உங்கள் கருத்து

அறிவுப்புகள்

 

மீடியாக்கள்

கருத்துக் களம் -60

11391703_856406181097152_6313999294891198111_n

38,938..views

 • நானும் பெரியமனுசன் தா பா:

  பசுதுதொல் போர்த்திய புலிகள் இந்த வாக்கியம் என் உயிரிலும் மேலான புலிகளை கேவல படுத்துமபோல இருக்கு சரி விசயத்துக்கு வரேன் இப்ப நாங்க யார் எங்க படிப்பு என்ன கொழும்பில எல்லாம் பொய் படித்து இருக்குறோம் வித்தியாவின் கொலைக்கு அர்பட்டாம் செய்யும்போது படம் பிடித்து பேஷ்புக் ல போட்டு இருக்குறோம் அத எங்க ஆக்கள் ஷேர் பண்ணி இருந்தங்க அத நிங்க பாக்கேலையா மன்றத்துக எவளவு செய்யுறோம் உயிரை குடுதல்லவா உங்க மக்களுக்கு சேவை செய்யுறோம் இது உங்க கண்ணுக்கு தெரியேலைய

 • Uuravan:

  தீமை என்னன்னு கேட்டாக்கா புட்டுபுட்டு வைக்கலாம்.நன்மை எப்படி யோசிச்சு பார்த்தலும் இப்பவே கண்ணை கட்டுதே.என்ன நான் சொல்லுறது .ஊருக்கை பெரிய மனுசங்க கூடிப் போய் பொன்னாடை வியாபாரம் தான் சூடு பிடிச்சிருக்கு .பொன்னாட வியாபாரம் ஒரு தனிக்கடை துறந்தா சும்மா அதிரும்ல .

 • yalapanaththan:

  “குழந்தைகள் இல்லாத வீட்டில கிழவன் துள்ளி விளையாடுறது போல” நம்மட ஊரிலையும் அப்பிடித்தான் சில வெள்ளை வேட்டிக் கள்ளர் கொஞ்சப்பேர் தங்களை தாங்களே பெரிய மனிதர் என்று விளம்பரப் படுத்தித் திரிகினம்.. அதில் ஒரு நீளக்காட்சட்டைபோட்டுக் கொண்டு திரிகிற ஒருத்தரின் கல்வித்தராதரம் வெறும் எட்டாம் வகுப்புத்தான்… இவர்களெல்லாம் பெரியமனிதர்கள்..

  நம்ம ஊருக்கு ஒரு புடலங்காயும் இவங்களால இல்லை, ஒழுங்காய் இருக்கிற ஊரை கெடுத்துக் கொண்டு திரிகிறான்கள் .. ஆனால் அவர்கள் வீட்டிற்கு பல நன்மைகள் நடந்து கொண்டிருக்கு.. அது மட்டும் தெரியும்..

 • paamaran:

  பெரிய மனிதர்களாக நாம் உலாவக் கூடாது ,மற்றவர்கள் எம்மைப் பெரிய மனிதர்களாக மதிக்க வேண்டும் .அவர்தான் பெரிய மனிதர் .ஊரவன் கூறுவதுபோல் பொன்னாடை வியாபாரம் பெரிய மனிதரை உருவாக்குவதில்லை .அவர்களின் நடத்தையே அவர்களைப் பெரிய மனிதராக்கும் .இன்று எம் ஊரில் பெரிய மனிதர்கள் என்று கூறுவதற்கு யாரும் இல்லை .அன்று எம் ஊரில் இருந்த தலைவர்கள் (குறிப்பாக அமரர் நடேசன் அவர்கள் )தம்மை ஊருக்காக அர்ப்பணித்தவர்கள் .இன்று தம் குடும்பம் வாழவேண்டும் என்னும் ஒரே நோக்குடையவர்களே பெரிய மனிதர்களாக வர முயற்ச்சிக்கின்றனர் .இக்கருத்துக் களத்தை அமைத்துத் தந்த காலையடி இணையத்துக்கு என் நன்றிகள் .

  நியாயம் நீதி என்பது என்ன வெனத் தெரியாதவர்கள் பெரிய மனிதராக முடியாது .பழிவாங்கும் தன்மை ,அடுத்தவன் சொத்துக்கு ஆசைப் படுபவர்களுக்கு பெரிய மனிதர் ஆசை வரக்கூடாது .முதலில் ஊரைச் சமாதான முறையில் ஊரை மதித்து நடக்க வேண்டும் .ஊரில் பிரச்சனைகளை ஏற்ப்படுத்தி அவற்றில் குளிர் காய்பவன் பெரிய மனிதனாகிவிட முடியாது .தமது தகுதிக் கேற்ப பதவியை நாட வேண்டும் .அதுவும் தானாக வரவேண்டும் .பொன்னாடையை வாங்கி இன்னொருவர்மூலம் போட்டுக் கொள்வது பெரிய மனிதர் செயலல்ல .இவர்களை எப்படிப் பெரிய மனிதர்கள் என்று கூறமுடியும் ?இவர்கள் என்னை பொறுத்த வரையில் அப்பாவிகளின் தோளில் இருந்து சவாரி செய்யும் அவிவேக பூரண குருமாரே.

 • தலை:

  நான் இவர்களை ஒன்று கேட்கிறேன் , ஊர் பெரிய மனிதர்கள் என்று கூவிக் கொண்டு திரியும் உங்களுக்கு தெரியாதா , ஊரில் எந்த இடங்களில் கலாச்சார சீரழிவுகள் நடந்து கொண்டு இருக்குது என்றும், போதை விக்கினம் என்பதும் இந்தப் பெரிய மனிதர்கள் அறியாததா?சட்ட விரோதமான செயல்கள் நடப்பதை நன்கு அறிந்த இவர்கள் நினைத்தால் காவல்துறை உதவியுடன் இதை எல்லாம் இல்லாமலே ஒழித்து விடலாம். ஆனால் ,எல்லாம் தெரிந்தும் சீர்திருத்தம் செய்யாமல் இருப்பதற்கு காரணம் என்ன?ஏனெனில்
  இதனால் பாதிக்கபடுவது தங்களின் பிள்ளைகள் இல்லை தானே என்ற சுயநலம் .ஊர் நல்லாய் இருந்தால் தங்களை யாரும் மதிக்க மாட்டார்கள் என்ற நப்பாசை .நாலு இடங்களில் விளக்கேற்றி ,பொன்னாடை போட்டு படம் எடுக்க முடியாது என்ற ஆசை தான் இந்த இழி செயல்களை களைந்து, ஊரை சீர் படுத்த வேண்டும் என்ற எண்ணம் ஏற்படாமல் இருக்க காரணமா?
  வேலியே பயிரை மேய்வதாக கேள்வி ?நல்ல பெரிய மனுசங்கடா .நாலு பெரிய மனுசனுங்க இப்படி இருந்தா ஊரும் ,நாடும் உருப்பட்டிடும. தலை

 • கரிகாலன்:

  யாரப்பா ஊரில பெரிய மனிதர்கள் அப்புடி யாரவது இருந்தா சொல்லுங்கப்பா அதவிட இவங்களால நன்மை வேற கிடைக்குதா?? அப்புடி கிடைச்சிருந்தா எங்கட ஊர் எப்பவோ முன்னேறியிருக்கும் இவர்கள் ஒரு பத்து பேரா எங்கயாலும் கூட்டமா இருந்து அடுத்தவன்ட குறைகளையும் மத்தவங்கட சின்ன சின்ன பிரச்சனைகளை பத்தாக்கி நூறாக்கி கதைத்கிறவங்கள் இவங்க பெரிய மனிசரா??? அந்த கதையால நாலு குடும்பம் சண்ட பிடித்து ஐயோ! ஐயோ ! இவங்களால ஒரு நன்மையும் இல்ல. பெரிய மனிசர் என்று தாங்களா தினைத்து ஆணவத்தோட திரிபவர்கள் பெரிய மனிதர்கள் அல்ல அவங்களால நன்மையும் இல்ல

 • பெரியவன்:

  பெரிய மனிதர் என்றால் என்னப்பா அர்த்தம் .ஆக்கள் பெரிசா இருக்க வேணுமோ ?
  இல்லாட்டி ஊருக்குள்ள சில சில்மிஷ வேலையளை செய்துபோட்டு அமத்தி வாசிக்கிறவையோ
  பெரிய மனிசர் .ஏன் காணும் என்ர பேர்லயே பெரிசு என்று இருக்கு.அப்போ நானும் பெரியவனோ ?
  இல்லா நான் கொமுநிசு எனக்கு கோவில்,சடன்குகள்ளை நம்பிக்கையில்லை என்று சொன்னா சரியோ?

 • Mayuran:

  இவங்களை எல்லாம் பெரிய மனிசங்கள் என்று சொல்லுகிறதை விட பொன்னாடை களுக்கும் பூமலைகலுக்கு விளக்கேத்தவும் அலைகிறது தான் இவங்கள் இதில்லை என்னும் ஒரு விடையத்தை குறிப்பிட விரும்புகிறேன் இவங்களை கெடுத்து குட்டிசொரக்கினது புலத்தில் வாழுகிற நம்ம ஊர் காரங்கள் தான் ..நம்ம ஊருக்கை விளைந்து இருக்கும் விசசெடிகள் தான் இவங்கள் :::::

 • kaalaikkumaran:

  தங்கள் வீட்டில் தாங்கள் செய்யும் திருவிளையாடல்களை மறைக்க தியாகி வேஷம் .பூனை கண்ணை மூடிக்கொண்டு பால் குடித்தால் பூலோகம் எல்லாம் இருள் என நினைக்குமாம் .வெளியில் உள்ளவர்கள் ஏமாளிகள் என்ற நினைப்பு .இவர்கள் தான் தம்மைப் பெரியவர்கள் எனக் கூறுபவர்கள் .பூனை இல்லாத வீட்டுக்கு எலிகள் சன்னதம் போல் இவர்களின் சமூக சேவை .படித்தவர்களைக் கண்டால் இவர்களுக்கு ஒரு அலேர்ஜி .ஏனெனில் இவர்களிடம் அடிப்படைத் தராதரம் எவையும் இல்லை .நீளக் காற்சட்டைகள் மட்டுமே உண்டு .இவர்கள் தான் இன்று நம் ஊர்ப் பெரியவர்கள் .தந்தை செல்வா கூறியதுபோல் எம் ஊரை இனிக் “கடவுளே காக்க வேண்டும் “

 • akilan:

  யார் பெரிய மனிதன் ? யார் அவ்வாறு கூறி கொண்டு திரிவது ?
  அவர்கள் என்ன தவறு செய்து கொண்டு இருக்கிறார்கள்
  இதை யாரவது தெள்வு படுத்தி கூற முடிஜிம்ம ?

 • உஸ்...உஸ் ..ஸ்:

  உஸ் ..அதை மட்டும் கேட்கவேண்டாம் அகிலன் ,அவர்கள் பெரிய மனிசர் .

 • mayuran:

  தம்பி உஸ்,,உஸ் ,,ஸ்,,

  எப்வளவு பெரிய மனிசர் என்று கொஞ்சம் சொல்ல முடியும்மா நாங்களும் தெரிந்து கொள்ளஆசையாக இருக்கு ,, தயவுசெய்து சொல்லமுடியுமா ஐயோ சொல்லுங்கோ தம்பி சொல்லுங்கோ

 • பெரிய மனிதர்:

  நான் தான் உங்கள் ஊர் பெரிய மனிதன் பேசுகிறேன்.i நீங்க ஊரில் நடக்கும் பெரிய சிறிய விடயங்களுக்கு தலையாளியாக என்னைகூப்பிடலாம்.போர்வை போக்கலாம்.விளக்கும் கொளுத்தி விடுவான்.ஆனால் ஒண்டு சொல்லிக் கொள்ள விரும்புறேன்.ஊருக்கு மட்டும் உபதேசம் செய்வேன்.ஆனால் என் வழி தனி வழி.அதுகளை நீங்கள் கண்டும் காணாமலும் இருக்க வேணும்.என்ன அடுத்து ஆர் எனக்கு போர்வை போக்கிறது?

 • உஸ்...உஸ் ..ஸ்:

  அது வேலியே பயிரை மேயும் கிசுகிசு கதை .இன்னும் கொஞ்ச நாளில்லை வெளியிலை வரும் .அப்ப பாருங்கோ .அவசரப் படாதையுங்கோ .பெரிய மனிசரின் பெரும் தன்மையான கதை .அதுவும் ஒருவித தியாகம் .அவர்கள் செய்தால் அது தியாகம் .மலியும் பொது சந்தைக்கு வரும் .

 • Suthan:

  ஊர் பெரிய மனிசன் ஆகுறதுக்கு ஏதாவது தகுதிகள் தேவையா . படிப்புகள் எனக்கும் அந்த அசைவந்து வந்து விட்டது அது தான் கேக்கிறேன் யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கோ

  • உஸ்...உஸ் ..ஸ்:

   அண்ணா ,பெரிய மனிதராக அவ்வளவு லேசில் வரமுடியாது .8ம் வகுப்புப் படித்திருக்க வேண்டும் .அத்துடன் சட்டத் துறையினர் பயன்படுத்தும் சில தமிழ்ச் சொல் தெரிந்திருக்க வேண்டும் .நீட்டுக் காலச் சட்டை இருக்க வேண்டும் .ஏமாற்றக் கூடிய வல்லமை இருக்க வேண்டும் .இன்னும் பல .

   • Suthan:

    தம்பி எனக்கு இந்த ஆசை ரொம்ப நாளை இருக்கு ஊர் பெரிய மனிசனாக வேண்டும் எண்டு : ஆனால் . 8/ வகுப்பு பெஜில் ( 2 வரிசம் ) 8 வகுப்பிலையே இருந்து படித்தனன் சுத்துமாத்துக்கள் தெரிந்து இருக்க வேண்டுமோ அது எனக்கு பெரிசாய் தெரியாது போக போக பழகிவிடுவேன் .மற்றும் படி நிங்கள் கேட்ட எல்லா தகுதிகளும் இருக்கு என்றுதான் நினைக்கிறேன் :: தம்பி எப்படியாவது என்னை சேர்த்து விடுங்கோ உங்களை கையெடுத்துக் கும்புடுகிறேன் எதிர் பார்ப்பேன் !!!’m

 • RAVI:

  பெரிய மனிசன் ஆவதர்க்கு படிப்பு முக்கியமா ? என்னைப் பொறுத்தவரையில்
  பொம்பிள்ளைகள்ளன் ,கோழிக்கள்ளன்,ஏமாற்றுப்பேர்வழி,மாட்டுத்தோல் உள்ளவர்கள் பெரிய மனிதராக வர முடியும்

  • சுருளி:

   அண்ணா மாரே,உங்களுக்கு ஏன் இந்த விபரீத ஆசை ?இப்போது இங்கு பெரியவர்களாக இருப்பவர்கள் ரவி அண்ணா சொல்வது போலுள்ள ஆட்களே .ஆனால் அவர்களின் த்ரில்கள் மறைந்திருக்கும் .அவர்கள் மறைந்திருக்கும் இடமே பெரிவர் என்னும் வேடம் .அவர்கள் சீதனம் என்னும் பெயரில் தியாகம் செய்வார்கள் .இது உங்களால் முடியுமா ?முடிந்தால் நீங்களும் பெரியவன்தான் .

   • Suthan:

    தம்பி .சுருளி ரவி அண்ணை சொன்ன எல்லதகுதியும் எனக்கு இருக்கு .பெரிய மனிசன் ஆக:;:

    • RAVI:

     சுதன் நீங்கள் பெரிய மனிசன் ஆக நான் குறிப்பிட்ட எல்லாத் தகுதியும்
     உங்களிடம் இருந்தால் உடனடியாக நாலு பேரை தேடிப்பிடியுங்கள் ,அவர்கள்
     உங்களை விடக்கூடிய தகுதி இல்லாதவராக இருக்கவேண்டும் .நீங்கள் கூறும் வார்த்தையை வேதவாக்காக எடுக்கவேண்டும் .அப்படி தேடிப்பிடித்தால் அடுத்த கணமே சுதன் பெரிய மனிசன் .அதன் பின் நீங்கள்
     போடுவது தான் சட்டம் …..

 • பெரிய மனிதர்:

  எல்லோருக்கும் என்ன தகுதி இருந்தாலும் ஒரு முக்கிய தகுதி உங்களுக்கு இருந்தால்த் தான் நீங்கள் பெரிய மனுஷன் ஆக முயற்சிக்கலாம் தம்பிமாரே.அது தான் கொம்முநிசு .நான் ரெடி ,நீங்க ரெடி யா ?

 • nakkeeran:

  பெரியவனாவதர்க்குத் தேவையான தகுதிகள் ,

  இதோ அகர வரிசையில் !

  அன்பும் அறிவும் கொண்டவனே பெரியவன்
  ஆசையும் ஆணவமும் அற்றவனே பெரியவன்
  இனிமையும் இரக்கமும் உடையவனே பெரியவன்
  உண்மையும் உறுதியும் உள்ளவனே பெரியவன்
  ஊக்கமும் உழைப்பும் கொண்டவனே பெரியவன்
  எளிமையும் நல் எண்ணமும் கொண்டவனே பெரியவன்
  ஏளனமும் ஏச்சும் அற்றவனே பெரியவன்
  ஐயம் சிறிதும் இல்லாதான் பெரியவன்
  ஒறுத்தலும் ஒழுக்கமும் நிறைந்தவன் பெரியவன்
  ஓரவஞ்சகம் அற்றவன் பெரியவன்
  ஒளவியம் அற்ற ஒளடதம் பெரியவன் !

  நக்கீரன்

  • RAVI:

   நக்கீரன் எந்த காலகட்டத்தில் வாழ்கிறார் ?
   இன்றைய யாதார்த்தம் என்ன ?
   யார் ,யார் எங்கள் ஊரில் ,பெரிய மனிதர்கள் என
   தம்மைதாமே அடையாளபடுத்திக்கொண்டு அலைகிறான் .
   இவர்களுக்கு நீங்கள் கூறிய எந்த தகுதியும் கிடையாது.
   இவர்களை எம் ஊர் மக்கள் பெரிய மனிதராக ஏற்க்கவில்லையா ?
   ஏன்? எங்கள் நாட்டின் அரசியலை பாருங்கள் ,எத்தனை பேருக்கு
   நீங்கள் கூறிய தகுதி இருக்கு .இவர்களை நம் மக்கள் புள்ளடி போட்டு
   பெரிய மனிதர்கள் ஆக்கவில்லையா? ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது
   அதை போன்று ……

   • பெரியவன்:

    ரவி நாக்கை பிடுன்கிகிறது மாதிரி நாலு கேள்வி ,நறுக்கெண்டு கேட்டீர் .சூப்பர்

  • தருமி:

   நக்கீரா நீங்க சொல்லுறது எல்லாம் பெரிய மனிசருக்கு வேணும் தான்.அது தான் நாங்களும் எதிர்பார்க்கிறது .ஆனா உதிலை ஒண்டாவது எங்கட பெரிய மனிசர் எண்டு சொல்லித் திரியிறவையிடம் இருக்கோ எண்டது தானே எங்கட
   கேள்வி .நீங்க சொன்ன விசயங்களுக்கு நேரெதிரான விசயங்கள் தான் அவையிட்டை இருக்குது .என்ன நான் சொல்லுறது சரிதானே ?

 • Suthan:

  கடைசிவரைக்கும் எனக்கு இந்த பதவி கிடைக்காது போல புதுசு புதுசாய் எல்லாம் ரூல்ஸ் சுகள் கொண்டு வாரங்கள் கொம்முநிசு இருக்கவேனுமம் அதில்லை நான் இல்லையே , ரவி அண்ணையை நம்பிதானே இருந்தேன் இந்த பதவி கிடைக்கும் என்று ,மினிஸ்டர் பதவி கிடைத்தாலும், பெரிய மனிசன் பதவி கிடைக்கிறது சரியான கஸ்ரம் போல கிடக்கு ,எனக்கு ஒரு நல்ல யோசனை தோன்றுது , இப்ப இருக்கிற பெரிய மனிசர் மாரை போட்டு தள்ளினால் அந்த இடத்துக்கு சுலபமாய் வரல்லமோ ,,,

  • உஸ்...ஸ்:

   அண்ணைமாரே ,கோம்மினிசு ஒரு ரகம் .பெரியமனிதர் ஒரு ரகம் .கம்மிநிசுக்கும் படிச்சிருக்க வேணும் .இதுக்குப் படிப்புக் கிடிப்பு ஒன்றும் தேவை இல்லை .பாமரரை எம்மாற்றும் திறமை மட்டும் இருந்தால் போதும் .ஆனால் உங்கள் யாரையும் பெரியவனாக வர அவர்கள் விடவும் மாட்டார்கள் .எனவே அவர்களுக்குப் பிற் காலமே உங்கள் எண்ணம் .அதவரை பொறுங்கோ .

 • nakkeeran:

  வாசகர்களே ,நான் இங்கு புனைபெயரில் இருந்து எழுதுவதன் நோக்கம் .எமது சமூகத்தில் உள்ள குறைபாடுகளை நீக்குவதற்காகவே .எனவே நான் யாரையும் தனிப்படக் குறித்து எழுதவில்லை .பொதுவாக இப்படியான பிழைகள் விடுவோர் திருந்தி நடக்க இது ஒரு ஊன்றுகோலாக இருக்கலாம் .எனவே எனது கருத்துக்களை யாரும் தனிப்படத் தாக்குவதாக எண்ணவேண்டாம் .பொதுவாகப் பெரிய மனிதர்களுக்கு இருக்க வேண்டிய தன்மைகளையே குறிப்பிட்டேன் .அதுவும் இவற்றில் ஓரளவாது தவறு செய்பவர்களுக்கு நிவாரணமாக இருக்கலாமல்லவா .

  • RAVI:

   நக்கீரன் அவர்கள் அகர வரிசையில் கூறியது
   அத்தனையும் முத்து. ஆனால் இதை யாராவது கேட்பார்களா ?
   கேட்கமாட்டார்கள் .காரணம் ஈகோ .எங்கள் ஊரில் பெரிய மனிதர்கள்
   கூடியதால் ஈகோவும் கூடிவிட்டது .அவர் சொல்லி நான் கேட்பதா ?
   இந்த நேரத்தில் நக்கீரன் சிந்திய முத்து புறக்குடத்தில் ஊற்றிய நீர்போல்
   ஆகிவிடும்.தற்போது உள்ள நிலமை மாற வேண்டுமாயின் மரண பயம்
   ஏற்படவேண்டும்.அதர்க்கு மறுபடியும் வி.பு.புத்துயிர்பெற்று வந்து
   புரியவேண்டும்.இதில் சக தேவர்களும் ,சபாக்களும் அழியவேண்டும் .அப்போது தான் நமது ஊருக்கு விடிவு கிடைக்கும் .
   அப்படி ஒரு நிலைமை வராது விட்டால் கடவுளாலும் எமது ஊரை
   காப்பாற்ற முடியாது .

   • paamaran:

    ரவி அண்ணா ,

    “தவறித் தவறின் தவறன்று தவறறிந்து
    தவறுவதே தவறு ”

    இவர்கள் தாம் செய்வது தவறென்று தெரிந்து கொண்டும் தம் தலைமைப் பதவிக்காகவே தவறு செய்கிறார்கள் .எனவே இவர்களை மன்னிக்க முடியாது .மக்களே இவர்களைத் திருத்த வேண்டும் .

 • appavi:

  என்ன தான் நடக்குது எண்கள் உரில் எல்லோரும் பெரியவர் ஆஹா
  முயச்சி ….நல்லது அனால் ஒரு நாலும் எண்கள் உரில் சாதாரண மக்களை உள் வாங்கி அவர்களின் கருத்தை கேட்பது இல்லை
  தங்களின் விருப்புக்கு தான் எல்லா நிகழ்வுகளும் நடத்தி கொண்டு இருகிர்ணம் அப்போ எப்படி எமது சமுகம் முன்னேறும்
  எப்படி இவர்களை எல்லோரும் பெரியவர்கள் ?????
  தங்களின் காரியத்தை நிறைவு செய்ய
  முடனன்பிகை என்று அந்த மக்களை முட்டல் ஆக்குவது ‘

 • yalpanaththan:

  நன்றாக சொன்னீர்கள் ரவி,
  இதில் சக தேவர்களும் ,சபாக்களும் அழியவேண்டும் குறிப்பிட்டிர்கள்.. இதில் சில சக சங்கரர்களை தவற விட்டு விட்டேர்களே..

Leave a Reply

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

நினைவஞ்சலி

மேலும் →

சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

 

உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.