உங்கள் கருத்து

அறிவுப்புகள்

 

மீடியாக்கள்

கருத்துக் களம் -39

10744896_738530146218090_1543105549_n

712..views

  • MOHAN:

    பாதிக்கப்பட்டவர்கள் இப்பிரசனையை நிர்வாகத்தின் கவனத்திற்க்கு கொண்டு
    சென்றார்களா ? என்பது எனது மனதிரையில் எழும் கேள்வியாகவுள்ளது .நிர்வாக
    த்திடம் சென்றால் எங்களை சரியாக பார்கமாட்டார்கள்,பழி வாங்கி விடுவார்கள்
    என்ற பயத்தில் போகாமலும் இருக்கலாம் .சரி முறைப்பாடு செய்து நிர்வாகம்
    கவனத்தில் எடுக்கவில்லை என்றால் நகர பாதுகாவலரின் கவனத்துக்கு கொண்டு செல்லவேண்டும் ,அங்கும் நீதி கிடைகவில்லை எனில் ,ஊடகங்கள் ஊடாக இப்பிரச்சனையை அணுகவேண்டும் ,அதுவும் சரிவராத பட்சத்தில் மக்கள் போரட்டம் இதுவே மாற்றத்துக்கான வழி மாற்றுவழி வேறில்லை …இது
    வே என் தாழ்மையான கருத்து.

    • nakkeeran:

      இது இன்று நேற்றல்ல வழமையாக உள்ள பிரச்சனை .ஆனால் பூனைக்கு மணிகட்டுவது யார் என்பதே இதற்க்கான பதில் என்பது என் கருத்து .

  • kundan:

    இந்தத் தாதிமார் பிள்ளை பெறுவதில்லையா?அல்லது புராணக் கதைகள் போல் இவர்களும் போட்டுக் கிடந்தது எடுக்கிறார்களா ?
    அவர்கள் இதை ஒரு தொழிலாகவே செய்கிறார்கள் .கருணை ,காருண்யம் ,சேவை மனப் பான்மை அவர்களிடம் இருக்காது .அப்படியானவர்கள் தாமாக வேலையில் இருந்து விலகுவது மேல் .

  • vinothiny:

    அவர்களின் செயலை உண்மையிலேய மேலதிகாரிகள் கண்டும் காணதது போல் விலகி செல்வது தான் இதற்கான காரணம் .இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு என் உறவினர் ஒருவர் புற்றுநோய் வைத்தியத்திற்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அந்த பிரிவிலே கடமையாற்றும் தாதி ஒருவர் நோயாளிகளுடன் பேசிய விதம் கண்டு நான்
    அதிர்ந்து போனேன்.அதே வேளையில் அந்த வார்டில் ஒரு வைத்தியர் நோயாளிகளை பார்வையிட்டுக்கொண்டிருந்தார் .அதுவும் ஒரு பிரசவ வலியினை ஒத்த ஒரு வலியுடன் இன்றோ நாளையோ என வாழ்வின் இறுதிக் கட்டத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் நோயாளிகளுடன் இப்படி மனிதாபிமானம் அற்ற வகையில் நடந்து கொள்ள இவர்களால் எப்படி முடிகிறது.அதுவும் அதே வார்டில் ஏனைய 4 பெண் தாதிகளும் ,1 ஆண் தாதியும் கடமையாற்றுகிறார்கள். இவர் நோயாளிகளுடன் உரையாடும் விதம் கண்டும் அவர்கள் ஒன்றுமே சொல்வதில்லை .இது பிரசவ வார்டுகளில் மட்டும் நடக்கும் ஒரு பிரச்சனையில்லை. மாறாக இதுவே போதனா வைத்தியசாலைகளில் நடைபெறுகிறது.இதற்கான வழி கண்டிப்பாக
    மோகன் அவர்கள் கருத்துப்படி இது ஒரு மக்கள் போராட்டமாக மாறினால் தவிர இதற்கு வேறு வழிகள் இருப்பதாக நானும் நினைக்கவில்லை .

  • kunaththilakam saanthai:

    தாதிகள் என்னும்போது எல்லோரும் அப்படியில்லையே .ஒருசிலர் தான் அரக்கத் தாதியாய் இருக்கிறார்கள் .அதற்காக ஒட்டு மொத்தமாக எல்லோரையும் கூறமுடியாது .அந்த ஒருசிலர் மீது துணிவுள்ள ஒருவரே வழிவழியாகச் சென்று நடவடிக்கை எடுக்க முடியும் .ஆனால் நமக்கேன் இந்த வம்பு என ஒதுங்குவதே காரணம் .

    எம்மூரில் இருந்து மறைந்த தாதி அமரர் பரம்சோதி அவர்களை நாம் மறந்தோமா ?இல்லையே .காரணம் அவருடைய சேவை .அவரைப் போல் மற்றவரும் இருந்தால் அவர்களையும் மறைந்தும் மறையாத மா மனிதர்களாக மக்கள் போற்றுவர் .

    எனவே தாதிகள் கடமை உணர்வுடன் மனிதாபிமானமாக செயல்படுவார்களானால் அவர்களுக்கு கடவுளின் நல்ல பார்வை படும் .இல்லையேல் கடவுளின் கணக்குக்குள் வருவர் .இது என்கருத்து .

  • செந்தாமரை:

    இது ஒரு நல்ல கருத்துக்களம் ஏன் என்றால் சங்கானை ஆசுபத்தியில இத நான் தினம் தினம் கேள்வி பட்டுருக்கிறேன் இருந்தாலும் இப்ப நான் ஐரோப்பாவில வசிக்கிறேன் எனது கருத்து என்ன என்றால் அவர்களின் பனி சுமை அண்ட் ஊதியம் நம்ம பேச்சு வழக்கு எது தான் என்று ஏன் தனி பட்ட கருத்து

    • venthaamarai:

      அவர்கள் பணி சுமைதான் .ஆனால் கடமை அல்லவா .அந்த வேளை அவர்களை நாம் கடவுள் என்றே மதிப்பதில்லையா ?அப்படியான கடவுள் இப்படியா நடப்பார் ?

  • அற்புதன்:

    ஏழை நாடுகள் மற்றும் நடுத்தர நாடுகளில் உள்ள அரச அதிகாரத்தில் இருக்கும் வைத்தியசாலையில் பணிபுரியும் பெண்கள் ஆண்கள் நோயாளிகளை மிக மோசமாகவும் கீழ்த்தனமாகவும் மட்டமாகவும் தரக்குறைவாகப் பேசி வேதனைப்படுத்தும் போன்ற சம்பவங்கள் நடப்பது புதிதல்ல.இது வைத்தியசாலையில் மாடுமல்ல. அரச அதிகாரம் சம்பந்தப்பட்ட பல்வேறு துறைகளிலும் காணப்படுகின்றன.எனவே என்னை பொருத்தவரை இது போன்ற சம்பவங்கள் வேண்டியவரா வேண்டாதவரா என்கிற நடுத்தர மற்றும் கீழ்தட்டு மக்களின் நிலையறிந்து பழி வாங்கும் முறையென்று நினைக்கின்றேன்.ஏனென்றால் நடுத்தர நோயாளிகளுக்கு அரச வைத்தியசாலைகளின் தரக்குறைவான நிலைமைகள் நன்றாகத் தெரிந்த போதும் அதனைத் தேடிவரும் மக்கள் கூட்டமோ சிறிதளவும் குறைந்ததில்லை தனியார் வைத்தியசாலைக்கு சென்று தரமான சிகிச்சை பெற யாரிடமாவது கடன் வாங்கினாத்தான் சாத்தியம் என்ற இவர்களின் .இயலாமையை அறிந்து அரச வைத்தியசாலை தனியார் வைத்தியசாலைக்கு இவர்களை தள்ளுகிறது!

  • இதில் கருத்து எழுதும் கருத்தாளர்கள் ஒவொருவரின் தகுதியையும் மிக அருமையாக இருக்கிறது. அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி மேலும் நன்றாக தொடருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

Browse நினைவஞ்சலி

மேலும் →

சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

 

உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.