த்திவேல்:

  வாழ்த்துக்கள் முதல் கண் வாழ்த்துக்கள் எம் உறவுகளுக்கு.
  வந்தாரை வாழவைக்கும் பூமி என்பது எம் உறவுகளுக்கு பொருந்தும் என்பதே என் சொற் போளியாககும்..முதல் ஒருதடவை நான் பார்த்து உணர்ந்தது எம் உறவுகளின் வளர்ச்சிக்காக நோர்வே வாழ் பன்னூர் மக்கள் எம் தாய் நாட்டில் நிலை நாட்டிய உதவிகள் இன்று அதற்க்கு இடாகா எம் நெதர்லாந் உறவுகள் நீட்டிய பொர் கரங்கள் இதனை பார்க்கும் போது நாம் என்னும் இவ் உலகில் வாழ்குறோம் என்பத்று எம் உறவுகளே உதாரணம் வாழ்த்துக்கள் என்பது யாரும் சொல்லி விடலாம் செய்கை என்பது சிலாரால் மட்டுமே முடியும்..கோயில்கள் எழும்புவது போல் எம் தேசத்தில் ஒரு இனம் வளர்கிறது அதன் வளர்ச்சிக்கு ஒரு பெயர் உண்டு வறுமை என்றும் அதற்க்கு பெயர் உண்டு அதனை எவ்வளவு குறைக்க முடியுமோ நமக்கு தெரிய போவது இல்ல இருந்தும் நீங்கள் செய்யும் உதவி கரங்களே சிலரின் வறுமையில் இருந்து நிக்க படுகிறது..இருந்தும் எங்கள் இனம் அழிந்து செல்கிறது அதை அழியா காப்போம்..அன்று போரால் செத்து மடிந்தோம் இன்று பசியால் செத்து மடிகிறோம் விவசாய போமியில் பிறந்தோம் இன்று உணவுக்காக காத்திருக்கிறோம் எம் உறவுகளை காக்கும் கரங்களே உங்களுக்கு நான் நன்றி கூறவில்லை அதனை சொல்லி உங்களின் பொண்ணான உதவிகளை கரம் தள்ளவில்லை கண்ணுக்கு தெரியாத கடவுள் உண்டு கரம் நீட்டிய கரங்கள் நீங்கள்….வாழ்க வளமுடன் பன்னூர் மக்கள்…தேசத்தில் இருந்து சக்த்திவேல்

 • theepan:

  நெதர்லாந் வாழ் பன்னூர் மக்களுக்கு எண்களின் வாழ்த்துக்கள் உங்களால் இன்று ஒரு குடும்பம் சுயதொழிலில் இடு பட்டுள்ளனர் அவைகள் முன்னேறி உங்களுக்கு பெருமை சேர்த்து தரவேன்ரும் என்று நான் இறைவனிடம் கேட்டு கொள்கிறேன்

 • அற்புதன்:

  பாதிக்கப்பட்டவர்கள் தப்பிப்பிழைத்தவர்கள் என்ற அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாத ஏழைகள் இருக்கும் இடத்தை ஆங்காங்கே தேடிப் போய் புகுந்து மிகுந்த பரிவுடன் உதவும் கரங்கள் செய்யும் பொருள் உதவியை நினைக்கும் பொழுதெல்லாம் மகிழ்ச்சியாக இருக்கிறது. உதவி செய்வது இறைவனுக்கு செய்வதற்கு சமம் என்பார்கள். உதவி செய்வது உதவும் கரங்கள் குணம். அதை உணராதிருப்பது உறவுகளின் மனம்.

  இருந்தும் இது உதவும் கரங்களின் கவனத்துக்கு நெதர்லாந் வாழ் பன்னூர் உறவுகளை வாழ்த்துவதற்கு நான் தகிதியானவன் அல்ல என்பது என் வேதனைகளில் ஒன்றே கரணம்.இங்கு நிதி சேகரித்தவர் யாரென்றே தெரியவில்லை. என்னிடம் கேட்கவும் இல்லை தெரிந்திருந்தால் என்னால் ஏலக்கூடியத்தை பங்களித்திருப்பேன்? இவை உதவும் கரங்களின் தவறா ?இல்லை நிதி சேகரித்தவரின் தவறா ? நானேதும் தவறாக எழிதியிருந்தால் மன்னிக்கவும்

  • theepan:

   நீங்கள் நெதர்லாந்தில் தானே வசிக்கிரிங்கள்????

   • kundan:

    தீபன் அண்ணா ,முட்டை இட்ட கோழிக்குத்தான் வயித்தெரிச்சல் தெரியும் .ஏற்கெனவே நொந்தவரை நோகடித்தல் மனிதாபிமானம் இல்லை .

    • Kajenthiran:

     தம்பி குண்டன் மொத்தத்திலை நிங்கள் என்ன சொல்லவறியல் .

    • theepan:

     தம்பி குண்டா நீங்கள் என்ன சொல்ல வாறிங்கள் இங்கு நான் வாழும் நாட்டில் பல பிரச்சனை+++++++++++ இதில் நீங்கள் சொல்வது நமக்கு ஒன்றும் புரியல?????கருத்தில் விமர்சிப்பது பிரச்சனை அல்ல என்னத்தை விமர்ச்சிப்பது என்றுதான் யோசிக்க வென்றும். தானத்தில் சிறந்தது அன்னதானம் என்பார்கள் ஆனால் இங்கயோ அந்தனம் என்று சொல்லி அதுக்கும் ஒரு euro டிக்கெட் ஆக்கிட்டினம் அதை தான் தாங்க முடியவில்லை+++++++++ என்று இருக்கும் போது அடுத்த யோசனை தொடக்கி விட்டது கருத்து கலம்போல் இதற்கும் விமர்சனம் தொடக்கி விட்டதா புரியலா. நோர்வே நாட்டில் இருந்து செய்துவரும் உதவும் கரங்கள் ஒன்றுதான் கஸ்ரப்பட்ட ஏழை எளியோருக்கு குடுத்து உதவும் எங்கள் இன மக்கள் அதனை தயவு செய்து கொச்சபடுத்தாமல் அவைகளை ஊக்கப்படுத்திரது போல் கருத்துக்களை போட்டு என்னும் பலபேர் முன்னின்று கரங்களை உயர்த்தி உதவ செல்வோம்.இணையத்தாருக்கு ஒரு வேண்டுகோள் நான் கூறிய கருத்தில் ஏதாவது தவறாக கூறி இருந்தாம் இதனை அமுல் படுத்த வேன்ராம்.நன்றி வாழ்த்துக்கள்

     • kundan:

      அண்ணாமாரே ,நான் இங்கு கருத்துக் களமாக மொத வரவில்லை .அர்ப்புதன் ஒரு பொது நிதிக்கு பணம் சேகரித்து அதில் அவமானப் பட்டதையே குறிப்பிட வந்தேன் .அவர் அப்படி ஒரு நோவில் இருக்கும்போது அவரை நோக வைக்க வேண்டாம் என்றுதான் சொல்லவந்தேன் .”குண்டன் போடுவது குண்டுதான் ”

      தருணமறிந்து தக்க உதவி வழங்கும் உதவிக் கரங்களுக்கும் மனிதாபிமானமாக வாரிவழங்கி இருக்கும் நெதர்லாந்து வாழ் எம் ஊரவர்க்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் . நன்றி .

  • nakkeeran:

   குண்டனின் கருத்து என்னவோ நானறியேன் .ஆனால் உங்களிடம் கவலைகள் புதைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள் ,அதில் இதுவும் ஒன்றெனக் கூறுகிறீர்கள் உங்கள் வேதனையை நான் ஓரளவு புரிந்தவன் .எனவே நீங்கள் தகுதி அற்றவன் என வேதனைப்படுவது கூடாது .இருந்தும் நெதர்லாந்து உறவுகளை நேசிக்கும் நீங்கள் கவலையை மறக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன் .

   இதை இந்த இடத்தில் கூறியதை மன்னிக்கவும் .தருணத்தில் கூரவேண்டியதால் கூறினேன் .

 • nakkeeran:

  பசித்தோர்க்குப் புசிக்க உணவளிப்பதே மேலான தானம் !.
  புகழ் வாங்கப் பெருமெடுப்பில் இன்று அன்னதானம் !
  காலையடி உதவும் கரங்களின் பெரு நிதானம்! ,
  கருத்தறிந்து உவந்தளித்த நெதர்லாந்தே சந்நிதானம் !
  பணம் கொடுக்கும் அன்பர்க் கிருக்க வேண்டும் அவதானம் !
  பணம் சேர்த்துப் பறிகொடுத்தல் பேரவமானம் !
  நெதர்லாந்து ஊரவரின் நேசமான தானம் !
  நீடூழி வாழவேண்டும் அவரகளூர்ச் சமாதானம்!

 • சந்தை ஊரான்:

  நெதர்நால்ந்து பன்னூர் மக்களுக்கு என் வாழ்த்துக்கள்.இவர்களை போல் வெளிநாட்டுக்கு
  ஒரு ஊரில் ஒரு குடும்பத்தை தேர்ந்தெடுத்தாலும் எம் நாட்டின் மக்களுக்கு பசி பஞ்சம் இருக்காது..உங்கள் பணி வாழ்க உங்கள் குளம் வளர்க.வாழ்த்துக்கள் காலையடி இணையம் உதவும் கரங்களுக்கும் நெதர்நால்ந்து பன்னூர் மக்களுக்கும் வாழ்க்கை வளர்க.

 • Kajenthiran:

  நெதர்லாந்த் வாழ் பன்னூர் அம்மாளின்ர குன்ச்சுகள் வாழ்க ஒரு குடும்பத்தை வாழ வைத்த புண்ணியம் உங்களையே சேரும் பனிப்புலத்து அம்மன் உங்களுக்கு துணை இருப்ப

 • நெதர்லாந்த் வாழ் எம் உறவுகளுக்கு என் வாழ்த்துக்கள்.. உதவி என்பது எவ்வளவு செய்கிறோம் என்பது அல்ல.எப்போது செய்கிறோம் என்பதைப் பொருத்தது இந்த உலகில் மனிதன் நிலையாக வாழ்வதில்லை. எனவே மனிதன் வாழும் காலத்திலேயே தான் சேர்த்த பொருளைப் பிறருக்குக் கொடுத்து உதவ வேண்டும்.. இந்த காணொளியை பார்த்ததும் தண்ணீர் மதிப்பு என்னவென உரிந்தது உதவும் கரங்களுக்கு என் வாழ்த்துக்கள்..

 • நானும் ஒருவன்:

  நெதர்லாந் வாழ் பன்னூர் மக்களுக்கு என் வாழ்த்துக்கள் இது போல் என்னும் பலபேரை நீங்கள் வாழ வைக்க வென்றும் என்று வாழ்த்துகிறேன்.இதில் நானும் பங்கு பெற்றனான் என்று நினைக்கும் போது எனக்கு பெரும் மகிழ்ச்சியாக உள்ளது.கலையடி உதவும் கரங்களுக்கும் உதவி பெற்றவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

 • suresh:

  நெதர்லாந்த் வாழ் எம் உறவுகளுக்கு என் வாழ்த்துக்கள்,இன்னும் எம்மவர்,எம் இனத்துக்கு கரம் கொடுப்பார்கள்….அவர்களுடன் சேர்ந்து நானும் எப்போதும் கரம் கொடுப்பேன்….நன்றி…. உதவும் கரங்களுக்கு என் வாழ்த்துக்கள்..

 • Ravimohan canada:

  பிரமாதம்

Leave a Reply

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

நினைவஞ்சலி

மேலும் →

சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

 

உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.