உங்கள் கருத்து

அறிவுப்புகள்

 

மீடியாக்கள்

சுவிஸ் வாழ் வின்ரத்தூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்.புகை படங்கள்

சுவிஸ் வாழ் வின்ரத்தூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்.
வாழ வழியற்ற ஒரு குடும்பத்தை வாழவைக்க வாழ்வாதாரம் வழங்கிய சுவிஸ் வாழ் வின்ரத்தூர் மக்களின் உதவியுடன் .உடையார் கட்டு புதுக்குடியிருப்பை சேர்ந்த சிவப்பிரகாசம் சுரேஷ் குமார் இவர் இறுதி யுத்தத்தின் போது தனது ஒரு கையும் மற்ற கையில் இரண்டு விரல்களையும் இழந்து கஸ்ரத்தில் குடும்ப வாழ்கையில் இருந்தார் இதன் போது குடும்பத்தினருக்கு உதவும் கரங்களின் ஊடாக அக் குடும்பத்துக்கு ஒரு கடை அமைத்து ஒரு அளவு மளிகைப் பொருட்களும் கொள்வனவு செய்து அன்பளிப்புச் செய்துள்ளோம் .இக் கடை 14.03.2015 சனிக்கிழமை மங்கள விளக்கேற்றி திறந்து வைக்கப் பட்டுள்ளது .

இக்கடைக்காக செலவு செய்த விபரம் ,
கட்டடம் அமைத்தது ——————50000.00
மளிகைச் சாமான் ————————104984.oo
திறப்பு விழா செலவு ——————–25620.oo
மொத்தம் —————————————–180604.00




01 02 03 04 DSC01732 DSC01733 DSC01736 DSC01742 DSC01750 DSC01751 DSC01753 DSC01755 DSC01756 DSC01757 DSC01758 DSC01759 DSC01768 DSC01769 DSC01771 DSC01773 DSC01775 DSC01776 DSC01785 DSC01786 DSC01789 DSC01792 DSC01795 DSC01796 DSC01797 DSC01799 DSC01800 DSC01801 DSC01802 DSC01807 DSC01810 DSC01811 DSC01817

2,610..views

  • வடபுலத்தான்:

    புலத்தில் வாழும் கருணை உள்ளம் படைத்த எம் ஈழத்து மக்களுக்கு இந்த பாமரனின் பணிவான நன்றிகள் கோடி …
    எம் வன்னிமண்ணில் இறுதி போரின் பிற்பாடு நலிவ்வடைந்த குடும்பங்கள் ஏராளம் ஏராளம் அதில் இனம் கண்டு உதவிடுவதில் உதவும் கரங்கள் தாராளம் தாராளம் .இந்த நலிவடைந்த குடும்பத்தின் தலைவனை பார்க்கும் பொது இரங்கதவர்களும் இரங்குவார்கள் ,,,
    சுவிஸ் வாழ் வின்ரத்தூர் மக்களுக்கு நன்றிகள் இதுபோன்ற உதவிகளை வின்ரத்தூர் வாழ் மக்கள் தொடர்த்து உதவிட வென்றும் .
    நன்றிகள் உதவிடும் கரங்களுக்கு வின்ரத்தூர் மக்களின் உதவியை உரியவர்களுக்கு குடுத்ததர்க்கு….

    தொடரட்டும் தொடரட்டும் உங்கள் சேவை
    உதவும் கரங்களின் சேவை
    மலரட்டும் மலரட்டும் ஏழைகளின் வாழ்விலும்
    சந்தோசம் என்னும் மழலை சிரிப்பு

    உதிக்கட்டும் உதிக்கட்டும் கலைசூரியன்
    அவர்களின் முற்றத்திலும்
    தொடரட்டும் தொடரட்டும் உங்கள் சேவை
    அது ஏழைகளை நோக்கி தொடரட்டும் !!!

  • கவி:

    வாழ்த்துகள் உங்கள் பணி தொடர்க

  • vinothiny pathmanathan:

    ஆலயத்திற்கு சென்று தான் இறைவனைத் தேட வேண்டிய
    அவசியமில்லை .ஏழைகளின் சிரிப்பினிலே இறைவனைக்
    காணலாம் .உண்மையிலே எம்மவர் இணையம் காலையடி.நெற் செய்கின்ற இந்த சேவைகளை பாராட்டாமல் இருக்க முடியாது.மனிதம் ,மனிதாபிமானம் இன்னும் இருந்து கொண்டு தான் இருக்கிறது என்று நம்ப உதவும் கரங்களின் இந்த சேவை ஒன்றே போதுமானது என்று சொல்வதிலே பெருமை அடைகின்றேன்.

  • வறுமையினால் அடிப்படை வசதிகள் இன்றி வாழ்வாதாரம் எதுவுமற்ற நிலையில் அவதிப்படும் குடும்பங்களுக்கு கொடுத்து உதவும் உதவும் கரங்களின் பெருமைகளை எழிதிப் பாராட்டுவதற்கு வார்த்தைகளே இல்லை என்று நான் கூற வில்லை. ஒன்று அல்லது இரண்டோடு நிறித்தியி ருந்தால் பாராட்டுவதற்கு வார்த்தைகள் என்னிடம் இருந்திருக்கும்.ஆகையால் உண்மையில் பார்த்துப் பார்த்து களைத்து போனேன்..

  • வசந்தன்:

    இந்த குடும்பங்களுக்கு உதவமுன்வந்த அந்த நல்ல உள்ளம் படைத்த சுவிஸ் வின்ரத்தூர் குடும்பங்களையும் இரு கை குப்பிவனங்கிறேன்,,இவர்களுக்கு உதவின குடும்பங்கள் சீரும் சிறப்பும்மாக வாழவேண்டும் என்று இறைவனை வணங்கிறேன் ,நிங்கள் நீட்டிய கரம் இரு குடும்பங்களின் வாழ்வில் விளக்கு ஏத்தி வெளிச்சம் குடுத்து இருக்கிறியள் ,,வாழ்க வளமுடன்

  • dino:

    இந்த உதவியை செய்த நல்ல உள்ளம் படைத்த வின்ரத்தூர் குடும்பங்களுக்கும் இந்த உதவியினை மேற்கொண்டா காலையிடிஉதவும் கரங்களுக்கு எனது நன்றிகள்.இந்த உதவியை மேற்கொண்டு அவர்களது வாழ்வாதாரத்தை உயர்த்தி ஒரு நல்ல வழி ஒன்றை ஏற்படுத்தி இருக்கின்றார்கள்.நல்லதொரு விஷயத்தை செய்திருக்கின்றீர்கள் .பாராட்டி வாழ்த்துகின்றோம்….இப்படி உங்கள் உதவிகளை மேன்மேலும் வளர்ச்சி அடைய ஆன்டவனை பிரார்த்தனை செய்கிறேன்.

    • dino:

      வாழ்க்கையில் மகிழ்ச்சி என்பது பிறரை மகிழ வைப்பதில்தான் இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

 

உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.