உங்கள் கருத்து

அறிவுப்புகள்

 

மீடியாக்கள்

< !-Currency Converter widget - HTML code - fx-rate.net -->< !-end of code-->

இளம் பெண் விதவைகள் பாலியல் துன்புறுத்தல்கள், துஷ்பிரயோகங்களுக்கு!

வடக்கில் இடம்பெற்ற போரால் விதவைகளான பெண்கள் தொழில் தேடும்போது பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகின்றனர் என்பதுடன் அதற்கு இசையவும் வைக்கப்படுகின்றனர் என ‘ஏ.எவ்.பி.’ செய்திச் சேவை அறிக்கையிட்டுள்ளது.

பாலியல் துன்புறுத்தல்கள், துஷ்பிரயோகங்களுக்கு உள்ளான பெண்களை மூலங்களாகக் கொண்டு ஏ.எவ்.பி. வெளியிட்டுள்ள அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

2009 ஆம் ஆண்டு ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து புதிய சமூகப் போராட்டம் ஒன்று ஆரம்பமாகியுள்ளது. போரால் பல இளம் பெண்கள் விதவைகளாகினர்.

இவர்கள் வேலைகள் தேடிச் செல்லும்போது பல துன்புறுத்தல்களுக்கு உள்ளாகின்றனர். சில சமயங்களில் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கும் உட்படுத்தப்படுகின்றனர் என சமூக சேவகர் ஒருவர் குறிப்பிட்டார்.

விதவைகளுக்கு எமது சமூகத்தில் உரிய இடம் வழங்கப்படுவதில்லை என சமூக சேவகரான கிறிஸ்டி மனோகரன் கவலையுடன் தெரிவித்தார். ஆண்கள் தங்கள் பாலியல் தேவைகளுக்காக தங்களை பயன்படுத்த முனைகின்றனர் என 34 வயதான விதவைப் பெண் ஒருவர் தன்னிடம் முறையிட்டார் எனவும் அவர் மேலும் கூறினார்.

பல விதவைப் பெண்களுக்கு நிதி மற்றும் உதவிகளை வழங்குவோர் இவற்றுக்குக் கைமாறாக அப்பெண்களுடன் பாலியல் உறவு கொள்ள வற்புறுத்துகின்றனர். அப்பெண்களின் அவல நிலையை அவர்களின் நண்பர்களும் உறவினர்களும்கூட பயன்படுத்த முனைகின்றனர் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

தவிர சில பெண்கள் பாலியல் தொழிலுக்கும் பயன்படுத்தப்படுகின்றனர் என முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஆனாலும் விதவைத் திருமணங்களை ஏற்காத சமூகத்தில் இப்போது மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன என மரியரோசா சிவராசன் என்ற சமூக சேவகி கருத்துத் தெரிவித்தார்.

நடந்த முரண்பாட்டினால் யாழ்ப்பாணத்தில் மட்டும் 27 ஆயிரம் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் உள்ளன என உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

indian_army_001

680..views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

 

உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.