உங்கள் கருத்து

அறிவுப்புகள்

 

மீடியாக்கள்

கருத்துக் களம் -42

10822406_750241601713611_211172201_n

 

969..views

 • ஊரவன்:

  மிகவும் முக்கியம் ஒரு பதவியில் இருக்க வேன்டும் அதுதான் இம்மதி இதுதான் உலகம்

  • இளைஞன்:

   தம்பியோ அண்ணனோ தெரிய வில்லை இருந்தாலும் கேக்கிறேன் ஊரவன் உங்களுக்கு என்ன பதவி தந்தால் நிம்மதியாக இருப்பிர்கள் ,வாக்கெடுப்பும் நடக்க போகுது உங்கள் முடிவை சீக்கிரமாய் சொன்னால்தான் ,நாங்கள் ஒரு முடிவுக்கு வரல்லம்,,,

 • kunaththilakam saanthai:

  நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

 • vinothiny pathmanathan:

  நாற்பது என்பது ஒரு மனித வாழ்வின் மிகவும் முக்கியமான வயது. காரணம் என்னவெனில் இளமைக் காலத்தின் இறுதிப் படியும், முதுமைக்காலத்தின் முதல்படியும் இந்த நாற்பது வயதில்தான் வருகிறது . நமது எதிர்காலத்தை பற்றிய ஒரு இனம் புரியாத பயம் தோன்ற ஆரம்பிக்கும் வயதும் இது தான் . இன்னும் சிலர், இந்த வயதில் கொலஸ்ட்ரோல் , சுகர்,பிறசர் போன்ற தீராத பிணிகள் வந்து விடுமோ என்று பயத்தில் வாடுவர் . இதுபோல் பல குழப்பங்கள் வந்து,திக்குமுக்காட வைக்கும் வைக்கும் வயதும் இது தான் .
  ஆனால், நாற்பது வயதுக்குள் செய்திருக்க வேண்டிய சில விஷயங்களைச் செய்திருந்தால், நாம் எதற்குமே கலங்கி நிற்க வேண்டிய அவசியமே இருக்காது.

  இன்றையகாலத்தில் ஒரு மனிதன் தனது நாற்பது வயதுக்குள் கட்டாயம் செய்திருக்க வேண்டிய விஷயம் என்ன?

  முதலில் பணம் என்று வைத்துக் கொள்வோமானால் ,
  பணம் என்பது வாழ்க்கைக்கு மிகவும் அவசியமான ஒன்று தான் .அதற்கான ஒரு அளவை கொண்டு திருப்தியை அடைவதே அதிக முக்கியம் என நினைக்கிறேன்.ஏனெனில் உண்மையான சந்தோஷத்தை பணத்தாலோ, சேர்த்து வைக்கும் சொத்துகளாலோ நாம் அடைந்து விட முடியாது .எனவே இந்த மனித பிறவியை வளமுடனும் மகிழ்வுடனும் வாழ வாழ்வில் போதுமென்ற மனமே அவசியமாகிறது. அதனை அறிந்து கொண்டு அளவோடு சேர்த்து வளமோடு வாழப் பழகிக் கொள்வோம்.

  நட்பு .
  வாழ்வில் எல்லோருக்குமே எல்லாமே மகிழ்ச்சியளிக்கும் விதத்தில் அமைந்து விடுவதில்லை .நல்ல நட்பின் அடையாளம் என்பது பண உதவி மட்டுமல்ல. மனது கஷ்டப்படும் நேரத்தில், ஆறுதலான வார்த்தைகளும் தான்.ஆனால் அந்த நட்பே மனதின் வேதைனைக்கு காரணமாக அமையுமேயானால் அதை போன்ற நட்புக்கள் இருப்பதை விட இல்லாமல் இருப்பதே மேல் .நட்பு என்பது ஒருவரின் வாழ்வையே திசைமாற்றும் வல்லமைக் கொண்டதால், அது விஷயத்தில் ஒவ்வொரு மனிதனுக்கும் தீவிர எச்சரிக்கையும், கவனமும் தேவை.எனவே நல்ல நட்புக்கு வயது ஒரு தடை இல்லை ,அது வயதின் எந்த காலகட்டத்திலும் அமையும் என்பது என் எண்ணம் .

  அடுத்து சொந்தங்கள்

  சொத்து பிரச்சனை/பங்காளிப் பிரச்சனை என்று என்ன இருந்தாலும் ,சில சமயங்களில் எந்த சங்கடங்களை நாம் சந்திக்கும் போதும் ,எந்த சூழலிலும் விட்டுக் கொடுக்காத சொந்தங்கள் மட்டுமே கேட்காமலே வந்து உதவும். கவலைப்படும் நேரத்தில் அள்ளியணைத்து ஆறுதல் தரும். எதிர்பார்ப்பு இல்லாத அன்பு சொந்தங்கள் மட்டுமே .இந்த சொந்தங்களுக்குள் ஒருபோதும் பண பாகுபாடோ, மன வேறுபாடோ இருப்பதில்லை. இந்த மாதிரியான உறவுகள் இருக்கிறவரை எத்தனை தூரத்தில் இருந்தாலும் நீடித்து நிலைத்திருக்கும் என்பது மட்டும் உறுதி. இதைத் தான் “தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்” என்று சொல்வது .

  அமைதியான மன நிலை
  மனம் இறுக்கமும் வேதனையும் அடையும் வேளைகளில் மனதிற்குப் பிடித்தமான மனதிற்கிசைந்த பொழுது போக்குகள் ஆன்மிகம் ,இசை, நடனம் போன்ற கேளிக்கைகள், ஒய்வு போன்றவற்றின் மூலம் மன அமைதி பெற முயற்சிக்கலாம்.நல்ல மன நிலை என்பது எந்த வயதிலும் நாம் பெற முயற்சிக்க முடியும் .இதற்கும் வயது ஒரு தடையில்லை என்பதுவே என் எண்ணம்

  ஆரோக்கியமான உடல்நிலை
  நோய்களைத் தவிர்த்து அதனால் பாதிக்கப்படாமல் வாழ்வதே உயர்ந்த சொத்து. நாம் உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. பருவமும் இளமையும் இருக்கும் போது எங்களால் எவ்வளவு முடியுமோ அந்தளவுக்கு பணம் பொருள் தேடுவதையே ஒன்றையே குறிக்கோளாகக் கருதுகிறோம். உடல் ஆரோக்கியமே மகிழ்ச்சியையும் நல்ல வாழ்வு முறையையும் தரும் என்பதை மறந்து போய் விடுகிறோம்..அனைவருக்கும் ஆரோக்கியமான உடல் நிலை வேண்டும். உடல் ஆரோக்கியமே நமது வெற்றிக்கு மூல காரணம். பணம் இருந்தும் உடல் ஆரோக்கியமாக இல்லை என்றால், அதில் எந்த பணத்தை சம்பாதிக்க மாடாக உழைத்தோமோ அது வைத்தியருக்கும் ,வைத்தியசாலைக்குமே போய் விடுகிறது. ஐந்தில் வளையாதது ஐம்பதிலே வளையாது என்பார்கள் .எனவே இளம் வயதிலே உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தாமல் ,நாற்பதுகளில் அதன் பலன்களை அனுபவிக்கும் போதே நம்மில் பலருக்கு புரிகிறது.எனவே வளமான எதிர்காலத்திற்கு என்றுமே முதலில் தேவை ஆரோக்கியமான உடல் நிலையே ,அதனை இளமையிலிருந்து கடைப்பிடிப்பதன் மூலமே வளமான ஒரு வாழ்வை நாம் எதிர் நோக்க முடியும் . உடல் ஆரோக்கியமே வெற்றிக்கு முதல் படி என்பதுவே என் வாதம் .

  • kunaththilakam saanthai:

   வினோவின் நீண்ட விளக்கம் எல்லோருக்கும் ஒரு அறிவுரையாக இருக்கும் என நினைக்கிறேன் .அருமையான விளக்கம் .இதைத் தான் நான் ஒரே வசனத்தில் “வரப்புயர “என்பதுபோல் “நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் “எனக் குறிப்பிட்டேன் .சுவர் இருந்தாலே சித்திரம் வரையலாம் .

  • அற்புதன்:

   வினோதினி அவர்களே! இந்தத் தலைப்பை அழகாக ரசித்து அனைத்தையும் ரொம்பவே ரசனையுடன் தொகுத்து கருத்துப் பகிர்ந்துள்ளீர்கள். மகிழ்ச்சியாக இருக்கிறது.நீங்கள் கருத்து தெரிவிக்கும் வழி கருத்தை அழுத்திக் கூறும் முறையை கண்டு வியந்து நிற்கிறேன்.பாராட்டுக்கள். எனவே அறிவுபூர்வமாக உரையாடும் உங்கள் திறமையையும் அறிவையும் பாராட்டுவதா? உங்கள் துணிச்சலை பாராட்டுவதா? இல்லை உங்கள் கருத்து தெளிவை பாராட்டுவதா? மிக சிறப்பாக வெளிப்படுத்துகிறீர்கள். மீண்டும் அன்பான உங்கள் கருத்துக்களுக்கு என் .மனமார்ந்த நன்றிகள் பல.

   • vinothiny pathmanathan:

    நன்றி அற்புதன் .கருத்துக்கள தலைப்பில் தங்கள் கருத்துக்களை அறிய ஆவலாக இருக்கிறோம்.

 • mohan:

  உடல் ஆரோக்கியமாக இல்லை என்றால் எதையுமே செய்யமுடியாது .இதைத்
  தவிர்த்து சொந்த உழைப்பில் தன்னையும் தன்னை நம்பி வரும் மனைவியையும் கண் கலங்காமல் பார்த்துகொள்ளும் பக்குவம் பெற்றிருக்கவேண்டும்.இதற்காக பணம் தான் வாழ்க்கை என்று இல்லை .
  வாழ்க்கைக்காக பணம் .இதுவே என் தாழ்மையான கருத்து.

 • என்ன ஒரு அருமையான களம் ::
  எனது கருத்து என்னவென்றால் : பணம் பணம் பணம் பணம் … பணம் இல்லாவிடின் மேலே உள்ள எதுவுமே உங்களுடன் நிறைய நாட்கள் நிக்காது …

  வினோதினி அக்க நிங்கள் கூட முதலில பணம் என்று ஆரம்பிட்சு இருகிரின்கள் : முதலில் பணம் என்று வைத்துக் கொள்வோமானால் ,……..

  ஆகவே : பணம் பணம் … அடுத்த படியாக அமைதியான மன நிலை… அவ்வளவும் தான்

  • kunaththilakam saanthai:

   “எத்தனை கோடி பணமிருந்தாலும் நிம்மதி வேண்டும் வீட்டிலே”
   இந்த நிம்மதியைத் தர உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் .

  • vinothiny pathmanathan:

   விமல் அவர்களே
   நான் முதலில் பணம் என்று ஆரம்பித்தது ,நம்மில் பலர் பணம் தான் வாழ்க்கைக்கு முதலில் அவசியம் என்ற தப்பான கருத்தை தெளிவுபடுத்தவே. ஆரோக்கியம் என்பது எப்போதும் எம்முடன் இருந்தால் தான் செல்வங்களும், வசதி வாய்ப்புக்களும் தேவை .இல்லாவிட்டால் எல்லாமே பயனற்றுப் போய்விடும் .
   ஆரோக்கியம் தான் நம் வாழ்வின் பெரும் செல்வம் என்கிற ஒரு பெரிய உண்மையை நம்மில் பலர் உணர்வதில்லை. நோய் வந்ததும் அதை குணப்படுத்த நாம் பார்க்கிற மருத்துவம், செய்கிற
   செலவுகள், அதனால் ஏற்படும் மன உளைச்சல்கள் இத்தனைக்கும் பின்னர்தான் உடல் ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை உணர்கிறோம். எனவே இதனை உணர்ந்து கண்கள் இருக்கும் போதே சூரிய நமஸ்காரத்தை செய்வோம் .நன்றி உங்கள் கருத்துக்கு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

Browse நினைவஞ்சலி

மேலும் →

சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

 

உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.