உங்கள் கருத்து

அறிவுப்புகள்

 

மீடியாக்கள்

< !-Currency Converter widget - HTML code - fx-rate.net -->< !-end of code-->

கருத்துக் களம் -40

10805169_743116405759464_452863847_n (1)

 

1,876..views

 • nakkeeran:

  வாலியை மறைந்து நின்று கொன்ற ராமரே துரோகி .

  • அற்புதன்:

   நக்கீரன் அவர்களே! மகாபாரதம் இராமாயணம் போன்ற நூல்கள் தர்மத்தை மாத்திரமே அடிப்படையாகக் கொண்டு வந்த நூல்கள்.எங்களை நல் வாழ்க்கை வாழ வழிகாட்டி வலியுறுத்துகின்ற நூல்கள். இவையெல்லாம் நீங்கள் அறிந்தவையும் கூட ஆனால் ராமர் வாலியை மறைந்து நின்று கொன்றது துரோகம் என்று அதனை கூறிவிட முடியாது! ஏனென்றால் ராமர் வாலியை மறைந்து நின்று கொன்றதை ஆக்கப் பூர்வமான நேர்மை நிரம்பிய எண்ணங்களோடு சிந்தித்துப் பார்த்தால் இதுவொரு பாடம் படிப்பிணை அனுபவம்,என கூறக் கொள்ளலாம்!

   • nakkeeran:

    சீதையை இழந்த ராமர் எப்படியும் சீதையை அடைய வேண்டும் என்ற ஆவலில் இருக்கும் போதே சுக்கிரீவனைச் சந்திக்கிறார் .சுக்கிரீவன் தன்னுடைய தமையனான வாலியைக் கொன்றால் சீதையைக் கண்டுபிடிக்க தான் வழி செய்வதாகக் கூறுகிறான் .ராமர் உடன்படுகிறார் .இங்கு அவர் சுயநலத்தோடுதான் உடன்படுகிறார் .அதன் பிரகாரம் வாலியை மறைந்து நின்று கொள்கிறார் .சுக்கிரீவனின் துரோகத்துக்கு நீதியுடன் செயல்பட வேண்டிய ராமரே நீதி தவறுகிறார் .இது அவர் தன் வலியினால் செய்த காரியமே .அத்துடன் வாலியுடன் நேரில் நின்று போர் புரிந்தால் அவனுடைய பலத்தில் அரைப் பங்கு வாலியை அடையும் என்ற பெரிய வரத்தையும் பெற்றிருந்தான் .இவற்றினால்தான் வாலியை ராமர் மறைந்து நின்று கொன்றார் .
    ராமரின் அம்பு பட்ட வாலி அந்த அம்பை இழுத்தெடுத்து பார்த்தபோது அதில் ராம நாமம் இருக்கக் கண்டு கூறிய வார்த்தை ,ராமபிரானே !நீங்களா இவ்வண்ணம் செய்தனை !அதிலிருந்து வாலி ராமர்மீது எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தான் எனத் தெரிய வில்லையா ?
    அத்தகைய ஒரு பக்தனை தன் சுயனலத்துக்காகக் கொன்ற ராமர் துரோகி இல்லையா ?

    • அற்புதன்:

     நக்கீரன் அவர்களே! நான் இதுவரை ராமாயணம் முழுவதுமாக படித்ததே இல்லை.ஆனால் ராமாயணம் குறித்து பல விவாதங்கள் கேள்விப்பட்டு இருக்கிறேன் அதிலும் வாலியை ராமன் மறைந்து நின்று கொன்றது சரியா? என்பன போன்ற விவாதங்களில் ராமரின் அனுபவத்தைப் பற்றி உங்களை போன்ற அறிவுஜீகளும் சிந்தனையாளர்களும் நேர்மையின் அடிப்படை எண்ணங்களோடு எழிதிக் கொண்டே தான் இருக்கிறார்கள் ஆனால் இது ராமாயணம் தொடக்கி வைத்த ஒரு கேள்வி இந்தக் கேள்விகளுக்கான விவாதங்களும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.ஆனால் உண்மை எதுவென்று பழமையில் சென்று காண்பது கடினம்! வாலியை மறைந்திருந்து ராமன் கொன்றது தவறென்று நீங்களும் உணர்த்தலாம் தவறில்லை என்று நானும் உணர்த்தலாம் இதில் சரி தப்பு ரெண்டுமே உள்ளது ஏனெனில் இதற்க்கான விளக்கமும் கூட அடித்தளம் அற்றது. எனவே தவறில்லை என்று நான் அறிந்த சில தகவல்கள். நாளை தொடரும்….

     • kunaththilakam saanthai:

      இதுதான் சரியான களம் .யாரென்று பார்க்கலாம் .உங்கள் அறிவை பிரயோகியுங்கள் .

 • vinothiny pathmanathan:

  அருமையாக சொன்னீர்கள் நக்கீரரே .ராமன் மன்னனாக இருந்தாலும் என்ன ,அவரே ஆண்டவனின் மறு அவதாரமாக இருந்தாலும் என்ன ,அநியாயமாக தன் சுய நல நோக்கத்துக்காக வாலியை மறைந்திருந்து கொன்றது மாபெரும் குற்றமே என்பது என் கருத்தும் .

 • kunaththilakam saanthai:

  ராமர் மறைந்திருந்து கொன்றது உண்மைதான் துரோகம்தான் .ஆனால் அதற்கொரு காரணம் வால்மீகி சொல்கிறார் .ராமர் கொடுத்த வாக்கைக் காப்பாற்றுபவர் .முதலில் சுக்கிரீவன் தன் வேண்டுகோளைக் கூறிய போது அவர் தான் செய்து தருவதாக வாக்குக் கொடுத்து விடுகிறார் .பின்னர் வாலியை நேரில் சந்தித்தால் வாலியுடன் சமரசம் ஏற்ப்பட்டு விடும் .அப்போது தன் வாக்கைக் காப்பாற்ற முடியாது விடும் .மறைந்திருந்து கொல்வதிலும் கொடுத்த வாக்கை மீறுவது மிகப் பெரிய பாவம் என்பதாலேயே ராமர் அப்படிச் செய்தார் .

  ராமர் சீதையைத் தேடவேண்டும் என்பது உண்மைதான் .அதற்காக வாலியை கொல்ல வேணும் என்பதல்ல .வாலி சுக்கிரீவனை விட சாமர்த்திய சாலி .எனவே வாலி மூலமே அவனால் சீதையைக் கண்டு பிடித்திருக்க முடியும் ,ஆனால் வாலி செய்த பாவத்துக்குத் தண்டனை கொடுக்கவே அப்படிச் செய்தார் .வாலியும் ராவணனும் செய்தது மாபாவம் .அதாவது பிறர் பெண் கவர்தல் .இது அவர்கள் விருப்ப மில்லாமலே செய்யும் அதர்மம் .எனவே அதர்மத்தை அழித்து தர்மத்தைக் காக்க வந்த ராமர் இதைச் செய்தது குற்றமல்ல .அதேவேளை மறைந்திருந்து கொல்லாவிடில்தன் நோக்கம் நிறை வேற்ற முடியாமல்ப் போய்விடும் .
  எனவே என்னால் இங்கு ராமரைத் துரோகியாகக் காண முடியவில்லை .பிறர் பெண் கவர்ந்த வாலியும் அதுவும் தன் கூடப் பிறந்த தம்பியின் மனைவியை கவர்ந்தது மகா துரோகம் .

  அடுத்தது வாலியைக் குகைக்குள் அடைத்து தான் ஆட்சியைக் கைஎற்றதும் அதன் காரணமாக அவன் வாலியால் துரத்தப் பட்டதற்காக வாலியைக் கொலை செய்யத் துணிந்தது அடுத்த பெரிய துரோகம் .இது சுக்கிரீவனின்துரோகம் .

 • அற்புதன்:

  மறைந்து இருந்து கொல்வது யுத்த தர்மம் அல்ல என்று இராமனுக்குத் தெரியாததல்ல!. இராமன் மறைந்திருந்து கொன்றது ஆறறிவுள்ள மனிதனையல்ல.ஐந்தறிவுள்ள விலங்கு ஒன்றை.தான் இராமன் மறைந்திருந்து கொன்றார். சுக்ரீவனை கொன்று, உடலை கடைந்து அமிர்தம் பருகுவேன் என்றான் வாலி. இதன் மூலம் வாலி ஓர் விலங்கு என்பது தெரிகிறது.எனவே நேருக்கு நேர் தான் நின்று விலங்குகளை கொல்ல வேண்டுமென்றில்லை சிங்கம் புலி கரடியை வேடர்கள் மறைந்திருந்தும் வேட்டையாடுவார். விலங்காகிய வாலியை மறைந்திருந்து கொன்றது தவறில்லை எனவே விலங்காகிய வாலியை ராமன் என்றில்லை யார் மறைந்திருந்து கொன்றிருந்தாலும் சரியே.

  • nakkeeran:

   உங்களின் இந்தக் கருத்துக்கு இதோ என் பதில் .வாலி விலங்கினமே ஒழிய விலங்கல்ல .ஏனெனில் விலங்குகள் மனிதருடன் சம்பாசிக்க முடியாது .இங்கு சுக்கிரீவனும் ராமரும் ஒப்பந்தம் செய்து கொள்கின்றனர் .அவர்கள் ஒரு நாகரீகமான வானரக் கூட்டம் .அவர்களுக்கென்று ஒரு ராச்சியம் உண்டு .அவர்களும் மனு நீதிப்படியே ஆட்சி செய்தனர் எனவே அவர்களை ஐந்தறிவுடைய விலங்கு எனக் கூறிவிட முடியாது .விலங்கைக் கூட மறைந்திருந்து கொல்லல் பாவமே .நீங்கள் கூறும் சிங்கம் புலி கரடி கொடிய காட்டு விலங்குகள் அவை மனிதனுக்குத் தீம்கு விளைப்பனவாகும் .அவற்றைக் கொல்வது மனிதன் தன் பாதுகாப்புக்காகவே .ஆனால் இந்த வானரக் கூட்டம் அப்படியல்லவே .

   இன்னும் உங்கள் கருத்துப்படி அவை மிருகங்கள் என்றால் மிருகங்களுக்குப் புணர்ச்சியில் ஒழுங்கு முறை இல்லையே .அப்படியிருக்கும் போது சுக்கிரீவன் மனைவியை வாலி வலிந்திளுத்தது தவறில்லையே .அப்படியிருக்க ராமர் ஏன் வாலியைக் கொல்ல வேண்டும் ?

   அப்படியானால் இன்று உலகில் உள்ள அத்தனை ஆண் மிருக வர்க்கங்களையும் ராமர் அழிக்க வேண்டு மல்லவா !

   அடுத்த வாதத்திற்கு விரைவில் பதில் tharuven

   • அற்புதன்:

    வாலி விலங்கினமே ஒழிய விலங்கல்ல! இது திரைப்படங்களில் வடிவேல் சொல்வது போல் உள்ளது. என்னைப் பொருத்தவரை வாலி மனிதன் அல்ல அவரொரு விலங்கு இதை வாலியே சில இடங்களில் கூறியுள்ளார் ஓர் இடத்தில் இராமன் வாலியை பார்த்து கேட்கின்றார் நீ உன் தம்பியின் மனைவியை கவர்ந்தது சரியா தவறா என்று கேட்க அதற்க்கு வாலி சொல்கிறான் நாங்கள் விலங்கினம்.எங்களுக்கேது வரைமுறைகள் என்று கூறியுள்ளார் இதிலிருந்தே புரியவில்லையா? வரைமுறைகள் தெரியாதவர்கள் யாரென்று! மனிதனைக் கொன்றால் அது கொலை.மிருகத்தைக் கொன்றால் அது வதை!. விலங்கினங்களை விட மனிதத்தை வானோங்கி. உயர்த்தி பிடிப்பது பாசமும் அன்பும் இவை இரண்டுமே காடுகளில் அலையும் வாலியென்ற விலங்கிடம் இல்லாததால் தான் இராமன் மறைந்திருந்து கொன்றார்!

    நக்கீரனெ! விவாதம் என்பது போட்டியல்ல அது சண்டையும் அல்ல என் தேடலின் ஒரு வழிமுறை என்பது மட்டும்தான் இதில் கொதித்தெழுந்த வரிகள் இருந்தால் மன்னிக்கவும் மன்னிக்கவும்

    • nakkeeran:

     உங்கள் வாதத் திறனைப் பாராட்டுகிறேன் .இதுதான் தேவை .இது வாதமே ஒழியப் போரல்ல.நீங்கள் கூறும் வாதத்திலிருந்து ஒன்று புலனாகின்றது .அதாவது வாலி கூறிய நாங்கள் விலங்கினம் எங்களுக்கேது வரன்முறை ?என்பதில் விலங்கினங்கள் என ராமரே ஒத்துக் கொண்டால் அவ் விலங்கினங்களுக்கு ஏன் ராமர் தண்டனை வழங்க வேண்டும் ?
     அப்படியானால் எல்லா விலங்கினங்களையும் தண்டித்தாரா ?
     அவர் வாலியை மனிதனாகவே பார்த்திருக்கிறார் .
     எந்த விலங்காவது குடும்பம் பிள்ளை குட்டி என்றுகூடி வாழ்ந்ததுண்டா ?
     ஒன்றைமட்டும் கூறுகின்றேன் .உங்கள் வீட்டில் வளர்த்த mari ஆடு பெற்ற கிடாய்க் குட்டி ஒரு வருடத்தில் அந்த மறிக்கே கணவனாக வில்லையா ?
     நீங்களோ ராமரோ உடனே அந்தக் கிடாயைக் கொலை செய்தீர்களா ?

 • அற்புதன்:

  விலங்காக வாழ்ந்த வாலி சாவின் வாசலில் ஊசலாடும் போதும் இராமனை மானிடனாகவே பார்க்கிறான்.அதே இராமனைச் சுக்கிரிவன் கடவுளாகக் பார்க்கிறான் சில விஷயங்களை .. ஆண்டவனின் மறு அவதாரமாக வந்திருக்கும் ராமரின் செயலில் ஒன்றை எடுத்துக் கொண்டால் தர்மத்தை நிலை நாட்ட சில விஷயங்களை செய்துதான் ஆகவேண்டும் வாலி ஒரு கெட்ட குணங்கள் உள்ளவன் தம்பி மனைவியை தன் மனைவியாக எண்ணியவன் அவன் சட்டத்தினை மதித்தானா? மதிக்கவில்லை அவ்வாறு மதிக்காதவர்களை யர்; வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் கொல்லலாம்.

 • nakkeeran:

  இந்தக் கருத்தில் சட்டத்தை மதிக்காதவர்களை எப்படி வேண்டுமானாலும் கொள்ளலாம் எனக் கூறுகிறீர்கள் .ராமன் சட்டத்தை மதிக்கவில்லை என எங்கே நிரூபிக்கப் பட்டது ?சுக்கிரீவனின் ஒரு பக்கக் கருத்துடன் நீதி வழங்குவதா சட்டம் ?வாலிக்குரிய அரசை வாலி அரக்கனுடன் குகையில் போரிட்டுக் கொண்டிருக்க அவனைக் குகையில் வைத்து மூடிவிட்டு வந்தவன் ஆட்சியைப் பிடித்தது நீதியா ?

  மறைந்திருந்து கொல்வது அவர்களின் பரம்பரைப் பழக்கம் .முன்னொருபோது தசரதன் இரவு நேரம் காட்டுக்கு வேட்டைக்குப் போனபோது இருளில் மறைந்திருந்து ஒரு யானை தண்ணீர் குடிக்கும் திசையை நோக்கி அம்பெய்தார்.அந்த அம்பு காட்டில் கண்தெரியாத தம் பெற்றோருக்குப் பணிவிடை செய்து கொண்டிருந்த அவர்களின் சிறுவன் ஆற்றில் தண்ணீர் எடுத்துக் கொண்டிருக்கும் போது அவன் மீது பட்டு அவனக் கொன்றது .அப்போது அவனையே நம்பி வாழ்ந்த அவன் பெற்றோர் இருவரும் உயிரை விட்டனர் .மறைந்திருந்து இவர் எய்த அம்பினால் மூன்று உயிர் அநியாயமாக மாண்டனர் .அவரின் மகன் தானே ராமர் .எனவே அவர்கள் தர்மத்துக்கு இது சரியாக இருக்கலாம் .

 • nakkeeran:

  மேலுள்ள கருத்தில் இரண்டாவது வரியில் ராமன் என்பதை வாலி என வாசிக்கவும் .

 • vinothiny pathmanathan:

  தாரை(வாலியின் மனைவி) ,இராமன் துணையொடு சுக்கிரீவன் போரிட வந்துள்ளமையைச் சுட்டிக்காட்டி போருக்குச் செல்ல வேண்டாமெனத் தன் கணவனிடம் மன்றாடுகிறாள்.. வாலியோ , இராமனது அறப்பண்புகளையும் ,நீதி வழுவாத் தன்மையையும் எடுத்துக் கூறி, உணர்த்திவிட்டுப் போரை விரும்பிச் செல்கிறான்.
  வானர அரசனான வாலி இந்திரனின் அம்சமாவான். இந்திரன் அழித்த மந்திரமாலையின் சக்தியால் வாலி யாருடன் யுத்தம் செய்ய சென்றாலும் யுத்தம் செய்ய வருபவனின் அரை பலம் வாலிக்கு வந்து சேரும். வாலியை எந்த ஒரு அரசனாலும் நேரில் யுத்தம் செய்து வெல்ல முடியாது. அது தான் ராமன் மறைந்திருந்து அம்பு தொடுக்கக் காரணம் .

  இராமனின் ஒரு கணை மார்பிலே ஊடுருவி நிற்க, வீழ்ந்து கிடக்கும் வாலி, மறைந்திருந்து என் உயிர் எடுத்த ராமனே என்று குற்றம் சாட்டி, அவனைக் குற்றவாளிக் கூண்டிலே ஏற்றி அடுக்கடுக்கான கேள்விக் கணைகளால் துளைக்கிறான் ,அதற்கு பதில் சொல்ல முடியாமல் திணறுகிறார் ராமர் .ஏன் மறைந்திருந்து விலங்கை வேட்டை ஆடுவது போலத் என்னை வேட்டை ஆடினாய் ? என்ற வாலியின் நியாயமான கேள்விக்கு ராமனின் தம்பி இலக்குவன், உன் தம்பி சுக்கிரீவன் முதலிலே ராமனிடம் அபயம் தேடி வந்து விட்டார் .நீயும் அபயம் என்று வந்து விட்டால் ராமனின் நிலை அல்லது அவர் கொடுத்த வாக்கு என்னாவது ,எனவே தான் அண்ணா உன்னை மறைந்திருந்து அம்பு தொடுத்தார் என்று அண்ணனின் தவறான செயலுக்கு விளக்கம் தர முனைகிறார்.எனவே சுக்கிரீவனின் நட்புக் கருதி வாலியை மறைந்திருந்து கொன்ற இராமன் என்றுமே நீதி தவறியவர் என்பதுவே நிஜம்.
  இராம அவதாரத்தில் ராமன் மறைந்திருந்து வாலியைக் கொன்றது தவறே. அதற்கான பலனையும் அவர் கண்ணனாக (மகாபாரதம் காப்பியத்தில்) காந்தாரியின் சாபத்திற்கு உள்ளாகி உயிரை விட நேர்கிறது.முன் பிறவியில் இராமாவதாரத்தில் வாலியை மறைந்திருந்து கொன்ற பாவத்தின் விளைவு, அடுத்த பிறவியில் ஒரு வேடுவன் அறியாமல் எய்த அம்பு கண்ணனின் உயிரைக் குடிக்கிறது.இதன் மூலம் நாம் புரிந்து கொள்ள வேண்டியது ,ராமன் வாலியை மறைந்திருந்து கொன்றது தவறு ,எனவே தான் அவர் அதற்கான பலனையும் அனுபவிக்க நேர்ந்தது. .

  அறத்தின் திருவுரு இராமன் வாலி விடயத்தில் அறம் தவறி விட்டான் என்பதே உண்மை என்பதுவே என் வாதம்

 • அற்புதன்:

  வாலி அரக்கனுடன் குகையில் போரிட்டுக் கொண்டிருக்க அவனைக் குகையில் வைத்து மூடிவிட்டு வந்தவன் ஆட்சியைப் பிடித்தது நீதியா ?என்ற கேள்விக்கு பதில் என்னவென்றால். சுக்ரீவன் சூழ்ச்சியில் குகையை மூடி விடவில்லை வாலி மாயாவி என்ற அரக்கனை அழிக்க முடிவு செய்தான் வாலியின் பலத்தை கண்டு அரக்கன் ஒரு நீண்ட குகைக்குள் சென்று புகுந்துகொண்டான்.வாலி தன் தம்பி சுக்ரீவனை பார்த்து தம்பி வேறு எந்த அரக்கனும் உள்ளே நுழையாதபடி நீ இங்கே வாசல் முன்பு நின்று பார்த்துக்கொள் என்று கூறி விட்டு வாலி உள்ளே சென்று மாயாவியுடன் போரிட்டான். ஒரு ஆண்டு வரை சண்டை நடக்கிறது, அவர்களின் இரத்தம் குகை வாயில் வரை வந்து விட்டது இதை பார்த்த சுக்ரீவன் வாலி இறந்திருக்கக் கூடும் என்று நினைத்து மாயாவி தன்னையும் கொன்று விடுவான் என்று எண்ணிய சுக்ரீவன் கோபத்தில் அவசர அவசரமாக குகையை மூடி விட்டு திரும்பி சென்று விட்டான்.

  இராமாயணம் நடந்த காலம் பல ஆண்டுகளுக்கு முன்னதாக இருக்கலாம் ஆனால் இராமாயணத்திலே வாலியை மறைந்து நின்று ராமர் கொன்றது வரலாற்று விவாதப் பொருளாக இன்றும் எடுத்துப் பேசப் படுகின்றது. ராமர் கடவுள் அவதாரத்திலிருந்து இதை செய்து இருப்பதால் தான் இந்தக் கேள்விகள் .பதில்களே தவிர இதை நீங்களோ அல்லது நானோ செய்துருந்தால் யாருமே கண்டுகொள்ள மாட்டார்கள்.எனவே இதுவொரு மதத்தின்ஆரம்ப வரலாறு என்று .கருதுவதால் தான் பதில் இல்லாமல் நீடிக்கின்றது இது சம்பந்தமான எத்தனை கேள்வி பதில்கள் தரப்பட்டலாலும் இது ஒரு விடை காண முடியாத வழக்கு

  • vinothiny pathmanathan:

   அற்புதன் அவர்களின் வாதத் திறனை முதலில் பாராட்டுகிறேன்.
   அற்புதன் அவர்களே நீங்கள் குறிப்பிட்டபடி இது ஒரு விடை காண முடியாத வழக்காக இருந்தாலும் ,சட்டங்களை உருவாக்கிய மன்னன் வழி வந்த ராமனே சட்டங்களையோ போர் மரபுகளையோ கடைப்பிடிக்கவில்லையே .
   மன்னன் எவ்வழியோ மக்களும் அவ்வழியே என்பது தானே நியதி.

  • kunaththilakam saanthai:

   சுக்கிரீவன் வாலியால் விரட்டப் பட்டபோது ஆட்சியில் விருப்பமில்லாது இருந்தால் சுக்கிரீவன் ராமர்மூலம் வாலியுடன் சமாதானம் செய்திருக்கலாம் .ஆனால் சுக்கிரீவன் வாலியைக் கொல்லவே ராமனை வேண்டுகிறான் .ராமரும் நீதியை எடுத்துரைக்காது தன் சுயநல நோக்கிலேயே வாலியைக் கொல்ல சம்மதிக்கிறான் .பின் கொன்றும் விடுகிறான் .அதுகும் மறைந்திருந்தே கொல்கிறான்.இது ராமர் விட்ட தவறுதான் .ராமர் அதர்மத்தை அழித்து தர்மத்தைக் காக்கவென அவதாரம் எடுத்தும் குளிக்கப் போய் சேறு பூசியது போல் ஆனது உண்மையே .

 • kunaththilakam saanthai:

  அருமையான விளக்கம் வினோ .உன் அறிவைப் பாராட்டு கிறேன் .ராமனைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த உன் வாதமே போதும் .நீ என் அருகில் பிறந்ததை இட்டுப் பெரிதும் மகிழ்ச்சி அடைகின்றேன் .மீண்டும் என் வாழ்த்துக்கள் .

  இருந்தும் கண்ணன் இறப்புக்கும் ராமர் தவறுக்கும் தொடர்பு படுத்துவது நியாயமில்லை என நினைக்கிறேன் .காரணம் ராமர் கண்ணன் என்பது விஸ்ணு எடுத்த ஒவ்வொரு அவதாரம் .எனவே ஒரோவதாரத்தின் நோக்கம் அந்த அவதாரத்துடன் முடிந்து விடும் .முதல் அவதாரத்தின் தொடராக அடுத்த அவதாரம் எடுப்பதில்லை .தேவைப் பட்டபோது எடுப்பதே அவதாரம் .மகாபாரத்தில் கண்ணன் பாண்டவரின் நண்பனாக செயல் படுகிறான் .அங்கு அவனுடைய தெய்வீக சக்தி பாரத உத்தம் நடத்த வேண்டுமென்பதற்காகவே பயன்படுகிறது .அவனுடைய நோக்கம் துரியோதனன் ஆகியோரின் அதர்மத்தை ஒழித்து தர்மத்தைக் காக்க வேண்டுமென்பதே .எனவே அந்த நோக்கம் நிறைவேறியதும் அவனிடம் இருந்த தெய்வீக சக்தி இல்லாமல்ப் போய்விட்டது .இப்போது கண்ணனாக இருந்த உடல் ஒரு சாதாரண மனித உடலே .கடைசியில் அவன் எடுத்த உடலையும் அழிய வேண்டுமென்ற நியதியினாலேயே அவனது மரணத்துக்கு ஒரு சாட்டாக அந்த மரண நிகழ்வு நடந்தது .
  நன்றி

  • vinothiny pathmanathan:

   குணம் மாஸ்டர்
   உங்கள் அன்பான வாழ்த்துக்களை தலை வணங்கி ஏற்றுக்கொள்கிறேன். மிக்க நன்றி. உங்கள் வாதங்களை வாசித்து நிறையக் கற்றுக்கொண்டேன்.
   உங்களால் எம்மூர் பெருமையடைகிறது என்று சொன்னால் அது மிகையல்ல.உங்கள் வாதத்திற்கு என்னால் முடிந்தவரை விளக்கமளிக்க முயற்சிக்கிறேன் . தவறிருந்தால் சுட்டிக் காட்டுங்கள் .

   இதில் அதாவது கடைக்காலத்தில் நமக்குக் கிடைத்த நூல் தொல்காப்பியத்தில் தொல்காப்பியர் குறிப்பிட்ட , ஊழ் வினை பற்றிய கருத்துப்படி, ஊழ் வினை (முன்வினைப்பயன்)இருக்கின்றதே, அது எந்த விதமான அவதார புருஷர் , கடவுள், மன்னன் , சிறியவர், பெரியவர், நல்லவர், தீயவர், பணக்காரர், ஏழை என்ற என எந்த வேற்றுமைகளையும் ,பேதங்களையும் கடந்தது தான் ஊழ்வினையின் பயன். இந்தப் பொது விதிக்கு இராமன், கண்ணன் உட்பட அவதாரங்களும் விலக்கல்ல. எனவே செய்த பாவங்களில் இருந்து யாரும் எளிதில் விடுபட முடியாது. அது காலம் கடந்தும் அதற்கான பலனை அனுபவித்தே தீர வேண்டும். அதன் படி பார்க்கப் போனால் காலத்தால் முற்பட்ட இராமாயண காப்பியத்தில் வாலி மீது மறைந்திருந்து அம்பு எய்த இராமர் ,வேதவியாசரின் மகாபாரதத்தில் அதற்கான பலனை அனுபவிக்க நேர்ந்தது. எனவே தான் பரம்பொருளின் அவதாரமான இராமர் மறைந்திருந்து வாலியை கொன்றதை கம்பன் என்ற மாபெருங் கவிஞனும் கூட ,பரம்பொருள் செய்த செயலை வெகு சூசகமாக தன் கம்பராமாயாணத்தில் மெழுகு பூசி மறைக்கப் பார்க்கிறார் .மரணப்படுக்கையில் இருந்தபடி இராமனைப் பார்த்து வாலி நீ கொன்றது என்னையல்ல ,தருமத்தை என்கிறானே. இதன் மூலம் என்ன புரிகிறது .தர்மப் பிரபுவான ஸ்ரீராமனே தவறு செய்து விட்டான்.ஆனால் கம்பனோ வாலியின் வதையினால் இராமன் சிறுமை அடையவில்லை என்று கூற வருகின்றான்.
   வாலியின் இறுமாப்பையும், கெட்ட குணங்களையும் விளக்கிச் சொல்கிற கம்பர் , சட்டதிட்டங்களுக்கு உட்படாதவர்கள் சட்ட வரம்புக்கு அப்பாற்பட்டவர்கள் என்கிறார் , வாலி சட்டத்தினை மதித்தானா? மதிக்கவில்லை. அவ்வாறு மதிக்காதவர்களை யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் கொல்லலாம். இராமன் வாலியை மறைந்திருந்து கொன்றது சரியே! என்கிறார் கம்பர்!”அப்படிக் கூறும் கம்பர் எதிரியே ஆனாலும் ஒருவர் மேல் மறைந்திருந்து அம்பு தொடுத்தது பிழையே என்றோ ,அல்லது அது போர் மரபுகளை மீறிய செயல் என்பதையோ எந்த இடத்திலும் குறிப்பிட முன்வரவில்லையே ,காரணம் இராமன் இக்காப்பிய நாயகன் .சட்டங்களையோ அல்லது போர் மரபுகளையோ ராமனே கடைப்பிடிக்க முடியாமல் போன போனபோது, குரங்கினத்தை சேர்ந்த வாலியிடம் கம்பர் இவற்றினை எதிர்பார்த்திருக்கக் கூடாது என்பது என் வாதம்,

 • அற்புதன்:

  ராமன் வாலியை மறைந்திருந்து கொன்ற காரணத்தை கொஞ்சம் மாத்தி யோசிப்போம். வாலியை ராமர் மறைந்திருந்து கொல்லாமல் நேரடியாகவே வந்து கொன்றுயிருந்தால் என்ன நடந்தியிருக்கும்? கதை முடிந்திருக்கும். ஆனால் எமக்கொரு அருமையான பாடம் கிடைத்திருக்காது.

  இவ்வுலகில் எவ்வளவொரு உத்தமனாய் பெரிய பதவியில் இருந்தாலும், எவ்வளவு நல்ல குணங்களுடன் நல்லதை செய்து நல்லவனாக அதிக உயரம் கொண்டவனாக இருந்தாலும், அவன் ஒரு தவறு செய்துவிட்டால் அவனை இந்த உலகம் குறை சொல்லிக் கொண்டே தான் இருக்கும்.அந்தொரு தவறுக்காக அவனை மன்னிக்கவும் தயார்ல்லை.நல்லதை நினைத்து.நல்லது செய்தாலும் ஒரு தவறு அனத்தையுமே மாற்றி விடும் எனக்கே இந்த நிலையென்றால் உன் நிலை என்ன என்பதை சற்றே சிந்தித்து பார் என்று ராமன் சொல்லாமல் சொன்ன பாடமிது

  ராமாயணத்தில் எதிர்கொண்ட ஒவ்வொரு அத்தியாயத்தையும், ஒவ்வொரு சம்பவத்தையும் வெவ்வேறு மொழிநடையில் எனக்கு கற்பித்த குணம் ஆசிரியர். நக்கீரன். வினோதினி மூவருக்கும் என் வாத்துக்களும் நன்றிகளும் உங்கள் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதமாக வார்த்தெடுத்து வைத்துள்ளேன் என் நெஞ்சில்!. தேன் துளிகள் போல் உங்களின் அறிவும் ஆற்றலும் தகுதியும் திறமையும். வாழ்த்துக்கள்

 • vinothiny pathmanathan:

  அற்புதன்
  ராமன் கெட்டவனாக இருந்திருந்தால் அவன் எத்தனை பேரை நேரேயும் சரி அல்லது மறைந்திருந்து கொன்றிருந்தாலும் நாங்கள் கேட்கவோ வாதிடவோ போவதில்லை .மாறாக ஸ்ரீராமன் ஒரு அவதாரபுருசனாக இருந்தும் ,தர்மத்தை நிலைநாட்ட இந்தப்பூவுலகில் அவதரித்து இப்படி வாலியை மறைந்திருந்து கொன்றது தான் இங்கு இவ்வளவு பெரிய சிக்கலை கொடுத்து எங்களை எல்லாம் ஒரு நல்ல கருத்துக் களத்தில் உள்வாங்கி சிந்திக்க வைத்தது.
  மற்றும் நீங்கள் குறிப்பிட்டபடி ராமர் இந்த வாலிவதையின் மூலம் மக்களுக்கு ஒரு பாடத்தையும் உணர்த்தியிருக்கலாம். எனவே நல்ல பல கருத்துக்களை தெரிவித்த அற்புதன் அவர்களையும் மனதார பாராட்டி வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் தமிழ் அறிவு கண்டு மிக்க மகிழ்ச்சி.

 • kunaththilakam saanthai:

  இங்கு மூவரும் தவறு செய்திருக்கின்றனர் .ஆனால் ராமரும் சுக்கிரீவனும் தவறு எனத் தெரிந்து கொண்டே செய்கின்றனர் .அதாவது தன் அண்ணனின் தவ வலிமையை ராமனிடம் கூறியது .தான் மறைந்துள்ள இடம் வாலி வரக்கூடாத பாது காப்பான இடம் என்ற ரகசியங்களை ராமனிடம் கூறியதே தன் தமையனைக் காட்டிக் கொடுக்கும் துரோகம் .அதன்பின் தான் தன்னையும் தம் இனத்தையும் பாதுகாக்கவே குகையை மூடியது உண்மையாக இறந்தாலும் பின்னர் அவனுக்கு அரச ஆசை வந்தது உண்மையே .அதனால்தான் அவன் ராமனிடம் வாலியைக் கொல்ல வேண்டுகிறான் .ராஜாஜி ராமாயணத்தில் கம்பரை மிகவும் சாடுகிறார் .சுக்கிரீவன் குறைகளை கம்பர் சாணி பூசி மறைக்கிறார் என்பதே அவர் கருத்து .சுக்கிரீவன் நேர்மையானவன் என்றால் ராமர் மூலம் அவனுக்கு நீதி புகட்ட முனைந்திருக்க வேண்டும் .ஆனால் அவன் அவ்வாறு செய்ய அவன் விரும்பாதது அவன் பதவி ஆசையே .

  அடுத்து ராமர் தன் நிலையை யோசிக்கவில்லை .தன் காதலையே பெரிதாக அவ இடத்தில் பார்த்துள்ளார் .ஒருவனுக்கு உலகில் ஒருதாரம் என்பதே அவரின் இவ் அவதாரம் .அதற்காக அக்குற்றத்தைச் செய்த வாலியைத் தண்டித்தார் .ஆனால் தண்டனை கொடிது .வாலிக்கு நல்லறிவு புகட்டுவதுடன் சுக்கிரீவனின் ஆசையையும் நீக்கி இருக்க வேண்டும் .ஆனால் அவர் அதைச் செய்யாது மறைந்திருந்து கொன்றது அவர் செய்த துரோகம் .

  வாலி சுக்கிரீவனின் பெண்ணை விரும்பியது குற்றம் .ஆனாலும் ராமருடன் பார்க்கும் போது அது பார தூரமானது அல்ல என நினைக்கிறேன்.ஏனெனில் ராமனுக்கு மூன்று அன்னைகள் .

  இங்கு வாதிடும் உங்களுடன் வாதிட என்னால் முடியாது .காரணம் நான் முன்பு வாசித்த அறிவுடனே என் கருத்தைக் கூறுகிறேன் .நான் இணையத்தில் வயது முதிர்ந்தவன் .பலவற்றை மறந்துள்ளேன் .என் வயது முதிர்ச்சி .எனவே தவறுகள் இருந்தால் மன்னிக்கவும் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

 

உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.