உங்கள் கருத்து

அறிவுப்புகள்

 

மீடியாக்கள்

கருத்துக்களம்-67

12006181_909149412489495_3076584614698160787_n

937..views

 • தோழன்:

  ஒரு மனிதன் பூமியில் வாழும்போது அவன் செய்த நன்மைகள் தீமைகள் , பொறுத்தது யாவுமே,நாம் இறந்த பின்னும் , மக்களின் மனதில் வாழ்ந்தது கொண்டு தான் இருப்போம் ,அதுவே நாம் இந்த பூமியில் வாழ்ந்ததுக்கு உரிய அடையலாம் ஆகும்..இது என்னுடைய கருத்து இதில் தவறு இருந்தால் தாரழமை யாரும் விளக்கலாம் ,நன்றி

 • கரிகாலன்:

  ஒருவன் இருக்கிறன் கோடிக்கணக்கான மக்களின் மனதில் இபோவும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார் ,அவர் யார் என்று சொல்லுங்கோ பார்ப்போம் , அதுதான் அவர் விட்டுப்போன தடையம்

 • vinothiny pathmanathan:

  பணத்தையும், உணவையும் பதுக்கி வைத்து சுயநலத்தோடு வாழ்வது வாழ்வல்ல.எள் என்றாலும் ஏழாகப் பகிர்ந்து உண் என்பதே பொன்மொழி.அப்படி தனக்கு தேவையானவற்றை அளவுக்கு அதிகமாக வைத்துக் கொள்ளாமல், இல்லாதவர்களுக்கு பகிர்ந்து கொடுத்து அவர்களின் முகத்திலே தோன்றும் ஆனந்தத்தை கண்டு தானும் இன்புறுபவனே உண்மையில் சிறந்த மனிதன் . அப்படிப் பட்டவர்களே இறந்த பின்னாலும் மற்றவர்களின் உள்ளங்களிலே என்றுமே வாழ்ந்து கொண்டிருப்பார்கள் .

 • நல்லவன்:

  இது ஒரு சின்ன பிள்ளைய கேட்டாலே சொல்லுமே.
  ஒரு வீடு,கார்,பேங்க் இல்ல ஒரு 50 லட்சம் ,நகை ஒரு ஐம்பது பவுன் ..இதை விட வெரெஇயென்ன சான்று வேணும்.

 • maathavan:

  உயிருடன் இருக்கும்போது நாலுபேர் சொன்னபடி வாழ்ந்தால் அதுவே அவன் விட்டுச் சென்ற தடியாமாகும் .

 • appavi:

  பணம் பொருள் புகழ் இவை தான்

 • sivanathan:

  நாலுபேர் போற்றுவது போல் வாழுகிறது

  • நல்லவன்:

   எப்படி வாழ்ந்தால் நாலு பேர் போற்றுவார்கள் என நினைக்கிறீர்கள் அண்ணா?

   • nakkeeran:

    அண்ணா ,வாழும்போது உங்களை யாரும் திட்டக்கூடாது ,உங்கள் செயல் மற்றவர்களைப் பாதிக்கக் கூடாது .அப்போது உங்களை மற்றவர்கள் போற்றுவார்கள் .நாலுபேர் என்பது வேறுயாருமல்ல ,உங்களைக் கடைசியாகக் காவிக் கொண்டு செல்லும் நால்வரே .அவர்கள் திட்டாது வாழ்ந்தால் அதுவே போதும் .

    • நல்லவன்::

     இப்போ காவிக் கொண்டு போகத் தேவையில்லை.
     நாங்க கார் இல கொண்டு போவோம்.நாங்க இளையோர்கள் .

     • nakkeeran:

      அண்ணா ,ஒருவர் இறந்து கிடக்கும்போது அது சவம்
      சுடலை செல்லும்போது அது சிவம் !
      எனவே அதை கவ்ரவமாகக் கொண்டு போவதென்றால் சுமந்தே செல்ல வேண்டும் .நீங்கள் சொல்வது செத்த நாயைக் கொண்டு செல்வது போல் .

 • ஆ .த .குணத்திலகம்:

  நாம் இன்று வாழ்ந்து கொண்டிருப்பது நம் முன்னோரான ஞானிகளும் அறிஞர்களும் விட்டுச் சென்ற நல்லறிவு நூல்களும் அவர்கள் வாழ்ந்து காட்டிய முறைகளும் சொல்லிவைத்த அறிவுரைகளின்படியே .ஆனாலும் இன்றைய இளையோர் தமக்கென ஒரு பாதையை அமைத்துத் தவறான வழியில் செல்வது வேதனைக்குரியது .எனவே நாம் விட்டுச் செல்ல வேண்டிய தடையங்கள் எமது வருங்கால இளையோர் நல்வாழ்வு பெறுவதற்கான அறிவுரைகளே என் கருத்தாகும் .

  • raku:

   வணக்கம் ஐயா நீண்ட இடைவேளைக்கு பிறகு வந்தது இருக்கிறியள் நல்வரவு
   நிங்கள் சொல்லுகிற காலங்கள் எல்லாம் மலை எரிபோய் விட்டது ,இன்றைய இளையோர் எல்லோரும் தங்களின் வாழ்க்கையை தாங்களே முடிவு செய்கிறங்கள்,, நல்லதாய் இருந்தால் தட்டிகொடுப்போம் , கெட்ட தாய் இருந்தால் முடிந்த அளவுக்கு தட்டிக் கெப்பொம்,இதை தவற எங்களால் எதையும் பண்ண முடியாது ,

   • KUNATHTHILAKAM:

    தம்பி ,ரகு நான் என்னுடைய வயதுக்குத் தாக்கிய அறிவில் சொன்னேன் .மருந்துகள் இருவகையில் இருக்கின்றன .ஒன்று நோய் துன்பங்களிலிருந்து விடுதலை பெற்று சுக வாழ்வு வாழ்வதற்கு .மற்றது குறுக்காலை அழிந்து போகக் குடிக்கிற விஷ மருந்து .ஆனால் நான் சொல்வது முதல் மருந்து .நீர் அடுத்த மருந்து குடிப்பதென்றால் அது உன் விருப்பம் .காவோலைகள் கீழிருக்கும் போது மேலிருக்கும் குருத்தோலைகள் தம் வருங்காலம் அறியாது திமிருடன் சிரிப்பது வழமைதானே .

  • vinothiny pathmanathan:

   எல்லாக் காலங்களிலும் நல்லவர்களும் கெட்டவர்களும் வாழ்ந்திருக்கிறார்கள், இப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கிறாகள்.ஆகவே இங்கே நல்ல விடயங்களை தெரிவு செய்து நம் வாழ்வை நன்றாக அமைத்துக் கொள்வது என்பது அவரவரைப் பொறுத்தது.அந்த வகையில் நம் வாழ்க்கை நம் கையிலே என்பதுவே உண்மை.

 • sivanathan:

  உங்கள் பெயருக்கு எர்த்த மாதிரி வாழ்ந்தாலே நல்லவன்: ,உங்களை நாலு பேர்
  போற்றுவார்கள்,,, அப்போ நிங்கள் நல்லவன கெட்டவன

 • இந்த உலகில் நல்லவனாக வாழ வேண்டும் என்றுதான் நம்மில் பலர் ஆசைபடுகின்றோம்.ஆனால் என்னை பொறுத்தவரையில் இந்த உலகில் நல்லவனாய் வாழ்வதும் கஷ்டம் கெட்டவனாய் வாழ்வதும் கஷ்டம் ரெண்டும் கலந்து வாழ்வது தான் வாழ்க்கை.ஏனென்றால் நல்லவனாய் இருந்தால்அவர்களை கொடூரமாக நசுக்குகின்றார்கள். நடுநிலையாய் இருந்தால் அவர்களைப்பார்த்து உதடு விரியாமல் சிரிக்கின்றார்கள். தீயவனாய் இருந்தால் ஊர்கூடி தூற்றுகி றார்கள். இன்றைய உலகத்தின் பார்வை.இதுதான்..

 • நல்லவன்:

  அப்போ நக்கீரன் உங்க ஊரில செத்த நாயை கார் பிடிச்சே கொண்டு போய் அடக்கம் செய்யிறியள்?உன்னானை உண்மையை சொல்லுங்கோ ஒருக்கா.

 • appavi:

  பணம் இல்லாதவனை எவன் கண்னுக்கு தெரியும் …….
  யார்ராவது சொல்லுங்கள் >????
  பணம் பணம் பணம் தான்

 • nakkeeran:

  அப்பாவியே ,உமக்கு தமிழ் விளங்க வில்லை என நினைக்கிறேன் .செத்தனாய் ஒரு அனாதைப் பிணம் .நீர் சொல்லும் காரில் கொண்டு போகும் பிணமும் காவ ஆட்களில்லாத அனாதைப் பிணம்தான் .இது கூட உமக்கு விளங்கவில்லை .நானென்ன செய்ய நீதான் அப்பாவியாச்சே !

  • நல்லவன்::

   நக்கீரன் அவர்களே, இந்த உலகிலே தான் அனாதையாக பிறக்க வேண்டும் என யாரும் வரம் வேண்டி வருவதில்லை .யாருக்கும் எப்போதும் அந்த நிலை வரலாம் .இங்கு யாருமே அனாதைகள் அல்லர் .எல்லோரும் கடவுளின் குழந்தைகள் .

   • nakkeeran:

    இந்த உலகில் அனாதையாக யாரும் பிறப்பதில்லை என்ற உண்மையைக் கூறிய நல்லவனுக்கு நன்றி .அனாதையாய் யாரும் பிறக்க முடியாதென்பதே உண்மை .காரணம் பிறக்கும் போது ஒரு தாய் வயிற்றிலேயே பிறக்கிறான் .எனவே அவன் அநாதை இல்லை .பின்னரே அநாதை ஆக்கப் படுகிறான் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

Browse நினைவஞ்சலி

மேலும் →

சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

 

உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.